From jaybee@... Wed Mar 20 20:15:27 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 21 Mar 2002 04:15:27 -0000
Received: (qmail 40494 invoked from network); 21 Mar 2002 04:15:27 -0000
Received: from unknown (66.218.66.218) by m4.grp.scd.yahoo.com with QMQP; 21 Mar 2002 04:15:27 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 21 Mar 2002 04:15:26 -0000
Received: from user (sp-103-70.tm.net.my [210.186.103.70]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GTB00AK32HOMM@...> for agathiyar@yahoogroups.com; Thu, 21 Mar 2002 12:15:26 +0800 (SGT)
Date: Thu, 21 Mar 2002 12:19:28 +0800
Subject: Re: [agathiyar] kilzhattu maadu
In-reply-to:
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020321121928.00711368@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16718

At 04:03 AM 3/21/02 +0000, you wrote:
>
>அன்புள்ள டாக்டர் ஜெயபாரதி,
>
>ஓர் அனுகூலமற்ற நிலையை தக்க விதத்தில் பயன்படுத்தி தனக்கு சாதகமாக்கிக்கொள்வதே ஒரு சிறந்த
>நிர்வாக முறையாகும் என்பதை இந்தக்கதை அழகுறக் காட்டுகிறது. இதன் மூலம் தாங்களாக இருந்தால், இதனை
>BoKH திட்டத்திற்குப் பயன்படுத்தலாமென்று எண்ணுகிறேன். அனுமதி தருவீர்களா?
>
>அன்புடன்,
>சத்தியா,
>கோலாலம்பூர்.


எந்தக் காலத்திலோ நான் படித்ததொரு parable. நினைவில்
இருந்த சிறு கருப்பொருளை வைத்து, பின்னணியை நானே சிருஷ்டி
செய்து, ஏற்றதொருவகையில் உருவாக்கம்செய்தேன்.

தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அன்புடன்

ஜெயபாரதி


>
>
>
> A Parable - கிழட்டு மாடு
>
> அந்த செக்குக்கார வாணிகனிடம் சில செக்கு மாடுகள்
>இருந்தன. அவற்றில் ஒன்று கிழண்டுபோய்விட்டது. அதனால்
>வேகமாக நடக்கமுடியாது. பின்னங்கால்களில் மூட்டுவீக்கம்.
>மாட்டு வாகடர் பார்த்துவிட்டு, அது முதுமையினால் ஏற்படுவது
>என்று சொல்லிவிட்டார். செக்காரனுக்கு ஒரே கவலை. அந்த
>மாட்டை என்ன செய்வது? ரொம்பநாட்களாக வைத்திருந்த
>மாடாகையால் அதனை அடிமாடாகக் கொடுக்கமனம் வரவில்லை.
>ஏதோ.....வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டு நாட்களை
>எண்ணிக்கொண்டிருந்தான்.
>
> அவனுடைய செக்குக்குப் பக்கத்தில் ஒரு கிணறு இருந்தது.
>அது மிகவும் பழைய கிணறு. அவனுடைய பாட்டன் பூட்டன் காலத்துக்
>கிணறு. கைப்பிடிச்சுவர்கள் எல்லாம் எந்தக் காலத்திலேயோ இடிந்து
>போய்விட்டன. கிணற்றுக்கு அடியில் தண்ணீர்கூட வற்றிப்போய்
>விட்டிருந்தது.
>
> ஒருநாள் அந்த மாடு கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.
>
> விழுந்த வேகத்தில் மயங்கிவிட்டது. அப்படியே கிடந்தது.
>
> செக்காரன் அக்கம்பக்கத்து ஆட்களையெல்லாம் உதவிக்குக்
>கூட்டிவந்தான்.
> நிலைமையை எல்லாரும் ஆலோசித்துப்பார்த்தனர்.
> மாடும் கிழம்; கிணற்றுக்குள் விழுந்ததில் அடிபட்டுப் போயிருக்கிறது.
>அனேகமாக இறந்துவிடும். அல்லது இறந்துபோய்விட்டிருக்கும். மாட்டை
>வெளியில் எடுப்பதும் அவர்களால் முடியாத காரியம்
> கிணறோ பழங்கிணறு; பாழடைந்தது. அதனைத் தலைமுறை
>தலைமுறையாக யாரும் செப்பனிடவில்லை. இப்போதும் அதனைச்
>செப்பனிட்டு, ஆகப்போவது ஒன்றுமில்லை. அதனை அப்படியே விட்டு
>விட்டால் இன்னும் ஆபத்துத்தான்.
>
> ஆகவே மாட்டையும் உள்ளேயே வைத்துக் கிணற்றை மண்ணால்
>மூடிவிடுவது என்று தீர்மானித்தனர்.
>
> உடனே அனைவரும் மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள்
>போடலாயினர்.
>
> மாட்டின் முதுகில் மண்விழுந்தது. அதற்கு உணர்வு வந்துவிட்டது.
>என்ன நடக்கிறது என்பதை ஊகித்து அறிந்துகொண்டது.
>
> இப்படியாக மண்மூடி மடிவதில் அதற்கு இஷ்டமில்லை.
>
> ஆகவே முதுகில் விழுந்த மண்ணை உலுக்கிஉதறி விட்டது.
>மண் மாட்டின் காலடியில் விழுந்தது.
> அந்த மண்ணின்மீது மெதுவாக ஏறி நின்றுகொண்டது.
>
> அடுத்தாற்போல மேலும் மேலும் மண்ணை வெட்டிப்போடப்
>போட, மாடு மேலும் மேலும் மண்ணை உதறி விட்டுக் காலடியில்
>போட்டு அதன்மேல் மிதித்து ஏறி நின்றுகொண்டது.
>
> வெட்டிப்போட்ட மண்ணால் கிணற்றின் தூர் மூடப்பட்டு,
>மண்ணின் மட்டம் ஏறிக்கொண்டே வந்தது. அதன் மட்டம் ஏற ஏற
>அதன்மீது மாடும் ஏறிக்கொண்டுவந்தது.
>
> ஓரளவுக்கும் எட்டும் அளவு வந்தவுடன் அந்தமாடு,
>தன்னுடைய வாதக்காலையும் மறந்து, ஒரு எம்பு, தன் வாழ்நாளில்
>அதுவரை எம்பாததையெல்லாம் சேர்த்துவைத்து பலத்தையெல்லாம்
>திரட்டி மூச்சுப்பிடித்து ஒரு எம்பு எம்பித் தாவியது. தாவி, அப்படியே
>கிணற்றுக்கு வெளியில் வந்து நின்றது.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>====================