From arull@... Fri Mar 15 19:19:54 2002
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 16 Mar 2002 03:19:54 -0000
Received: (qmail 94180 invoked from network); 16 Mar 2002 03:19:53 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 16 Mar 2002 03:19:53 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 16 Mar 2002 03:19:53 -0000
Received: from tm.net.my (sja-179-169.tm.net.my [202.188.179.169]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GT10054FQL3HM@...> for agathiyar@yahoogroups.com; Sat, 16 Mar 2002 11:19:52 +0800 (SGT)
Date: Sat, 16 Mar 2002 11:16:38 +0800
Subject: திருமுறைத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3C92B916.63684697@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 16704

திருச்சிற்றம்பலம்

திருமுறைத்தியானம்

ஸ்ரீமடம் ஆஸ்தான வித்வான் புலவர்.
பு.மா.ஜய செந்தில்நாதன்

மார்ச்சு 15

திருஞானசம்பந்தர்

திருப்பழுவூர்

வடமூலேஸ்வரர் - அருந்தவநாயகி

"பழுவூர் மேவிய பண்பா போற்றி"

சாதல் புரிவார் சுடலைதன்னில் நடமாடும்
நாதன் நமையாளுடைய நம்பன் இடம் என்பர்
வேதமொழி சொல்லி மறையாளர் இறைவந்தன்
பாதம் அவை ஏத்த நிகழ்கின்ற பழுவூரே.

நாளும் நினைந்தேத்தும் நன்னெஞ்சே!

உலகிற் பிறக்கும் மக்கள் அனைவரும் ஒருநாளில்
இறந்துஇல்லாது போகின்ற இடமாகிய சுடுகாட்டினைத்
தனக்கு இடமாகக் கொண்டு அங்குள்ள சாம்பலைப் பூசி
நடனமாடுகின்ற தலைவரான சிவபெருமானும், நாம்
நம்புதற்குரிய மேலானவனாகத் திகழ்வதனாலே 'நம்பன்'
என்று அழைக்கப்படுபவருமாகிய பரம்பொருள் இருந்தருளும்
இடம் யாதென வினவில்,

வேதியர்கள் வேதங்களை ஓதிப் பாதங்களைத்
தொழுகின்ற பழுவூர்த் தலமேயாகும்.

பழுவூர்ப் பாதம் பணிந்தேத்தின் நெஞ்சே!

பாவம் கழிந்து பரத்தைப் பெறலாமே.

திருச்சிற்றம்பலம்

ஓதுவார்
பினாங்கு.