From anbudan ananth@... Wed Mar 13 18:26:20 2002
Return-Path:
X-Sender: anbudan ananth@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 14 Mar 2002 02:26:20 -0000
Received: (qmail 44906 invoked from network); 14 Mar 2002 02:25:24 -0000
Received: from unknown (216.115.97.172) by m2.grp.snv.yahoo.com with QMQP; 14 Mar 2002 02:25:24 -0000
Received: from unknown (HELO n1.groups.yahoo.com) (216.115.96.51) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 14 Mar 2002 02:25:23 -0000
Received: from [216.115.96.177] by n1.groups.yahoo.com with NNFMP; 14 Mar 2002 02:24:16 -0000
Date: Thu, 14 Mar 2002 02:24:09 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: pathigam on Sri Kapilaranyeswarar of Malibu hills
Message-ID:
In-Reply-To: <00ad01c1cadf$80c9a160$a1bd1b42@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1691
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "anbudan ananth"
X-Originating-IP: 64.228.130.121
X-Yahoo-Group-Post: member; u=35116172
X-Yahoo-Profile: anbudan ananth
X-Yahoo-Message-Num: 16660

சுவாமிநாதன்: மலிபு மலைக்கோவில் சிவபெருமானையும் அம்பிகையையும் பற்றி
யாழ்ப்பாணக் கவிஞர் பண்டிதர் கந்தையா அவர்களின் மிகவும் அழகான விருத்தத் துதியை
இட்டதற்கு நன்றி. மூன்று வாரங்களுக்கு முன்புதான் முதன்முறையாக அக்கோவி
லையும் அத்தோடு உங்களையும், எல்லே ராமையும் பார்க்கும் வாய்ப்புக்கி
ட்டியது. அனைத்துமே இனிமையான அனுபவங்கள்.
அன்புடன் அனந்தன்

--- In agathiyar@y..., "Narayan Swaminathan"
wrote:
> அமெரிக்காவில் உள்ள கலிபோர்நியா
> மானிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில்,
> மலிபு மாலைச்சாரல் அருகே
> உள்ள சிவனுக்கு கபிலாரண்யேஸ்வரர் என்ற பெயர்,
> அம்பாள் கற்பகாம்பிகை.
>
> யாழ்ப்பாணம், ஏழாலை பண்டிதர் மு. கந்தையா அவர்கள்
> 2001 ல் இயற்றிய கலிபோர்னியா மலிபு மலைச்சாரல் மேவும்
> கற்பகாம்பிகை உடனுறை கபிலாரண்யேஸ்வரர் தோத்திரப்
> பதிகம் பின் வருமாறு.
>
> ('நிரைகழ லரவம் சிலம்பொலி யலம்ப' எனத்தொடங்கும்
> திருஞான சம்பந்தர் அருளிய திரிகோணமலைப் பதிகம்
> போல இதுவும் புறநீர்மைப் பண்ணில் அமைந்தது.)
>
> உலகிதன் முதலாய் உயிர்களுக் குயிராய்
> உம்பரும் இம்பரும் ஏத்தக்
> கலிகெடு கடலார் கலிபோனி யாசேர்
> காதல்செய் அடியர்கண் விளக்காய்
> மலிபுநன் மலைசார் மலர்ப்பொழில் நடுவண்
> மாதுகற் பாம்பிகை உடனாம்
> ஒலிபுனற் கங்கைச் சடையாய் அடியேன்
> ஊழ்வினைத் துயர்தவிர்த் தருளே.
>
> ......................
> தேனுமின் னமிழ்தமு மாமெனத் தேக்கத்
> தித்திக்கும் நின்னருள் மகிமை
> ஞானமெய்ப் புலவோர் நவில்வுறக் கேட்டே
> நானுமுன் அருள்விழைந் தடைந்தேன்
> நானுமவ் வருளுக் கருகதை யுடையேன்
> நாமஅஞ் செழுத்துணர் வொழியேன்
> ஊனமென் னுயிரும் ஒழுங்குற வாட்டும்
> உறுபிணி தவிர்த்தரு ளாயே.