From ganapathi s@... Fri Mar 22 20:56:47 2002
Return-Path:
X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Mar 2002 04:56:47 -0000
Received: (qmail 64195 invoked from network); 23 Mar 2002 04:56:46 -0000
Received: from unknown (66.218.66.216) by m11.grp.scd.yahoo.com with QMQP; 23 Mar 2002 04:56:46 -0000
Received: from unknown (HELO mailweb15.rediffmail.com) (203.199.83.27) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 23 Mar 2002 04:56:44 -0000
Received: (qmail 32412 invoked by uid 510); 23 Mar 2002 04:53:28 -0000
Date: 23 Mar 2002 04:53:28 -0000
Message-ID: <20020323045328.32410.qmail@...>
Received: from unknown (203.199.240.170) by rediffmail.com via HTTP; 23 Mar 2002 04:53:28 -0000
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar]Ramanar
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
Content-Disposition: inline
From: "Madhurabarathi"
Reply-To: "Madhurabarathi"
X-Yahoo-Group-Post: member; u=83645613
X-Yahoo-Message-Num: 16776


கடவுளிடமோ, குருவிடமோ ஒருவர் சரணடைந்துவிட்டால், அவர் சரணடைந்த சக்தியே அவரைச் சரியான பாதையில் அழைத்துச் செல்லும். செல்லும் வழியைப்பற்றி அவர் இனியும் கவலைப்பட வேண்டியதில்லை. குருநாதரை முழுதும் பணியாத போதுதான் சந்தேகம் எழும்.

--- பகவான் ரமணர்.

கடுமையான ராஜஸ குணம் சாத்துவிகமாகமாறும். ரத்னாகரன் என்ற வேடன் வால்மீகி முனிவனானான். முதலில் கவுராங்கரின்மேல் கல்லெறிந்த ஜகாய் மற்றும் மதய் ஆகியோர் அவரது முதல் சீடராயினர்.

---பதஞ்சலி யோகசூத்திரம் (II-18) விளக்கத்தில் சுவாமி சிவானந்தர்

--------------

ரமண மகரிஷி - 13
============

ரமணரின் மேன்மையைப் படிப்பதனாலே எமக்கெல்லாம் புண்ணியம் என விதந்து எழுதியிருந்தார் பெரியண்ணன் சந்திரசேகர் அவர்கள். உண்மைதான். அதைச் சற்று வித்தியாசமாக அணுக விழைகிறேன். புண்ணியம் என்பது மறுமைக்கான பயன்பாடு என்கிற பட்சத்தில் அதைப்பற்றி எனக்குஅக்கறையில்லை. "வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல்" நமக்கு மிக முக்கியம். ஆகவே, இத்தகைய ஒப்பில்லாப் பெரியோரின் பண்புகளை நாம் திரும்பத் திரும்பப்
படிக்கையில் நம் மனதில் அவை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அப்பண்புகளில் சிறிதேனும் நம்மில் உரசிக்கொண்டு, நம்மையும் உயர்த்துகின்றன. இதை எழுதுகிற என்னிலும் படிக்கின்ற உம்மிலும் சான்றாண்மை வலுவடைகின்றதை. எதிர்மறையான குணங்களின் ஆணிவேர் ஆட்டம் காணத்தொடங்குகிறது. தொடர்ந்து செய்கையில் நமது மாற்று கூடிக்கொண்டே போகிறது.

அவ்வாறு நிகழ்வது மிக நுண்ணியதானதாகவும் புலப்படாததாகவும் இருக்கலாம். ஆனாலும் தொடர்ந்த காலப்போக்கில் நம்மில் கணிசமான மேன்மை ஏற்படுவது தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. இனி மேற்கொண்டு தொடர்வோம் கதையை:

"உனது குரு எனச் சொல்லிக் காசு வசூலிப்பேன்" எனக்கூறிய பாலானந்தாவின் திமிர் எத்தனை அதிகமாயிற்றென்றால் குகையின் முன்புறமே சிறுநீர் முதலியன கழிக்கத் தொடங்கினார். ரமணர் எதுவும் சொல்லவில்லை. மறுநாள் காலை பாலானந்தா குளத்திற்குச் சென்றார். பழனிச்சாமி என்கிற சீடர் முன்வாசலைக் கழுவிவிட்டார். பாலானந்தாவின் துணிமணிகளைத் தூக்கி வெளியே எறிந்துவிட்டுக் குகையின் முன் தாழ்வாரக் கதவைப் பூட்டினார். பட்டுத்துணியில் பூவேலை செய்த ஆடைகள் பாலானந்தாவிடம் இருந்தன.

திரும்பி வந்து பார்த்த பாலானந்தாவின் கோபம் உச்சத்தில். எப்படி என் துணிகளைத் தொட்டாய் எனப் பழனிச்சாமியிடம் இரைந்த பாலானந்தா, உடனடியாகப் பழனிச்சாமியை வெளியேற்ற ரமணருக்குக் 'கட்டளை'யிட்டார். மிகுந்த கோபத்தில் பகவான்மேல் காறித் துப்பினார். பகவான் சலனமற்றிருந்தார். பக்தர்களும் அமைதி காத்தனர். அந்தக் குகையிலிருந்து சற்றுக் கீழே இருந்த ஒரு பக்தர் இதைக் கேள்விப்பட்டுப் பதைத்து ஓடிவந்தார். "நீ...பகவான் மேல் துப்பினாயா!" எனக் கூக்கரலிட்டவாறு அடிக்கப் போனார். அவரைத் தடுக்க மிகச் சிரமப்பட்டது.

தான் வரம்பு கடந்துவிட்டதைப் பாலானந்தா புரிந்துகொண்டார். இனித் திருவண்ணாமலையில் பத்திரமாக இருப்பது இயலாது எனத்தோன்றிவிட்டது. ரயில் நிலையத்துக்குப்போன பாலானந்தா அடுத்து வந்த வண்டியில் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் ஏறி அமர்ந்தார். (அப்போதெல்லாம் ரயிலில் மூன்று வகுப்புகள் இருந்தன.) கையில் பயணச்சீட்டெல்லாம் கிடையாது.

அந்தப் பெட்டியில் இளம் தம்பதியினர் இருப்பதைப் பார்த்ததும் தன் வேலையை மீண்டும் தொடங்கினார் பாலானந்தா...

பெருங்கருணையாளனின் அருளாலே மேலும் தொடரும்.

அன்புடன்

மதுரபாரதி