From jaybee@... Thu Mar 14 01:28:11 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 14 Mar 2002 09:28:10 -0000
Received: (qmail 34845 invoked from network); 14 Mar 2002 09:28:10 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 14 Mar 2002 09:28:10 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 14 Mar 2002 09:28:09 -0000
Received: from user (sp-103-27.tm.net.my [210.186.103.27]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GSY00LIZI3JLT@...> for agathiyar@yahoogroups.com; Thu, 14 Mar 2002 17:23:47 +0800 (SGT)
Date: Thu, 14 Mar 2002 17:27:13 +0800
Subject: Re: [agathiyar]Killer Instint
In-reply-to: <3.0.3.32.20020313195632.0076d264@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: sarabeswar , Los Angeles Ram , Madhurabarathi
Message-id: <3.0.3.32.20020314172713.0075b798@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References:
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16665

At 07:56 PM 3/13/02 +0800, JayBee wrote:

ஒவ்வொரு நாளும் காலை 8-00 மணிக்கு கிலினிக்கைத்
>தொடங்குவேன்.
>பிறகு
>வரிசையாகக் கேஸ் பார்ப்பது. 10-30க்கு மேல்தான் நிறுத்துவது. ஒரே ஒரு
>கப் ஹார்லிக்ஸ். பிறகு 12-45 வரை கேஸ். சாப்பாடு. மீண்டும் 2-00 மணிக்கு
>கேஸ் பார்ப்பது. நியாயமாக 4-00 மணிக்கு 'நெகாராக்கூ...' பாடவேண்டும்
>(தேசிய கீதம்). ஆனால் ஒருநாளும் அந்த நேரத்தில் வீடு திரும்ப
>முடிந்ததில்லை.
> இந்தச் சூழ்நிலையில்தான் அந்த மனிதனைச் சந்தித்தேன்.....
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி

ஒருநாளைக்கு 120-இலிருந்து 140 கேஸ்கள் வரும். அதிக
பட்சம் 182 பேர். ஒரே நாளில். ஒரே ஆளாகத்தான் பார்ப்பேன்.
அப்போது அதெல்லாம் முடிந்தது. அதற்கு மேலும் முடிந்தது.
அத்தனை பேர்களிலும் சில கேஸ்களை நான் நன்கு ஞாபகம்
வைத்திருக்கிறேன். அந்த சிலரில் அவனும் ஒருவன்.

சிற்சில முறைகளே அவன் என்னுடைய கிலினிக்குக்கு
வந்திருக்கிறான். ஆனால் அவனுடைய out-patient card கனமானதாகத்
தானிருந்தது. நான் அங்கு வருமுன்னர்
பலமுறைகள் அங்கு வந்திருக்கிறான்.
காலையில் நடத்தும் கிலினிக்குக்கே அவன் வந்தான்.
ஒல்லியான உடற்கட்டு. ஒரு காலத்தில் நல்ல உரமேறி
முறுக்கேறிய உடலாக இருந்திருக்கவேண்டும்.. ஆனால் ஏதோ
ஒரு வித தளர்ச்சி. குனிந்த நடை. கூசிய பார்வை. பேசும்போது
கண்களைப் பார்த்துப் பேசமாட்டான். மெதுவான குரல். சொற்கள்
அரையும் குறையுமாக வரும்.

ஒருநாள்.
வழக்கமாக வாங்கிக்கொள்ளும் மருந்தைஎழுதிவாங்கிக்
கொண்டான்.
எதற்காகவோ தயங்கினான்.
"ஏதேனும் கேட்கவேண்டுமா?", நானே கேட்டேன்.
"யா, துவான்".
"கொஞ்சம் வெளியில் காத்திரு. இந்தக்கூட்டத்தையெல்லாம்
அனுப்பிவிட்டு உன்னுடன் பேசுகிறேன்."
நர்ஸ் மீனாம்பாள் ஓரிடத்தில் அவனை அமரச்செய்தார்.
12-30 ஆகிவிட்டது. கூப்பிட்டேன். வந்து உட்கார்ந்தான்.
மீண்டும் நானே ஆரம்பித்தேன். ஏனெனில் மனதில்
வைத்திருப்பதை வெளியில் சொல்ல இப்படித் தயங்குபவர்களிடம்
நாமே பேச்சை ஆரம்பிப்பதே நல்லது.
கொஞ்சம் கொஞ்சமாகத் தயங்கித் தயங்கித் தன்
பிரச்னையைச் சொன்னான்.

