From sarabeswar@... Thu Mar 14 22:58:26 2002
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 15 Mar 2002 06:58:26 -0000
Received: (qmail 88795 invoked from network); 15 Mar 2002 06:58:26 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 15 Mar 2002 06:58:26 -0000
Received: from unknown (HELO n4.groups.yahoo.com) (216.115.96.54) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 15 Mar 2002 06:58:25 -0000
Received: from [216.115.96.146] by n4.groups.yahoo.com with NNFMP; 15 Mar 2002 06:57:30 -0000
Date: Fri, 15 Mar 2002 06:57:02 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: kUththapirAn - Re: om nama sivaaya - maha shiva raathri
Message-ID:
In-Reply-To: <001601c1cae4$e66f69a0$0200a8c0@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2778
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar"
X-Originating-IP: 202.152.27.66
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 16684

> > மற்றபடி சி/சைவம் குறித்துத் தாங்கள் கேட்டிருக்கும்
> > விளக்கம் மிகவும் நீளும். நமசிவாய சிவாயநம ஆனதெப்படி என்று தொடங்கி
> > பல வாழ்நாட்கள் எழுதவேண்டி வரும்.
>
> please do write as briefly as u can.
> if u r willing to write in detail,
> please write in several parts.

> not everyone in agathiyar group is an expert.
> atleast u shud write for newbies/novices like me.

அன்புநண்பர் சுரேஷ் அவர்களுக்கு,

சுருக்கமாய்ச் சொல்வதெனில்:
அருவமானது அருவுருவானது லிங்கம் என்று சொல்லியிருந்தேன். பின்னர்
அதுவே உருவங்களாய்ப் பிரிந்தும் தோன்றுவது அதன் ஆடலினால்.

உரு என்பது ஐந்தொழில் கூத்தனான நடராச வடிவம். அது என்ன ஐந்தொழில்?
பஞ்சகிருத்தியம் - படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அதன்
முடிவாய் அருளல். அவற்றின் அற்புதவிளக்கமே ஆடலரசனின் தோற்றம்!

கூத்தபிரானின் வடிவத்தினை ஒருமுறை மனக்கண்முன் கொண்டுவாருங்கள்.

அந்த மேல் வலது கையில் எடுத்த உடுக்கை ஒலியினைக் குறிக்கும்.
எங்கும் நிறை நாதப்பிரும்மமாய், ஒலியத்துவாவிலிருந்து உலகங்கள்
தோன்றுவதைக் குறிக்கும் கையது. அதன் அதிதேவதை அயன்.

கீழ்வலதுகை, அஞ்சாதே என்று அபயமுத்திரை காட்டி நிற்பது, காத்தலைக்
குறிக்கும். அதன் வடிவே மாலவர்.

மேல் இடக்கையில் தீச்சுடர் தெரிகிறதல்லவா? அந்த அழற்கை
அழித்தருளும் மறக்கருணையினைச் சுட்டும். அதன் வடிவமே உருத்திரர்.

வலது பாதம் மறதி, அறியாமை ஆகியவற்றின் உருவகமான முயலகனைத்
தரையில் தள்ளி அழுத்தி மிதித்து நிற்கும். புல்லாகிப் பூடாய், புழுவாய்,
பல்விருகமாய்.., என்று பிறந்திறந்தோய்ந்திருக்கும் உயிர்கள் பிந்தைய
பிறவிகளை மறந்து மீண்டும் வினைசெய்யத் தூண்டும் இவ்வடிவம்
மஹேஸ்வரன் என்பது.

கீழ் இடதுகரம் சுட்டும் தூக்கியபாதமே குஞ்சிதபாதம். யாம் வணங்கித் தொழும்
இத்திருவடியே ஞானபாதம். எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்தது போதும் என்று கதறி
நிற்பவரைக் கருணையாலிழுத்துக் கொள்ளும் சதாசிவ வடிவம்.

சைவ சித்தாந்தம் நடராச வடிவினை தூல சூக்கும பஞ்சாக்கர வடிவாய்
ஊனநடனமாய் ஞானநடனமாய் மேலும் விரிக்கும்.

பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும்
நாமநீர் வரைப்பில் நானிய வளாகமும்
ஏனைப்பு வனமும் எண்ணீங் குயிரும்
தானே வகுத்ததுன் தமருகக் கரமே
தனித்தனி வழுத்த சராசரப் பகுதி
அனைத்தையும் காப்பதுன் மைத்த பொற்கரமே
தோற்று நின்றவத் தொல்லுல கடங்கலும்
மாற்றுவது ஆரழல் வைத்த தோர் கரமே
ஈட்டிய வினைப்பயன் எவற்றையும் மறைத்து நின்று
ஊட்டுவதாகும் நின் ஊன்றிய பதமே
அடுத்த இன்னுயிர் கட்கு அளவில் பேரின்பம்
கொடுப்பது முதல்வ நின் குஞ்சித பதமே.

- குமரகுருபரரின் சிதம்பர மும்மணிக் கோவை.

ஜேபி ஐயா சொல்வது போல் இங்கே முக்கியமாய் கவனிக்க வேண்டியது -
அவரவர்க்கு எது பிடித்த வழியோ அதுவே உத்தமம்.

அப்படித் 'தம்வழி தனிவழி'யென நின்றுவிடுபவர்க்கெல்லாம்
ஞானத்தாணுவான அத்துவிதச் சைவமணி மெய்கண்டார் சொல்வது
மேலும் பொருந்தும் - அவ்வளவில் அவர் மகிழ்க!

அன்புடன்
குமார்
ஜாவா

ஓம் நமசிவாய : சிவாயநம ஓம்