From poo@... Sat Mar 30 09:14:55 2002
Return-Path: X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 30 Mar 2002 17:14:55 -0000
Received: (qmail 4740 invoked from network); 30 Mar 2002 17:14:52 -0000
Received: from unknown (66.218.66.218) by m9.grp.scd.yahoo.com with QMQP; 30 Mar 2002 17:14:52 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 30 Mar 2002 17:14:50 -0000
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in (unknown [203.199.227.22]) by giasmd01.vsnl.net.in (Postfix) with ESMTP id 6FEA71EE; Sat, 30 Mar 2002 22:50:45 +0530 (IST)
Message-Id: <4.3.0.20020330204308.02cac100@...>
X-Sender: poo/giasmd01.vsnl.net.in@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Sat, 30 Mar 2002 20:45:07 +0300
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com
Subject: puuvirunthavalli
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan Ramasamy X-Yahoo-Group-Post: member; u=23389931
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 16908
அன்புள்ள இணையத்தாருக்கு,
நேற்று வேலை காரணமாய் சென்னை வந்து சேர்ந்தேன். இங்கு பத்து நாட்கள் இருப்பதாகத் திட்டம். பிறகு
திரும்பவும் சவுதி போக ஏற்பாடு.
இன்று பூவிருந்தவல்லியில் இருக்கும் திருக் கச்சி நம்பிகள் வரதராசப் பெருமாள் கோயிலுக்குப்
போய்வந்தேன். திருக் கச்சி நம்பிகள் இளையாழ்வார் இராமானுசருக்கு அய்யம் தீர்த்தவர். இந்த ஊரில்
தோன்றியவர். கச்சி வரதனுக்கு பூக்களைத் தொடுத்தே பணி செய்தவர். இந்தக் கோயிலில் அவருக்காக
நின்று, இருந்து, கிடந்த கோலமாக, பெருமாள் சீனிவாசனாகவும், வரதராசனாகவும், அரங்கநாதனாகவும்
காட்சி அளிக்கிறார்.
கோயில் பெருஞ் சோழர் காலத்தது என்று அங்கு எழுதியிருக்கிறார்கள்; ஆனால் இது கற்றளி இல்லாது
இருக்கிறது (?). இப்பொழுது அரசின் பராமரிப்பில் உள்ளது. 23 ஆண்டுகளாக குட முழுக்கு அரசின்
முயற்சியில் நடக்காத நிலையில் யாரோ தனியார் முயற்சியில் செய்ய முற்படுகிறார்கள். இளங்கோயிலில்
(வட மொழியில் பாலாலயம்) உலத்தரை (உலுத்து > உலத்துதல் = கோயிலைச்சுற்றிவருதல்; உலுத்து >
உலுத்தம்; இந்தச் சொல் வடமொழியில் உலுத்தம்>உல்த்ஸம்>உத்ஸம்>உத்ஸவம் எனத் திரியும்) மட்டுமே சேவை
செய்ய முடிந்தது. மூலவரின் கருவறை முடிக் கிடந்தது; மூலத் திருமேனியைக் காணமுடியவில்லை. உலாத்
திருமேனி அலாதியான அழகு.
தாயார்: பூவிருந்த வல்லி. வடமொழித் தாக்கத்தில் புஷ்பவல்லியாகிக் கிடக்கிறாள். இங்கேயும் முலவள்
அழகைக் காண முடியவில்லை. சரி, நமக்குஇன்று இட்டது இவ்வளவுதான் போலும் என்று எண்ணி வெளியில்
வரும்போது பெரிய கோபுர நடைவாயிலில் எழுதியிருந்த பலகையைப் படிக்கத்தொடங்கினேன்.
"முதலாம் பராந்தகன் (கி.பி. 907-954) காலத்திய கல்வெட்டில் 'புலியூர்க் கோட்டத்து பூந்தண்மலி
நெடுஞ்செழிய விண்ணகர்' என்று தல வரலாறு பற்றிக் குறிப்பதாக" அங்கு எழுதியிருந்தது. கீழே திருக்
கச்சி நம்பிகள் பற்றியும் எழுதியிருந்தது.
1. இந்தக் கல்வெட்டை அங்கு நான் கண்டேன் இல்லை; இதைப் பற்றிக் கேள்விப்பட்டவர் உண்டா? தெரிந்தவர்கள்
சொல்லுங்கள்.
