From naga ganesan@... Sun Mar 31 11:09:52 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 31 Mar 2002 19:09:51 -0000
Received: (qmail 86517 invoked from network); 31 Mar 2002 19:09:51 -0000
Received: from unknown (66.218.66.217) by m8.grp.scd.yahoo.com with QMQP; 31 Mar 2002 19:09:51 -0000
Received: from unknown (HELO n4.grp.scd.yahoo.com) (66.218.66.88) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 31 Mar 2002 19:09:51 -0000
Received: from [66.218.67.189] by n4.grp.scd.yahoo.com with NNFMP; 31 Mar 2002 19:09:51 -0000
Date: Sun, 31 Mar 2002 19:09:50 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Kamban aDiyArkaL (was: r/R maaRRam)
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3499
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.229.159
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16925


அன்பு நண்பர் ஹரி கிருஷ்ணன் எழுதினார்:
<<<
தரையறியும் மீன் கூட்டம் என்ற கவிதையில் எதுகைக்காக நான் 'ர'கர 'ற'கர மாறுதல் செய்ததும் பிறகு அதன்
தொடர்பாக நடந்த விவாதங்களும் நினைவிருக்கலாம். இதற்கு முன் உதாரணங்கள் உண்டு என்று
சொல்லியிருந்தேன். கம்பனில் சில இடங்களில் பார்த்திருக்கிறேன் என்றும் சான்று தருகிறேன் என்றும்
சொல்லியிருந்தேன்.

இன்னும் கம்பனிலிருந்து சான்று நினைவுக்கு வந்தபாடில்லை. தக்கை ராமாயணம் என்று எம்பெருமான்
கவிராயர் பாடியதை அன்பர் நாக. கணேசன் வலையேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். நானும் அந்த
முயற்சியில் பங்கேற்றிருக்கிறேன். மிக அற்புதமான சந்தக் கட்டுள்ள பாடல்கள். அவற்றை உள்ளிடுவதே
இனிய அனுபவமாக இருக்கிறது. தக்கை ராமாயணத்தில் கிடைத்த 'ர'கர 'ற'கர மாற்ற ஆட்சியைக் கீழே
தருகிறேன்.


. . செறிவயிரம் மணிக்கனகம்
. . . செய்யவையம் தனில்மடவார்
. . அறுபதினா யிரம்சூழ
. . . அண்ணலைஈன் றவளும்வந்தாள்
. . மறுவறுமா தவர்க்குள்வந்தான்
. . . வசிட்டனும்வெண் குடைநிழற்கீழ்
. . சறுவரும்போற்று இருவரும்போல்
. . . தம்பியராம் இஇருவர்வந்தார்.

சர்வரும் (எல்லே ராம், ஆங்கில சர்வர் இல்லை!) என்ற சொல் சறுவர் என்று மாற்றி ஆளப்பட்டடிருப்பதைக்
கவனிக்கவும். இது அச்சாரம்தான். இன்னும் சான்றுகள் தருகிறேன்.
>>>

இந்தத் தக்கைச் சந்தப் பாடலுக்கு கம்பன் மூலப் பாட்டுகள்:

எழுச்சிப் படலம்

துப்பினின், மணியின், பொன்னின், சுடர் மரகதத்தின், முத்தின்,
ஒப்பு உற அமைத்த வையம், ஓவியம் புகழ ஏறி,
முப்பதிற்று இரட்டி கொண்ட ஆயிரம், முகிழ் மென் கொங்கைச்
செப்பு அருந் திருவின் நல்லார், தெரிவையர் சூழப் போனார்

செவி வயின் அமிர்தக் கேள்வி தெவிட்டினார், தேவர் நாவின்
அவி கையின் அளிக்கும் நீரார், ஆயிரகோடி சூழ,
கவிகையின் நீழல், கற்பின் அருந்ததி கணவன், வெள்ளைச்
சிவிகையில், அன்னம் ஊரும் திசைமுகன் என்ன, சென்றான்.

பொருகளிறு, இவுளி, பொன் தேர் பொலங் கழல் குமரர், முந்நீர்
அரு வரை சூழ்ந்தது என்ன, அருகுபின் முன்னும் செல்ல,
திரு வளர் மார்பர், தெய்வச் சிலையினர், தேரர், வீரர்,
இருவரும், முனி பின் போன இருவரும் என்ன, போனார்.

------------

வியக்கத் தக்க வேகத்தில் தக்கை இணையம் ஏறுகிறது.
கம்பனுக்கு யோகம்தான்: வாழையடி வாழையாக எம்பெருமான்
கவிராயரும், கவிஞர் ஹரியும் கிடைத்தது.

எம்பெருமானார் சறுவர் (எதுகை நோக்கி ரகரம் றகரமாக
வலித்தது) என்று ஆள்வதை நீங்கள் காட்டியது,
பருந்து என்பதன் சொல்வேரைக் காட்டிற்று.
பாறுதல் - கிழித்தல், வெட்டுதல். பறந்தலை = அமர்க்களம்,
இதுவே, பருந்து, பாறுதல், பறந்தலை என்பதில் ஆட்சி.

-----------

யுத்த காண்டம் கம்பனில் மிக அழகானது, நெடியது.
நிறையப் பேர் முழுமையும் படித்திருக்க மாட்டார்கள். அரிக்கிருட்டிணனார்,
மதுரபாரதியார் போலச் சிலரே உண்டு. தக்கை ராமாயணம்
யுத்தகாண்டம் இன்னும் அச்சாகவில்லை. முதலில்
வாழையடிவாழையாக கம்பனுக்கு மதுரைத்திட்டத்தில் முதல்
மின்வாழையாகும்.

யுத்த காண்டம்
கடவுள் வாழ்த்து (கம்பன்)

"ஒன்றே என்னின் ஒன்றேயாம்
. . . பல என்று உரைக்கின் பலவேயாம்
அன்றே என்னின் அன்றேயாம்
. . . ஆமே என்னின் ஆமேயாம்
இன்றே என்னின் இன்றேயாம்
. . . உளது என்று உரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடி வாழ்க்கை
. . . நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!"

இதை அப்படியே மாற்றி எம்பெருமான் கவிராயர்
தக்கை ராமாயணம் பாடுகிறார்:

இல்லதும்நீ; உள்ளதும்நீ;
. . . ஏகமும்நீ; அநேகமும்நீ;
அல்லதும்நீ; ஆவதும்நீ;
. . . அறிந்தடையும் வகைஅரிதால்;
நல்லதுநின் குடில்வாழ்க்கை;
. . . நாங்களுய்யு மாறுஅருளாய்;
கல்லதுபெண் உருக்கும்
. . . கழல்துகளாய்! காரணனே!


கம்பன் அடியார் எம்பெருமான், ஹரிகிருஷ்ணன் ஊழி பல வாழி!

அன்புடன்,
நா. கணேசன்