From jaybee@... Fri Mar 22 15:31:35 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 22 Mar 2002 23:31:35 -0000
Received: (qmail 18491 invoked from network); 22 Mar 2002 23:31:34 -0000
Received: from unknown (66.218.66.217) by m12.grp.scd.yahoo.com with QMQP; 22 Mar 2002 23:31:34 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 22 Mar 2002 23:31:34 -0000
Received: from user (sp-103-20.tm.net.my [210.186.103.20]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GTE00E2EEOKME@...> for agathiyar@yahoogroups.com; Sat, 23 Mar 2002 07:31:33 +0800 (SGT)
Date: Sat, 23 Mar 2002 07:34:45 +0800
Subject: Re: [agathiyar] servai
In-reply-to: <002501c1d1c3$41d39de0$49261f18@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020323073445.0074d9dc@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16765

அன்புள்ள சுவாமிநாதன்,

>At 09:01 AM 3/22/02 -0800, you wrote:
>>மதுரைப் பக்கத்தில் சேர்வை என்ற
>>சாதியினர் இருக்கிறார்கள். சேர்வை
>>என்றால் என்ன பொருள் ?


'சேர்வைக்காரர்' என்பது முழுப்பட்டம். அதனுடைய சுருக்கமே
'சேர்வை', 'சேர்வார்' என்பது.

>>இவர்களும் முக்குலத்தோரை சேர்ந்தவர்களா ?


ஆம்.
முக்குலத்தோரில் மூன்று பெரும்பிரிவுகள் உள்ளன.
கள்ளர், மறவர், அகம்படியர் என்னும் அகமுடையார்.

மறவர்கள் தங்களுக்குரிய பட்டமாக 'தேவர்' என்ற பட்டத்தைப்
பயன்படுத்திக்கொள்வர்.

கள்ளர்களில் பதினெட்டு உட்பிரிவுகளும் அவற்றுக்குள் இன்னும்
உட்பிரிவுகளும் இருக்கும்.

பொதுவாக அவர்கள் 'அம்பலம்', அம்பலக்காரர்', 'சேர்வை',
'சேர்வார்' ஆகிய பட்டங்களை மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை
ஆகிய பகுதிகளில் போட்டுக்கொள்கிறார்கள். மன்றாயர், பல்லவராயர்,
காடுவெட்டி, காடவராயர், சோழகர், சோழர், இரட்டைக்குடையார்,
நாட்டார், தொண்டைமானார், தொண்டைமான் போன்ற சில பட்டங்களையும்
அவர்களில் சில குடியினர் போட்டுக்கொள்வார்கள்.

அகமுடையார், 'சேர்வை', 'சேர்வார்', 'பிள்ளை' என்னும்
பட்டங்களைப் போட்டுக்கொள்வார்கள்.
பிள்ளைமார்களில் சிலருக்கும் 'சேர்வார்' பட்டம் உண்டு.

அன்புடன்

ஜெயபாரதி
>>

==================>>