2. இந்தக் கேள்விக்கு முன், கோட்டம் பற்றிச் சிறு விளக்கம்.
தமிழகத்தில், அந்தக் காலத்தில் இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலம் கோட்டம் எனப்படும்.
தொண்டை மண்டலத்தில், வடபெண்ணை முதல் ஆரணியாறு வரை உள்ள பகுதி பையூர்க் கோட்டமாகும், இதில்
இன்றைய நெல்லூர் மாவட்டமும், செங்கழுநீர்ப்பட்டு பொன்னேரி வட்டமும் அடங்கும். அடுத்து ஆரணியாற்றிற்கும்,
கூவம் ஆற்றிற்கும் இடைப்பட்டது புழற்கோட்டம்; இதனுள் பொன்னேரியும் திருவொற்றியூரும், அயம்புரமும்
(இன்றைய அயனாவரம்) அடங்கும். அடுத்து கூவம் ஆற்றிற்கும், அடை ஆற்றிற்கும் இடைப்பட்டது புலியூர்க்
கோட்டம். இதற்குள் மயிலார்ப்பூர், எழுமூர், கோட்டூர், திருவான்மியூர், குன்றத்தூர், போரூர், மாங்காடு,
அமரூர் முதலியன அடங்கும். இந்த வகையில் பூவிருந்தவல்லி இதற்குள் அடங்குவது இயற்கைதான்.
இந்தப் புலியூர் என்பது கோடம்பாக்கம் என்று இன்று அழைக்கப் படும் கோடகன் பாக்கத்தைக் குறிக்கும்.
கோடகன் பாக்கத்தில் காணப்படும் வியாக்கிரபுரீசுவரர் கோவில் பற்றிய எண்ணம் புலியூர் பற்றி உறுதி
செய்கிறது. (வியாக்கிரம், புலி,வேங்கை என்பன ஒரு பொருட் சொற்கள்; வியாக்கிரம் பூசித்த ஊர்
வியாக்கிரபுரி; புலி பூசித்திருந்த ஊர் புலியூர், வேங்கை பூசித்திருந்த இசர் வேங்கீசர் என்றும் சென்னை
மாவட்டக் கோவில் வரலாறு சொல்லும்.
(ஆதாரம்:
1. சென்னை - 1639-க்கு முன், பின். முனைவர் கு. ப்கவதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
113, 1995;
2.தமிழ்நாடு பெயர் வரலாறு - ஔவை. சு. துரைசாமி, தமிழ்நாடு -பெயர்-வரலாறு - www. intamm
என்ற வலைதளத்திற்குப் போய் இந்தக் கட்டுரையைக் காணலாம்)
காட்டுப் பகுதிகளை மிகுதியாக உடையசென்னைப் பகுதியில் புலிகள் அன்று காணப் பட்டிருக்கலாம்.
இன்றைக்கும் கூட இந்திய நுட்பியல் நிறுவனம், ஆளுநர் மாளிகை அருகில் காணும் காடு அந்தக் காலத்தில்
விரிந்து பரவி, மான்களோடு புலிகளும் மேய்ந்த நிலையில் இருந்திருக்கலாம்.
இன்றும் கோடகன் பாக்கத்தில் பல இடங்களில் புலியூர் என்ற பெயர் வழங்கி வருகிறது.
இந்தப் புலியூர்க் கோட்டம் என்ற பெயர் பல்லவர் காலத்திற்கு முன் வழங்கியிருந்ததா? குறிப்பாகக் கழகக்
காலத்தில்?
3. நெடுஞ் செழியன் என்ற பெயர் கழகக் காலத்தது அல்லவா? நெடுஞ் செழிய விண்ணகரம் என்பது சரியா?
அல்லது இது முதலாம் பராந்தக நெடுஞ் சடையன் (ஜடில பராந்தகன்) என்ற பாண்டியனைக் (களப்பிரர்
காலத்திற்குப் பிற்பட்டவன்) குறிக்கிறதா? இந்த மறுமலர்ச்சிப் பண்டியரில் ஒருவனோ, இருவரோ தீவிர
விண்ணெறியாளன் அல்லவா?
4. இந்தக் கோயில் சோழன் கட்டியதா? பாண்டியன் கட்டியதா?
5. பூந்தண்மலி பூந்தமல்லியானதா? பூவிருந்தவல்லி பூந்தமல்லியானதா?