From jaybee@... Fri Mar 22 07:43:45 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 22 Mar 2002 15:43:45 -0000
Received: (qmail 43580 invoked from network); 22 Mar 2002 15:43:42 -0000
Received: from unknown (66.218.66.216) by m10.grp.scd.yahoo.com with QMQP; 22 Mar 2002 15:43:42 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 22 Mar 2002 15:43:41 -0000
Received: from user (sp-198-112.tm.net.my [210.187.198.112]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GTD00B8PT0R89@...> for agathiyar@yahoogroups.com; Fri, 22 Mar 2002 23:43:41 +0800 (SGT)
Date: Fri, 22 Mar 2002 23:45:47 +0800
Subject: UVESaaminathaiyar and British Royalty
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020322234547.007523bc@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16759
அன்பர்களே,
தமிழ்த்தாத்தா உ.வெ.சாமிநாதய்யர் 'தர்பார்ப் பாட்டு'
என்றதொரு தலைப்பில் சில பாடல்களைப் பாடியுள்ளார்.
அதன் பின்னணி:
கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் இருந்து இந்தியா
1857-இல் விடுபட்டது. அதன்பின்னர் நேரடியாக பிரிட்டிஷ் அரசின்கீழ்
வந்தது. விக்டோரியா ராணியே இந்தியாவின் ராணியாக விளங்கினார்.
1880-களில் விக்டோரியா, இந்தியாவின் சக்கரவர்த்தினியாக
முடிசூட்டப்பட்டார். அவருடைய விருதுகள், 'Queen of England,
Scotland, Wales, and Northern Ireland and Dominions across the
Seas and Empress of India' என்று வழங்கப்பட்டன. 'Empressof India'
என்பது ஒரு தனிச்சிறப்பாகக் கருதப்பட்டது. இந்தியா, ஆட்சியமைப்பின்
அடிப்படையில் இரண்டு பெரும் பிரிவாகவிளங்கியது. பிரிட்டிஷாரின்
நேரடி நிர்வாகத்தில் உள்ள ரெஸிடெண்ட்ஸி இந்தியா; இந்திய
மகாராஜாக்கள், நவாபுக்கள் போன்றோரின் ஆட்சியில் விளங்கிய
சுதேசி இந்திய நாடுகள் - Native Indian States. அப்போதே
30 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அந்த இந்தியப்பேரரசில்
இருந்தனர். ஒரு துணைக்கண்டமாகவும் இந்தியா கருதப்பட்டது.
விக்டோரியா பேரரசியார்தான் பிரிட்டிஷ் அரசபரம்பரையில்
நீண்ட காலம் ஆட்சி புரிந்த இருவரில் ஒருவர். அவருடைய அறுபதாம்
ஆட்சியாண்டுவிழா உலகெங்குமுள்ள அனைத்து பிரிட்டிஷ் பேரரசின்
நாடுகளிலும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
அதன் பொருட்டு ஐயரவர்கள் 'விக்டோரியா மகாராணி பஞ்சகம்'
என்ற பெயரில் ஐந்து பாடல்களை இயற்றியுள்ளார்.
எக்காலத்திலும் இதமே புரிந்து அகண்ட மண்டலங்கள்
எவையும் காக்கும்
மிக்காராகிய நமது விக்டோர்யா அவர்கள் செங்கோல்
மேன்மை தன்னை
இக்காலத்து அறியாதார் எவர்?அதனை யாமேயோ
இசைக்க வல்லோம்?
தக்கார்சொல் அவர்க்கு நலம் தழைத்தோங்கக் கடவுள் புகழ்
சாற்றுவோமே.
என்பது இறுதிப்பாடல்.
தம்முடைய அறுபத்து நான்காம் ஆட்சியாண்டில் விக்டோரியா
இறந்தார். அடுத்து ஆட்சிக்கு வந்த ஏழாம் எட்வர்டு, பட்டத்துக்கு
வரும்போதே அறுபது வயதுக்கு மேற்பட்டு விளங்கினார்.
'மொட்டைத் தலை ராசா' என்ற செல்லப் பெயரைத் தாங்கி ஒன்பதே
ஆண்டுகள் இந்தியாவின் சக்கரவர்த்தியாக இருந்துவிட்டு மறைந்தார்.
அவருடைய மூத்த மகன், தம் இருபத்தெட்டாவது வயதில்,
திருமணம் நிச்சயமாகிய சிலகாலத்துக்குள் இறந்துவிட்டார். விக்டோரியா
ஆட்சியில் அது நிகழ்ந்தது. அப்போது எட்வர்டு வேல்ஸ் இளவரசர் பதவியில்
இருந்தார்.
அவருக்கு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட Mary of Teck,
எட்வர்டின் இரண்டாவது மகனாகிய ஜார்ஜுக்கு மணம் முடிக்கப்பட்டார்.
1901-இல் எட்வர்டு பதவிக்கு வந்ததும் ஜார்ஜ், வேல்ஸ் இளவரரசாகப்
பதவியேற்றார்.
1906-ஆம் ஆண்டில் அவர் வேல்ஸ் இளவரசராக இந்தியாவுக்கு
வந்தார். அதனை முன்னிட்டு பாரதியார் கவிதை இயற்றியுள்ளார்.
1910-ஆம் ஆண்டில் எட்வர்டின் மறைவுக்குப் பின்னர் ஐந்தாம்
ஜார்ஜ் என்ற பெயரில் மன்னராகவும் இந்தியாவின் பேரரசராகவும்
பதவியேற்றார்.
1914-ஆம் ஆண்டில் முதலாம் உலக யுத்தம் தோன்றியது.
ஜார்ஜின் மைத்துனராகிய ஜெர்மானியச் சக்கரவர்த்தியின்
ஜெர்மன் பேரரசுடன் யுத்தம்.
விக்டோரியா அரசியார் ஜெர்மன் அரசவம்சத்தைச் சேர்ந்தவர்.
Saxe-Coburg Gotha என்னும் பரம்பரையைச் சேர்ந்தவர். அவருடைய
மகள் வயிற்றுப்பேரன் தான் ஜெர்மன் கெய்ஸர் வில்ஹெல்ம். இன்னொரு
மகளின் வயிற்றுப்பேரன் ரஷ்யச்சக்கரவர்த்தி க்ஸார் நிக்கலாஸ்.
உலக யுத்தத்தில் இந்த மூன்று பேரரசுகளும் ஈடுபட்டன.
அந்தச் சமயத்தில் தம்முடைய ஜெர்மன் தொடர்புகள்
அனைத்தையும் ஜார்ஜ் மன்னர் அறுத்துக்கொண்டார். 'விண்ட்ஸர்' என்னும்
புதிய அரச பரம்பரையைத் தம்மிலிருந்து தொடங்கிக்கொண்டார்.
அவர் நேரடி அரசுவாரிசுரிமை இல்லாமற் பிறந்தவர்.
ஆனால் விதி அவரை எப்படி எப்படியோ தள்ளிக்கொண்டு வந்துவிட்டது.
இன்னும் என்னவெல்லாம் செய்தது என்று அடுத்துப்பார்ப்போம்....