From jaybee@... Wed Mar 20 20:52:08 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 21 Mar 2002 04:52:08 -0000
Received: (qmail 63669 invoked from network); 21 Mar 2002 04:52:06 -0000
Received: from unknown (66.218.66.216) by m8.grp.scd.yahoo.com with QMQP; 21 Mar 2002 04:52:06 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 21 Mar 2002 04:52:06 -0000
Received: from user (sp-103-107.tm.net.my [210.186.103.107]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GTB0049946QG5@...> for agathiyar@yahoogroups.com; Thu, 21 Mar 2002 12:52:05 +0800 (SGT)
Date: Thu, 21 Mar 2002 12:56:07 +0800
Subject: Re: Answer#2-Re: [agathiyar] vidhiyai velluthal
In-reply-to: <3.0.3.32.20020321121428.00705d08@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020321125607.00710000@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <00e901c1cc83$5693e680$0200a8c0@...> <1016237223.373.76099.m12@yahoogroups.com>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16719
Continuation to what JayBee wrote aAt 12:14 PM 3/21/02 +0800:
>
வினைகளையும், பிறவிகளையும், விதியையும் மாற்றிக்கொள்ள முடியுமா?
The Grand Designer, the Master Planner, the CEO of the the universe
in its entirity is brought into the play.
மீண்டும் சாஸ்திரங்களுக்கே செல்கிறேன்.
விதியை மாற்ற வல்லவன் இறைவன். விதியின் எந்த அம்சங்களை
யெல்லாம் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறானோ, அவற்றை
யெல்லாம் மாற்ற வல்லவன் இறைவன்.
அப்பர் வாக்கு. விண்ணளவுக்கு அடுக்கிவைத்த விறகுக் குவியல்.
அதனை எரித்துப் புகையாக்கும் நெருப்பு; சிந்தித்துப் பார்த்துச்
சொல்லும்போது அது ஒன்றுமே இல்லை.
நாதனின் நாமம் தீவினைகளை அழித்துவிடும்.
இறைவனாலும் மாற்றியமைக்க முடியாதது விதி என்றால்,அது இறைவனின்
இறைத்தன்மையையே கேள்விக்குயதாகச்செய்யும்.
இறைவனாலும்கூட விதியை மாற்ற முடியாது என்றால், நமது சமயத்தின்
அஸ்திவாரமே ஆட்டங்கண்டுவிடும். பிரார்த்தனைகளுக்கு அங்கு
இடமே கிடையாது.
வழிபாட்டில் 'காம்ய வழிபாடு', 'நிஷ்காம்ய வழிபாடு' என்று இரு வகையுண்டு.
எதையேனும் வேண்டி ,பெறுதலுக்காகச் செய்யப்படுவதே 'காம்யம்'.
இறைவன்பால் அன்பால் இறைவனுக்கே அர்ப்பணமாகச் செய்யப்படுவது,
செய்யப்படுவது 'நிஷ்காம்யம்'.
'கலையாத கல்வியும், குறையாத வயதும், கபடுவராத நட்பும்',
என்ற பாடலில் அன்னை அபிராமியிடம்நீண்ட பட்டியலிட்டு பதினாறு
பேறுகளையும் நிறையவே கேட்கிறார், அபிராமி பட்டர்.
இப்பாடலின் முடிவில் அபிராமி தோன்றி,
"மகனே, சுப்பிரமணிய பட்டா! எல்லாமேவிதிப்படிதான் நடக்கும். உனக்கு
இதையெல்லாம் அடைய உனக்கு விதியில்லை. ஆகவே நீ கேட்பது
எதையுமே என்னால் தர இயலாது" , என்று கூறினால், எப்படியிருக்கும்?
முற்பிறப்பில் செய்த வினைப்பயனால் இப்பிறப்பில் எதுவுமே நடக்கும்
என்பது ஒரு பொது விதி.
விதி என்றிருந்தக்கால், விதி விலக்கும் இருக்கும் அல்லவா?
