From jaybee@... Wed Mar 13 03:53:10 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 13 Mar 2002 11:53:10 -0000
Received: (qmail 12571 invoked from network); 13 Mar 2002 11:53:10 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 13 Mar 2002 11:53:10 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 13 Mar 2002 11:53:09 -0000
Received: from user (sp-103-92.tm.net.my [210.186.103.92]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GSW00KHVUCI76@...> for agathiyar@yahoogroups.com; Wed, 13 Mar 2002 19:53:09 +0800 (SGT)
Date: Wed, 13 Mar 2002 19:56:32 +0800
Subject: Re: [agathiyar]Killer Instint
In-reply-to:
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: Los Angeles Ram
Message-id: <3.0.3.32.20020313195632.0076d264@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References:
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16647


கொல்வதற்கு Killer instinct வேண்டுமா? அல்லது
கொல்பவர்களெல்லாருமே கில்லர் இன்ஸ்ட்டிங்க்ட் கொண்டவர்களா?
அல்லது கில்லர் இன்ஸ்ட்டிங்க்ட் உள்ளவர்கள்தாம் கொல்வார்களா?

ஒரு பன்னிரண்டாண்டுகள் பின்னோக்கிச்செல்வோம்........

அலோர்ஸ்டார் என்பது கெடா மாநிலத்தின் தலைநகரம்.
அவ்வூரின் பெரிய மருத்துவமனையின் Accident and Emergency,
Out-Patient Department- நிர்வாக மருத்துவ அதிகாரியாக இருந்த
காலம்.
அப்போதெல்லாம் மிகக் கடுமையான மருத்துவர் பற்றாக்குறை.
அரசியல் காரணங்களாலும் உண்மையான தேவையின் காரணத்தாலும்
பல சிறிய, சில பெரிய புதிய மருத்துவமனைகளையும், பல சுகாதார
நிலையங்களையும் ஏற்படுத்திவந்த நேரம். பல மருத்துவமனைகளில்
புதிய யூனிட்டுகளை ஏற்படுத்திக்கொண்டும் இருந்தனர். மேல்நிலைப்
பயிற்சி, மேற்படிப்பு ஆகியவற்றுக்காகப் பல மருத்துவர்களை
அனுப்பிக்கொண்டிருந்தார்கள். இதுபோக, வெளியில் சொந்தத் தொழில்
பார்ப்பதற்காக பெருமளவில் டாக்டர்கள் வெளியேறிக்கொண்டிருந்தனர்.
இந்நிலை அதற்கு முன்னாலேயே பத்துப்பதினைந்து ஆண்டுகளாகவே இருந்துகொண்டிருந்ததுதான். ஆகவே
பழக்கமாகிப்போய்விட்டதொன்று.

என்னுடைய வேலை - ஆட்களை மேய்ப்பது, வேலைகளை
மேற்பார்ப்பது, நோயாளிகளின் குறைகளை விசாரிப்பது, புள்ளிவிபரங்கள்,
லாப்பூரான் எனப்படும் அறிக்கைகள் தயாரிப்பு, இன்னோரன்னவேலைகள்.
ஆனால் அதைமட்டுமா செய்துகொண்டிருக்கமுடிந்தது?
அவுட்பேஷண்டில் மூன்று அல்லது நான்கு பேர் மருத்துவர்கள்
இருந்தாலேயே பெரிய விஷயம். அதற்கெல்லாம் போன ஜன்மத்தில்
ஏதாவது குரங்குக்கு வாலில் சுளுக்கு ஏற்பட்டு, அதற்கு splint போட்டுக்
கட்டுப்போட்டு வாழைப்பழம் வாங்கிக் கொடுத்திருக்கவேண்டும்.
இந்த மாதிரி நிலைமைகளையெல்லாம்எத்தனை ஆண்டுகள்
பார்த்தாச்சு? சமாளிக்கத்தானே செய்திருக்கிறோம்?

ஆகவே அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்கள், முதியவர்கள்,
மருத்துவமனை ஊழியர்கள், அவர்தம் சொந்தம் சுரத்து, சுற்றம் நட்பு
உற்றார் உறவினர் ஊரார் போன்றவர்களுக்கு நானும் என்னுடைய
அறையில் இருந்தவாறு வைத்தியம் செய்துவந்தேன். இந்த குரூப்
இருக்கிறதே - இது ஒரு தினுசானது. ஏதாவது கொஞ்சம் ஏடாகூடமாக
ஏறுமாறாகத் தோன்றியதோ அவ்வளவுதான். இணுங்கி இக்கெடுத்துவிட்டு
மறுவேலை பார்ப்பார்கள். பெரிய பெரிய கொம்பனையெல்லாம்
கொம்பையே முறித்துக் கையில் கொடுத்து அனுப்பிவிடுவார்கள்.
ஆகையால்தான் நானே அவர்களையெல்லாம் வலிந்து தடுத்தாட்
கொண்டு எடுத்துக்கொண்டேன்.
ஒவ்வொரு நாளும் காலை -00 மணிக்கு கிலினிக்கைத்
தொடங்குவேன். முதலில் 'எம்ஸீமியா' கேஸ்களை வகைப்படுத்திக்
கொள்வேன். Medical leave, medical certificate வாங்க வருகிறவர்கள்
நிறையப்பேர் இருப்பார்கள். அவர்கள்தாம் 'கரச்சல் கேஸா'க இருப்பார்கள்.
அதற்குத்தான் 'எம்ஸீமியா' என்று பெயர் கொடுத்திருந்தேன். பின்னாட்களில்
இப்பெயர் நாடு முழுமையும் பரவிவிட்டது. ஆகவே அவர்களை முதலில்
அனுப்பிவிடுவேன். அவசரக் கேஸ்கள் என்னிடம் அங்கு வரமாட்டா.
அருகிலேயே இருக்கும் எமெர்ஜென்ஸிப் பகுதிக்குப் போய்விடும். பிறகு
வரிசையாகக் கேஸ் பார்ப்பது. 10-30க்கு மேல்தான் நிறுத்துவது. ஒரே ஒரு
கப் ஹார்லிக்ஸ். பிறகு 12-45 வரை கேஸ். சாப்பாடு. மீண்டும் 2-00 மணிக்கு
கேஸ் பார்ப்பது. நியாயமாக 4-00 மணிக்கு'நெகாராக்கூ...' பாடவேண்டும்
(தேசிய கீதம்). ஆனால் ஒருநாளும் அந்த நேரத்தில் வீடு திரும்ப
முடிந்ததில்லை.
இந்தச் சூழ்நிலையில்தான் அந்த மனிதனைச் சந்தித்தேன்.....

அன்புடன்

ஜெயபாரதி

============================