From cbose@... Wed Mar 13 06:17:02 2002
Return-Path:
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 13 Mar 2002 14:17:02 -0000
Received: (qmail 91843 invoked from network); 13 Mar 2002 14:17:02 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 13 Mar 2002 14:17:02 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 13 Mar 2002 14:17:01 -0000
Received: from vsnl (unknown [203.199.230.201]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id A01394B31 for ; Wed, 13 Mar 2002 19:52:37 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20020312233906.007abaa0@...>
X-Sender: cbose@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Tue, 12 Mar 2002 23:39:06 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: ThirumuRai Series - 69
In-Reply-To: <00aa01c1c926$b7a0e640$a1bd1b42@...>
References:
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose"
X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 16650

அன்பு சுவாமிநாதன்,

கும்பகோணத்திலே இன்றும் டயமண்ட் தியேட்டர் (உரிமையாளர் தஞ்சை பரிசுத்தம் ஹோட்டல் உரிமையாளர்
பரிசுத்த நாடார்) என்று ஒன்று உண்டு. அநேகமாக தமிழகத்தின் முன்னோடி தியேட்டர்களில் இதுவும் ஒன்று.
அந்த காலத்தில் ஒலி இல்லாத படங்களையும் இதில் ஓட்டினார்கள். படத்தைப் பார்த்து கதை சொல்ல ஒரு ஆள்
சம்பளத்திற்கு உண்டு. அவர் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு திரையில் ஓடும் படத்தைப் பார்த்து கதை
சொல்வார்.

" அட இங்க பாருய்யா நம்ம கதாநாயக இளவரசன் குதிரையில அவளைத் தூக்கிட்டுசிட்டாப் பறக்கிறாரு.
டகட டகட டகட "

இப்படிப் போகும். இந்த கதை சொல்பவரின் பேச்சு சாதுர்யத்தை வைத்துத் தான் மக்கள் அதாவது ரசிகர்கள்
கூடுவார்களாம். அதனால் இவருக்கு ரீடெய்னர்ஷிப் கொடுத்து தக்க வைத்துக் கொள்ள தியேட்டர்காரர்களுக்குள்
போட்டி.

ஒரே படத்தின் ரீல்களை வாங்கி இரண்டு தியேட்டர்களில் அரை மணி நேரம் முன்னும் பின்னுமாக படத்தைத்
தொடங்கி ரீல்களை சைக்கிள் பாய் மூலம் அங்கும் இங்கும் கொடுத்தனுப்பி படம் போட்டதும் கும்பகோணத்தில்தான்.

ஒரு படம் கடைசி நாள் என்றால் கதாநாயகரின் ரசிகர்கள் பட்டாளம் இரவு இரண்டாம் காட்சிக்குக் கூடி
விடும். மேனேஜருக்கும் ஆப்பரேட்டருக்கும்துட்டை வெட்டி தங்களுக்குப் பிடித்த காட்சிகளை ஒன்ஸ் மோர் போட
வைத்து பார்த்த காலமும் உண்டு.

வெகு நாட்களுக்குப் பின் மனைவியின் கட்டாயத்தில் பேரில் இதே போல கடைசி நாள் கடைசி காட்சிக்கு
கமலஹாசன் ஆடல்கலை வல்லவனாக நடித்தபடத்திற்குப் ( பெயர் சலங்கை ஒலியோ!) போனேன்.
இடைவேளைக்கு முன் ஒரு காட்சி மிக நன்றாக இருந்தது என்று அங்கு வந்திருந்த என் மாணவர்களிடம் சொல்ல
அவர்கள் எனக்காக மேனேஜரிடம் பரிந்து பேசி அந்த காட்சியைப் போடச் சொன்னது தனிக் கதை.

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை.


>சில காட்சிகள் மட்டும் கலரில் எடுக்கப்பட்ட
>தமிழ்ப் படங்களும் உண்டு.
>
>கணவனே கண்கண்ட தெய்வம் படத்தில் சில
>ரீல்கள் கேவா கலரில்..
>
>பிரபல வில்லன் நடிகர் டி.எஸ். பாலய்யா
>கதாநாயகனாக நடித்து "வெறும் பேச்சல்ல"
>என்ற தமிழ்ப்படத்தை எடுத்தார். படம் தோல்வி.
>ஒரு காதல் பாடல் காட்சி கலரில்.