"துவான், நான் ஜெயிலில் வேலை செய்தவன். ஆரம்பத்தில்
அலோர்ஸ்டார் ஜெயில் போன்ற சில இடங்களில் வேலை பார்த்தேன்.
பின்னர் குவாலாலும்பூர் ஜெயிலுக்கு மாற்றிவிட்டார்கள். அங்கு
கைதிகளைத் தூக்குப்போடும் வேலையைக் கொடுத்திருந்தார்கள்.
அதனைத்தான் செய்துகொண்டிருந்தேன்.
தூக்குப்போடும் நாளைக்கு முன்னாலேயே தூக்குமேடை
ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பலமுறை பரிசோதனை செய்வது;
தூக்கில் தொங்கவேண்டியவர்களை அழைத்து வந்ததும் அவர்களைத்
தூக்கில் போடத்தயார் செய்வது; கடைசியில் அந்த நெம்புகோலை
இழுப்பது போன்ற வேலையெல்லாம் மிகவும் பழக்கமாகிப்போனவை.
நூற்றுக்கணக்கானவர்களைத் தூக்குப்போட்டிருக்கிறேன். அப்போது
அதெல்லாம் ஒன்றும் செய்யவில்லை. ஆப்ஷனல் ரிட்டயர்மெண்ட்
வாங்கிக்கொண்டேன். ஆனால் ரிட்டயர் ஆனதிலிருந்து மனநிம்மதியேயில்லை.
இரவில் தூங்கமுடியவில்லை. நான் தூக்குப்போட்ட மனிதர்களின்
முகங்களும் உருவங்களும் வருகின்றன. அந்தக் கடைசி நேரத்தில்
சிலர் பரிதாபமாகப் பார்ப்பார்கள். சிலர் அரற்றுவார்கள். சிலர் அழுவார்கள்.
சிலர் வழிபாடு செய்வார்கள். அத்தனையும் மனதிற்கு வருகிறது".
இப்படியே முக்கால் மணி நேரம் பேசினான். நர்ஸை சாப்பிடப்
போகச் சொல்லிவிட்டு அவனுடைய கதையைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
நோயாளியைப் பேசவிட்டுவிட்டு நாம் கேட்டுக்கொண்டிருப்பது சிகிச்சையின்
முக்கிய அம்சங்களில் ஒன்று. சிலசமயங்களில் அது ஒன்றே போதுமானதாக
இருந்திருக்கிறது.

பிறகு நான் அவனிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

"அவர்கள் இறந்ததற்கு நீ காரணனில்லை.

அவர்களுடைய குற்றம் முதலியவை; பிடித்துவைத்த போலீஸ்;
வாதாடிய ப்ராசிக்யூட்டர்; தீர்ப்புச் சொல்லிய நீதிபதி; அந்தத்
தண்டனையை நிறைவேற்ற ஏற்பாடு செய்ததலைமை வார்டர்;
உனக்கு அதனைச் செய்யுமாறு உத்தரவிட்டஅதிகாரி; உன்னை
மேற்பார்வை செய்யும் உன்னுடைய நேரடி மேலதிகாரி. இப்படிப்
பல விஷயங்கள் அங்கே சம்பந்தப்படுகின்றன.

நீயாக உன் மனத்தில் நினைத்து அவனைத் தூக்குப்போட
உன்னால் முடியுமா? அதற்குரிய காரணமோ, அதிகாரமோ, வலுவோ,
வசதியோ உன்னிடம் இருக்கிறதா? அப்படி நீயாகச் செய்தால் அது
கொலைக்குற்றம் அல்லவா? ஆட்களைத் தூக்குப்போட நீ சம்பளம்
அல்லவா வாங்கிக்கொண்டிருக்கிறாய்?"

"யா துவான். அலவன்ஸும் உண்டு. ஒவ்வொரு தூக்குக்கேஸுக்கும்
அலவன்ஸ் கொடுப்பார்கள்."
"ஆகவே சம்பளம், அலவன்ஸ் எல்லாமே வாங்கிக்கொண்டு
தூக்குப்போடுகிறாய். சரி, இப்போது நான் உன்னிடம் கேள்வி கேட்கிறேன்.

நீ ஏதாவது காரணம் சொல்லித் தூக்குப்போடாமலோ,
அல்லது சரியாகத் தூக்குப்போடாமலோ இருக்கமுடியுமா?"