விதியிலிருந்து விலகி நின்று விதிக்கெல்லாம் விலக்கு வழங்க வல்லான்
இறைவன்.
கதி என்பது மாற்றப்பட முடியாத General Plan.
விதி என்பது அதற்குள் உள்ள மாற்றக்கூடிய அம்சம்.
விதியை, மதியால் modify பண்ண முடியும். விதியை மாற்றுமாறு இறைவனை
இறைஞ்சுவதும் கூட மதியினால் ஆவதுதான்.
ஒரு space vehicle-லின் design, construction, launching, flight programme,
முதலிய பல விஷயங்களை NASA நிர்ணயிக்கிறது. இதில் Houston
சர்வ வல்லமை படைத்தாக இருக்கிறது. அந்த space vehicle-லின் உள்ளே
பயணிக்கும் astronauts அதற்கெல்லாம் கட்டுப்பட்டே இருக்க வேண்டியுள்ளது.
ஆனாலும்கூட அந்த space vehicle-லின் உள்ளே செய்யக்கூடிய பல
காயங்களில் அவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. அவர்கள் இஷ்டப்படி
முன்பின்னாகவோ அல்லது அவர்களின் சக்திக்கு உட்பட்ட விதத்திலோ
அவர்களின் activities-ஐ modify செய்து கொள்ளமுடியும்.
ஏன்? ஏதாது ஏடாகூடம'கச் செய்து அந்த mission-ஐயே abort செய்ய
வைக்கமுடியும். அல்லது self-destructive-ஆக ஏதாவது செய்து
கொள்ளலாம்......
ஆயுள் முடியுமுன் தற்கொலை செய்து கொள்வது போல.
Houston கையில் கதியும் விதியும் இருக்கிறது.
Astronauts கையில் விதியை modify செய்துகொள்ளும் சக்தி
இருக்கிறது.
மனித ஜாதகத்தில், பிறக்கும்போது இருந்த லக்னமும் கிரகங்களின்
நிலைகளும் 'கதி'யைக் குறிக்கும். தசாபுக்திகள் எனப்படுபவை,
'விதி'யைக் குறிக்கும். சந்திரனை அடிப்படையாகக் கொண்டுள்ள
'கோசாரம்' மதியைக் குறிக்கும்.
ஒரு சிறிய கதை......
எழு நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. மைசூர்ப்பகுதியில் ஓர் ஏழை.
செல்வம் வேண்டி நீண்டகாலம் திருமகளைஉபாசித்துவந்தான்.
லட்சுமியும் தோன்றினாள்.
" உனக்கு செல்வம் இந்த ஜென்மத்தில் கொடுத்துவைக்கவில்லை."என்று
கூறினாள். அந்த ஏழை, உடனடியாக 'ஆபத் சன்னியாச' முறையில்
தன்னையே சன்னியாசியாக்கிக் கொண்டுவிட்டான்.
"அம்மா! 'சன்னியாசம்' என்பது மறுபிறவி போன்றதே! ஆகவே இப்போது
எனக்கு செல்வம் வழங்க அட்டி ஒன்றும் இல்லையே?" என்று லட்சுமியைக்
கேட்டான்.
லட்சுமியும் பொன்மழையைக் கொட்டச்செய்தாள்.
அதை அள்ளப் போனவனிடம் கேட்டாள்,
"சன்னியாசிக்கு ஏனப்பா, இவ்வளவு செல்வம்?"
(அந்த மகான் வித்யாரண்யர் அந்த செல்வத்தையெல்லாம் என்ன செய்தார்
என்பது வேறொரு கதை. அதனை 'நவராத்திரி நாயகி' மடல் தொடரில்
சொல்லியிருக்கிறேன். அதில் பார்த்துக்கொள்ளுங்கள்)
மணி, மந்திர, ஒளஷதங்கள் முதலிய முறைகளினால் விதியை ஓரளவிற்கு
மாற்றியமைக்கலாம்.