From arull@... Mon Apr 01 04:12:12 2002
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 1 Apr 2002 12:12:12 -0000
Received: (qmail 16165 invoked from network); 1 Apr 2002 12:12:12 -0000
Received: from unknown (66.218.66.217) by m5.grp.scd.yahoo.com with QMQP; 1 Apr 2002 12:12:12 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 1 Apr 2002 12:12:12 -0000
Received: from tm.net.my (sja-179-47.tm.net.my [202.188.179.47]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GTW00A3F1WA60@...> for agathiyar@yahoogroups.com; Mon, 01 Apr 2002 20:12:11 +0800 (SGT)
Date: Mon, 01 Apr 2002 20:08:19 +0800
Subject: திருமுறைத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3CA84DB3.5A668E39@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 16938
திருச்சிற்றம்பலம்
திருமுறைத்தியானம்
ஸ்ரீமடம் ஆஸ்தான வித்வான் புலவர்.
பு.மா.ஜய செந்தில்நாதன்
மார்ச்சு 19
திருஞானசம்பந்தர்
திருப்பாற்றுறை
(திருப்பாலத்துறை)
ஆதிமூலேஸ்வரர் - மேகலாம்பிகை
"திருப்பாற்றுறை உறை தேவே போற்றி"
போது பொன்திகழ் கொன்றை புனைமுடி
நாதர் வந்து என் நலங் கொண்டார்
பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை
வேதம் ஓதும் விகிர்தரே.
அன்பர்காள்! தூய வேதத்தை ஓதுகின்ற வித்தகரும்,
அன்பொழுகு அடியவர்களும் ஒன்று கூடித் தொழுகின்ற
மலரடிகளையுடையவரும், திருப்பாற்றுறைத் தலத்தில்
வீற்றிருப்பவருமாகிய விகிர்தனார்,
பொன்னிறக் கொன்றை மலர்சூடிய குழகனார்; என்
தலைவர்;தானே என்னைத் தேடி வந்து,என் வழிபடு நலத்தைத்
தானேற்று, எனக்கும் தன் அருள் நலத்தை வழங்கினார்.
நீங்களும் பாற்றுறை மேவிய பரனைத் தொழுது
நலமடைவீர்களாக!
வேற்றுரையறியாது விருப்பினொடு
பாற்றுறையே பேசுமின் - பார் போற்ற வாழ்மின்!
திருச்சிற்றம்பலம்
ஓதுவார்
பினாங்கு.