From vanchi@... Fri Mar 15 04:02:40 2002
Return-Path:
X-Sender: vanchi@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 15 Mar 2002 12:02:39 -0000
Received: (qmail 85333 invoked from network); 15 Mar 2002 12:02:39 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 15 Mar 2002 12:02:39 -0000
Received: from unknown (HELO n14.groups.yahoo.com) (216.115.96.64) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 15 Mar 2002 12:02:39 -0000
Received: from [216.115.96.164] by n14.groups.yahoo.com with NNFMP; 15 Mar 2002 12:04:47 -0000
Date: Fri, 15 Mar 2002 12:02:37 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Digest Number 855
Message-ID:
In-Reply-To: <001d01c1cb93$14378b20$4af0c7cb@harikris>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1448
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "vanchi63"
X-Originating-IP: 61.11.73.30
X-Yahoo-Group-Post: member; u=25020646
X-Yahoo-Profile: vanchi63
X-Yahoo-Message-Num: 16691

-
நண்பர்களே!
ஆரைக்கீரையென்று வாய்க்கால் கரையோரம் பார்க்கலாம். கீரையென்றால் பெரிதாக நினைத்துக்
கொள்ள வேண்டாம். ஒரு முழுத்தாவரம் மொத்தமே சுண்டுவிரல் அளவு உயரம் தையல் ஊசி போல்
மெலிந்த தண்டு, அதன் மேலே எண்ணி நாலே இலைகள் இதுதான் ஆரைக்கீரை. (exhaust fanஐப்
ப்போல பூவிதழ்போல அவ்விலைகள்) இத்தாவரத்தைக் கொசகொசவென்று நூற்றுக்கணக்கில்
வாய்க்காற்பரப்பிலே வளர்ந்திருப்பதைக் காண்பது கொள்ளையழகு.
இதைப் பற்றித்தான் யாரோ ஒரு புலவர் "ஒரு காலில் நாலு பந்தலடி" அது என்ன? என்று புதிர்க்
கேள்வி கேட்டாராம்.
ஒரு பந்தலுக்கு நான்கு கால்கள் இருக்கையில் இது என்ன என்று அதிசயப்படவைக்கும் (தமிழில்
குறுக்கெழுத்துப் புதிர்களுக்கான வித்துகள் அக்காலத்திலேயெ தெளிக்கப்பட்டுவிட்டன) கேள்வியல்லவா?
ஆனால் இதில் அடி என்று மரியாதையின்றி கேட்டதால் ஔவையாருக்குக் கோபம் வந்ததாம். புதிருக்கும்
பதிலாய், அதே சமயம் அவரையும் திட்டும்படிதான்
"ஆரையடா சொன்னாய்?" என்று 8.25 பாடலை இயற்றினாராம் அவ்வையார்.

அது சரி எனக்கு இப்போது மாணவப்பருவத்தில் விடுமுறைகளில் கிராமத்தில் வாய்க்கல் கரையோரம்
இருந்த ஞாபகத்தைக் கிளப்பிவிட்டு விட்டீர்களே?
சென்னையிலேயே பிறந்து வளர்ந்த என் மனைவியையும் மகளையும் வைத்துக் கொண்டு என்னால் அங்கே
போனால் இப்போதெல்லாம் சில மணிநேரங்களுக்கு மேல் இருக்க முடிவதில்லை!

--வாஞ்சிநாதன்


-- In agathiyar@y..., "Hari Krishnan" wrote:
> அடடா!
>
> எட்டேகால் லட்சணமே ......
> குட்டிச் சுவரே என்றெல்லாம் திட்டிவிட்டு