From jaybee@... Wed Mar 20 20:10:30 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 21 Mar 2002 04:10:29 -0000
Received: (qmail 3002 invoked from network); 21 Mar 2002 04:10:28 -0000
Received: from unknown (66.218.66.216) by m3.grp.scd.yahoo.com with QMQP; 21 Mar 2002 04:10:28 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 21 Mar 2002 04:10:27 -0000
Received: from user (sp-103-70.tm.net.my [210.186.103.70]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GTB004B529C9T@...> for agathiyar@yahoogroups.com; Thu, 21 Mar 2002 12:10:26 +0800 (SGT)
Date: Thu, 21 Mar 2002 12:14:28 +0800
Subject: Answer#1-Re: [agathiyar] vidhiyai velluthal
In-reply-to: <00e901c1cc83$5693e680$0200a8c0@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020321121428.00705d08@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <1016237223.373.76099.m12@yahoogroups.com>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16717


அன்பர்களே,

At 07:41 PM 3/15/02 -0500, Suresh Kumar wrote:
>வணக்கம்
>
>விதியை மதியால் வெல்ல முடியும் என்பர்.
>
>மதியால் 'இப்படிச் செய்தால்' வெற்றி கிடைக்கும்
>என்பது விதியாகிருந்தால் தானா ??
>
>விதியை வெல்ல மதி வேலை செய்யவேண்டும் என்பது கூட விதிதானா ?
>
>புரியவில்லை.
>

இதே விஷயத்தைப் பற்றி ஐந்தாண்டுகளுக்கு முன்னர்
தமிழ்டாட்நெட்டில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது
நான் 'நாடி ஜோதிடம்' என்னும் தலைப்பில் மடல்தொடர் ஒன்றை
இட்டுக்கொண்டிருந்தேன். அதன் தொடர்பாக இணையத்தோர்
கேட்ட கேள்விகளையெல்லாம் தொகுத்து பதிலளித்தேன்.
அதில் ஒரு சிறிய பகுதியை இங்கு இட்டுள்ளேன்.
சிறிய பகுதிதான். ஆனால் சற்று நீளமானது. ஜீரணிப்பதும் சிரமம்.
ஆகவே பிரித்து இட்டுள்ளேன். அடுத்த பாகமும் தொடரும்.

மேலே படியுங்கள்:

கேள்வி:

7. எல்லா உயினங்களின் வருங்காலமும் பிறக்கும் முன்பே
நிர்ணயிக்கப் பட்டிருந்தால், வாழ்க்கையின் பொருள் என்ன?

பதில்:

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

கதி.....
விதி.....

இப்போது சொல்லுங்கள்.

கதியென்றால் என்ன?
விதியென்றால் என்ன?
இரண்டும் ஒன்றேதானா....?
அல்லது
வெவ்வேறா.......?

கேள்வி:

8. தனி உமை (free choice) இல்லாத உயிர்கள் எவ்வாறு
பிறப்பு/இறப்பு என்ற சுற்று வட்டத்தில் இருந்து தப்பிக்க முடியும்?
9. ஒரு மூலக்கூற்றின் (molecule) மின்னணுவின் (electron)
இருப்பிடத்தைக் கூடத் திட்ட வட்டமாக நிர்ணயிக்க முடியாது
என்று Heisenberg Uncertainty principle கூறும் போது, மானிடர்
யாவான் பிற்காலத்தைத் திட்ட வட்டமாகச் சொல்ல முடியும்
என்பதற்கு என்ன நிரூபணம் காட்ட முடியும்?

பதில்:

இந்தக் கேள்விகளுக்கு நேரடியாகவும் தனியாகவும் என்னால்
கூறயியலவில்லை.

என்ன செய்வது? என்னுடைய அறிவின் எல்லையால் ஏற்பட்ட
வரையறை. முடிந்தவரையில் முயற்சித்துள்ளேன்.

