From arull@... Mon Apr 01 04:10:12 2002
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 1 Apr 2002 12:10:11 -0000
Received: (qmail 28419 invoked from network); 1 Apr 2002 12:10:11 -0000
Received: from unknown (66.218.66.216) by m2.grp.scd.yahoo.com with QMQP; 1 Apr 2002 12:10:11 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 1 Apr 2002 12:10:11 -0000
Received: from tm.net.my (sja-179-47.tm.net.my [202.188.179.47]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GTW0022V1SXOA@...> for agathiyar@yahoogroups.com; Mon, 01 Apr 2002 20:10:10 +0800 (SGT)
Date: Mon, 01 Apr 2002 20:06:18 +0800
Subject: திருமுறைத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3CA84D3A.2A9230F3@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 16936

திருச்சிற்றம்பலம்

திருமுறைத்தியானம்

ஸ்ரீமடம் ஆஸ்தான வித்வான் புலவர்.
பு.மா.ஜய செந்தில்நாதன்

மார்ச்சு 17

திருநாவுக்கரசர்

அன்பிலாலந்துறை

சத்தியவாகீஸ்வரர் - சௌந்தரநாயகி

"அன்பிலாலந்துறை அரசே போற்றி"

பிறவிமாயப் பிணக்கில் அழுந்தினும்
உறவெலாஞ் சிந்தித்து உன்னி உகவாதே
அறவன் எம்பிரான் அன்பிலாலந்துறை
மறவாதே தொழுதேத்தி வணங்குமே.

நன்னெஞ்சே! உனக்கொன்று சொல்லுவேன் கேள்.
பிறவியெனும் மாயப் பிணக்கில் அழுந்தித்துன்புறுங் காலத்து
உலக உறவுகள் எவையும் உனக்கு ஒருபோதும் உதவமாட்டா.
தருமத்தின் வடிவானவனும், அன்பிலாலந்துறையில்
எழுந்தருளியிருப்பவருமாகிய எம்பெருமானை (நெஞ்சே)
மறவாது தொழுதால் உய்வு பெறுவாய்.

எனவே ஆலந்துறையார் அடிமலர்ப் பணிந்தால்
அன்புடன் வாழ்வதற்கு ஐயுறவில்லை என்பதை யுணர்ந்து
ஒன்றுபட்டுத் தொழுது உய்தி பெறுவாயாக!

திருச்சிற்றம்பலம்

ஓதுவார்
பினாங்கு.