"அதெப்படி முடியும் துவான்? திண்டாக்கான்தாத்தாத்தெர்த்திப்
(disciplinary action) எடுப்பார்களே!"

"தெரிகிறதல்லவா? அப்படியானால் இத்தனை நாட்களாக நீ
உன்னுடைய செஞ்சோற்றுக்கடனைக் கழித்துக் கொண்டிருந்தாய்.
மாக்கான் காஜி(makan gaji). அப்படிதானே?"
"ஆமாம் துவான். செமெர்லாங்க்(excellent service)பத்திரம்கூட
வாங்கியிருக்கிறேன்."
"தாஹ்னியா. இதிலிருந்து தெரிவது என்ன? ஒருவனைத்
தூக்கில் போடுவது உன் அதிகாரம் இல்லை. கடமை மட்டுமே.
உன் கடமையை மட்டுமே நீ செய்தாய். தூக்கில் செத்தவர்கள்
உனக்கு உறவா? தெரிந்தவர்களா? அல்லது ஏதாகிலும் ஒரு வகையில்
அவர்களுக்குக் கடமைப் பட்ட்ருக்கிறாயா.அதற்கு முன்னர்தான்
அவர்களைப் பார்த்துத்தான் இருக்கிறாயா? அவர்களைத் தூக்கில்
போட ஏதாவது சொந்தக் காரணமாவது ஏதும் உண்டா? எதுவுமே
கிடையாது அல்லவா? யாரோ செய்த குற்றம், யாரோ கொடுத்த
தண்டனை, யாரோ கொடுத்த உத்தரவு. நீநிறைவேற்றுகிறாய்."

"இன்னொன்றும் உண்டு. மனிதர்களின் தக்திர்(taqdir)
என்பது ஒன்று இருக்கிறது. அத்துடன் வாழ்வு சாவு முதலியவற்றுக்கு
எல்லாமே துஹான்(இறைவன்) அல்லவா அதிகாரி? அவன்
இட்டதுதானே தக்திர், நஸீப் எல்லாமே?"

"உன்னைப் பொறுத்தவரைக்கும் நீ தூக்கில் போட்ட அந்த
மனிதனும், அதற்கு முதல்நாள் தூக்குமேடையைச் சித்தப்படுத்தும்போது
ஒத்திகை பார்த்த டம்மியும்(dummy) உனக்கு ஒன்றுதான்".
"கடந்த முக்கால் மணி நேரமாக 'நான் தூக்கில் போட்ட ஆள்',
என்று அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருந்தாய்".
"இப்போது சொல். பெரித்தாவ் ஸாய ஸெக்காராங்க்.
இஞ்ச்சே தெலாஹ் பூனு ஓராங்-க, அத்தாவ்புன் யூ காந்தோங்க்
ஓராங் சாஹாஜ? நீ மனிதர்களைக் கொன்றாயா அல்லது தூக்கில்
மட்டுமே போட்டாயா?"

அந்த ஆள் ஒன்றுமே பேசவில்லை. மெதுவாக எழுந்தான்.
என் கையைத் தன் இருகைகளாலும் ஏந்திப் புறங்கையில் முத்தமிட்டான்.
நான் அவனை அமரச்சொல்லி, அவனுடைய கார்டில்
diagnosis - depressive illness என்று மட்டும் எழுதிவிட்டு
anti-depressent மருந்தை எழுதிக்கொடுத்தேன்.

பேசியது எல்லாமே பகவத் கீதை. ஆனால் அவ்வாறு அவனிடம்
நான் சொல்லவில்லை.
எல்லாம் பழைய பாடம்தான். சொல்லிக்கொடுத்தது வேறு நபர்;
சொல்லிய இடமும் வேறு.
அதற்கு இன்னும் பதினோரு ஆண்டுகளும் முன்னாலும்
இருநூற்றைம்பது மைல்கள் தள்ளிக் கிழக்குநோக்கியும் போகவேண்டும்.

இப்போது சொல்லுங்கள்.

கொல்வதற்கு Killer instinct வேண்டுமா? அல்லது
கொல்பவர்களெல்லாருமே கில்லர் இன்ஸ்ட்டிங்க்ட் கொண்டவர்களா?
அல்லது கில்லர் இன்ஸ்ட்டிங்க்ட் உள்ளவர்கள்தாம் கொல்வார்களா?

அன்புடன்

ஜெயபாரதி

=============================