நம்முடைய சாஸ்திரங்கள் கூறியிருப்பதன் சுருக்கம் இதுதான்:

உயிர்களின் பிறவிக்கு மூல காரணம் - பிராரத்தம், சஞ்சிதம்,
ஆகாமியம் என்னும் மூவகையான வினைகள்தாம். இவற்றின்
விளைவாகவே பிறவியும் அப்பிறவியில் உள்ள விதியும்
நிர்ணயிக்கப்படுகின்றன.

இவையெல்லாம் ஒரு Grand Design, ஒரு Master Plan இன்
உட்கூறுகளாக, ஒன்றுடன் ஒன்று தொடர்பு
கொண்டவையாக, பின்னிப் பிணைந்து விளங்கும்.

ஒரு Master Plan, Grand Design என்று இருந்தால் ஒரு Executor,
Orchestrator இருந்தாகவேண்டுமே?

ஒளவையார் கூறுகிறார்,
"மேலைத் தவத்தளவேயாகுமாம்
தான் பெற்ற செல்வம்."
முற்பிறவியில் செய்த தவமே இப்பிறவியில் அடையும் செல்வத்தை
நிர்ணயிக்கிறது..

இன்னும் கூறுகிறார்,
"எழுதியவாறே காண் இரங்கு மட நெஞ்சே!
கருதியவாறாகுமோ கருமம்? - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை! "

நினைத்ததெல்லாம் கொடுக்ககூடியது, தேவலோகத்துக் 'கற்பகத்தரு'
என்னும் மரம். அத்தகைய மரத்தை நாடி அதன் பழத்தை நினைப்பவர்க்கு
அது காஞ்சிரங்காயையே ஈந்ததானால் அது முற்பிறவியில் செய்த
வினை என்கிறார். காஞ்சிரங்காய் என்பது கசப்பும் விஷத்தன்மையும்
கொண்டதொரு காய்.

இந்தப் பிறவி என்பது முற்பிறவிகளில்சேர்த்துவைத்த வினைகளின்
கூட்டு விளைவு என்றாகிறது.

கேட்பவர் ஒளவையார்.
ஆமோதிப்பவர் திருவள்ளுவர்.

'"ஆகூழால் தோன்றும் அசைவின்மை, கைப்பொருள்
போகூழால் தோன்று மடி"

இந்த "ஆகூழ்", "போகூழ்" என்று வள்ளுவர் குறிப்பிடுவதெல்லாம்
சென்ற பிறவிகளில் செய்த நல்வினை தீவினைகளின் விளைவாக
ஏற்பட்ட விதிப்பயனைத்தான்.

"வகுத்தான் வகுத்தவகையல்லாற் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தலாது."

இவ்வாறெல்லாம் விவாக "ஊழ்" என்னும் அதிகாரத்தில் கூறிவிட்டுப்
பெருமூச்சுடன் இறுதியில் நம்மிடமே கேட்கிறார் வள்ளுவர்.

"ஊழிற் பெரு வலி யாவுள?"

முற்பிறவியில் செய்த நல்வினைகள் தீவினைகளால் மட்டுமே
இப்பிறப்பில் எல்லாமே அமையும் என்றால்
"அது வேண்டும், இது வேண்டும்" என்று ஏன் தெய்வத்தைக் கேட்க
வேண்டும்? யாகம் ஏன்? பூசை ஏன்? ஹோமம் ஏன்? கேட்டாலும்
கிடைக்காது எனின் கேட்பதால் ஆவதுதான் என்ன, முயற்சி எவ்வளவு
செய்தாலும் ஆகமாட்டாது என்றிருந்தக்கால்?

'ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவின்றித்
தாழாது உஞற்றுபவர்"

நல்ல முயற்சியுடையோர் ஊழையும்கூடப் புறமுதுகிடச் செய்து
விடுவார்கள் என்றும்,

"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருந்தக் கூலி தரும்",
என்றும் வள்ளுவர் கூறியிருப்பது?

வினைகளையும், பிறவிகளையும், விதியையும் மாற்றிக்கொள்ள
முடியுமா?
>
அன்புடன்

ஜெயபாரதி

===========================