From naga ganesan@... Thu Mar 14 12:04:15 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 14 Mar 2002 20:04:15 -0000
Received: (qmail 62383 invoked from network); 14 Mar 2002 20:04:15 -0000
Received: from unknown (216.115.97.171) by m12.grp.snv.yahoo.com with QMQP; 14 Mar 2002 20:04:15 -0000
Received: from unknown (HELO n5.groups.yahoo.com) (216.115.96.55) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 14 Mar 2002 20:04:14 -0000
Received: from [216.115.96.89] by n5.groups.yahoo.com with NNFMP; 14 Mar 2002 20:04:05 -0000
Date: Thu, 14 Mar 2002 20:04:02 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: u, uu uyirmey test
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3949
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 12.13.248.12
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16675


--- In tscii@y..., "Mani M. Manivannan" wrote:
> உகர ஊகாரச் சீர்மை பரபரப்பாக மீண்டும் பேசப் படும்போது ஏற்கனவே இருக்கும் எழுத்துருவை
>வைத்து எழுதிப் பார்த்திருக்கிறேன். எவ்வளவு பேரால் பயிற்சியின் பின் இவற்றைப் படிக்க
முடியும்?
>
> ஜு ஜூ ஷு ஷூ ஹு ஹூ
>
> க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன
> கு ஙு சு ஞு டு ணு து நு பு மு யு ரு லு வு ழு ளு று னு
>
> க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன
> கூ ஙூ சூ ஞூ டூ ணூ தூ நூ பூ மூ யூ ரூ லூ வூ ழூ ளூ றூ னூ
>

பெரியார் ஈ.வே.ரா அவர்கள் சுமார் 1930
வாக்கில் இதனை கும்பகோணம் கல்லூரிப் பேருரையில் சொன்னார். அதை சுதேச மித்திரன்
பத்திரிகை
பலகாலம் நடைமுறைப் படுத்திற்று. தமிழ் பேராசிரியர் ஆய்வுக்கோவை ஆண்டுக்கொருமுறை வருகிறது.
கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டிருந்தால் உகர ஊகார உயிர்மெய்களை உடைத்து எழுதியே
அச்சிடுகின்றனர். அவற்றை எல்லாம் படிப்பதில் பெரிய சிரமம் இருப்பதாகத் தெரியவில்லை.

கிரந்தக் குறிகள் பொருந்துமா?
---------------------------------------
1) கிரந்தக் குறிகள் ஏனைய தமிழ் எழுத்துக்களுடன் இயல்பாக வடிவத்தில் ஒத்துப்
போவதில்லை.

2) உலகம் முழுக்க எழுத்துக்களில் u, U போல ஒரு வளையம் வருகிறது. அதன் காரணம் அனைத்து
நெடுங்கணக்கும் செமித்திய மூலம் கொண்டதால். தேவ நாகரி எழுத்திலும் u, U போல உள்ளது.
அந்தத் தன்மை கிரந்தக் குறிகளை எழுதும்போது விளங்குவதில்லை.

எனவேதான், உயிர்மெய் உகர, ஊகார உயிர்மெய்யைத் தனியாக உடைத்து ஒருவடிவம்
கொடுக்கப்பட்டுள்ளது.
பி.டி.எப் இழை இறக்குமதி செய்ய:
http://groups.yahoo.com/group/S_India/message/58

சின்னதுரை ஸ்ரீவாஸ் அவர்களின் ஆவரங்கள் (இதன் அர்த்தம் என்ன?)
எழுதுருவில், கிரந்தக்குறிகளின் இடத்தில்
அவர் தெரிவைப் பொதிந்துள்ளார்.
உகரம் கூடக் கால் ஒன்று சேர்த்து
ஊகாரம் செய்துள்ளார். அதற்கு பதிலாக,
ஒரு முடிச்சைப் போட்டு உகரக் குறியை
ஊகாரக் குறியாக்கினால் நிறைய இடம் மிச்சமாகும். உங்கள் மடலை சின்னதுரை
எழுதுருவுக்கு மாற்றிப் பாருங்கள், தெரியும்.

சின்னதுரையின் உ, ஊ குறியீடுகள்:
http://www.ss003b3751.pwp.blueyonder.co.uk/Tamil/u-uu-cheermai.html

நான் u, uu uyirmey letter reform
என்னும் தலைப்பில் எழுதிய மடல்.

உகர, ஊகார உயிர்மெய்களுக்கு
தனிக்குறியிடும்போது கோப்பின்
அளவு (file size) வெகுவாகக் குறைகிறது.
அந்தக் குறைவு ஒரு நூலளவு கோப்புக்கும்
இருக்குமா என்று பார்க்கணும்.

--- In tscii@y..., "naga_ganesan" wrote:
>
> அவைக் குழுமத்தாருக்கு,
>
> கவிஞர் கண்ணதாசனின் கோயம்புத்தூர்க் கவிதை:
> http://groups.yahoo.com/group/S_India/message/55
>
> உகர, ஊகார உயிர்மெய் எழுத்துக்கள் பிணைக்கப்பட்டு உருவாகி
> ஏனை உயிர்மெய் எழுத்துக்களைப் போல ஒழுங்கமைதி
> பெறாமல் விளங்குகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி.
> ஏனை உயிர்மெய் எழுத்துக்களைப் போலச் சீர்மை பெற்றால்
> சுமார் 40 எழுத்துக்கள் அளவில் முழுத் தமிழையும்
> எழுதி விட ஏலும்.
>
> தற்போதிருக்கும் உகர ஊகார உயிர்மெய் எழுத்துக்களில்
> மெய் எழுத்தின் கீழே விலங்கு பூட்டப்பட்டுள்ளது.
> அந்தக் கீழ்-விலங்கு ரோமன் எழுத்து u, U போல இருக்கிறது.
> காரணம் எல்லா எழுத்தும் செமித்திய நாடுகளில்
> உருவானதால்தான்.
>
> ஏனை உயிர்மெய் எழுத்துப்போல, உகர, ஊகார எழுத்துக்களுக்கு
> தனி எழுத்தை அமைத்திருக்கிறேன். அதனை கோயம்புத்தூர்க்
> கவிதையில் பெய்து தந்துள்ளேன். சுட்டியைச் சொடுக்குக:
> http://groups.yahoo.com/group/S_India/message/58
>
> உகர, ஊகார எழுத்தை மாற்ற பேரறிஞர்கள் சுமார்
> நூறாண்டுகளாக அறிவுறுத்திவருகின்றனர்.
> முக்கியமாக, கொங்குநாடு தந்த பெரியார், கி. வா. ஜகந்நாதன்,
> வா. செ. குழந்தைசாமி போன்றோர் விரிவாக எழுதியிருக்கின்றனர்.
> அவர்கள் போட்ட பாட்டையில், கணிவலையில்
> உகர ஊகார உயிர்மெய் மாற்றம் தந்துள்ளேன்.
>
> அழகாக, எளிதாக உ, ஊ உயிர்மெய் உள்ளதா?
> வேறொன்று சிறந்ததாயின், அந்த உருவத்தை
> வடிவமைத்து நீங்கள் எழுதவேண்டுகிறேன்.

அன்புடன்
நா. கணேசன்
--- End forwarded message ---