From arull@... Tue Apr 02 04:15:57 2002
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 2 Apr 2002 12:15:57 -0000
Received: (qmail 56128 invoked from network); 2 Apr 2002 12:15:54 -0000
Received: from unknown (66.218.66.217) by m3.grp.scd.yahoo.com with QMQP; 2 Apr 2002 12:15:54 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 2 Apr 2002 12:15:54 -0000
Received: from tm.net.my (sja-179-120.tm.net.my [202.188.179.120]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GTX004D6WQE3N@...> for agathiyar@yahoogroups.com; Tue, 02 Apr 2002 20:15:53 +0800 (SGT)
Date: Tue, 02 Apr 2002 20:11:55 +0800
Subject: திருமுறைத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3CA9A00B.A9B3BC9E@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 16957

திருச்சிற்றம்பலம்

திருமுறைத்தியானம்

ஸ்ரீமடம் ஆஸ்தான வித்வான் புலவர்.
பு.மா.ஜய செந்தில்நாதன்

ஏப்ரல் 2

திருஞானசம்பந்தர்

திருச்சிராப்பள்ளி

தாயுமானவர் - மட்டுவார்குழலி

"சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி"

நன்றுடையானைத் தீயது இல்லானை நரைவெள்ளேறு
ஒன்றுஉடையானை உமையொரு பாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூற என் உள்ளம் குளிரும்மே.

சிராப்பள்ளிச் செல்வமே! தீயது சிறிதும் இன்றி
நன்மையொன்றையே உடையவனே! முதிர்ந்த வெள்ளை
இடபத்தின் மேலேறி வந்தருளும் சடையனே!உமையை ஒரு
பாகத்திற் கொண்டு அர்த்தநாரியாகக் காட்சிதரும் பெருமானே!
பிறரால் சென்றடைய முடியாத மேலான வீடு பேறாகிய
செல்வத்தை அருள வல்ல செல்வமே! திருச்சிராப்பள்ளியில்
எழுந்தருளியுள்ள தாயுமானவப் பெருமானே! உன் உலப்பிலா
ஆனந்தம் பெருகுகின்றது.

திரிசிரபுரத்தோன் திருப்பெயர் சொல்லி

வருமின்ப சுகத்தில் வாழ்வோம் யாமே.

திருச்சிற்றம்பலம்

ஓதுவார்
பினாங்கு.