From nswaminathan@... Tue Apr 02 15:43:43 2002
Return-Path: X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 2 Apr 2002 23:43:42 -0000
Received: (qmail 60223 invoked from network); 2 Apr 2002 23:43:40 -0000
Received: from unknown (66.218.66.216) by m10.grp.scd.yahoo.com with QMQP; 2 Apr 2002 23:43:40 -0000
Received: from unknown (HELO orngca-mls03.socal.rr.com) (66.75.160.18) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 2 Apr 2002 23:43:40 -0000
Received: from default (cpe-24-31-38-73.socal.rr.com [24.31.38.73]) by orngca-mls03.socal.rr.com (8.11.6+Sun/8.11.3) with SMTP id g32NhQS21797; Tue, 2 Apr 2002 15:43:32 -0800 (PST)
Message-ID: <002d01c1da9f$d4fd2660$49261f18@...>
To: , Cc: Subject: Patti ManRam - 1
Date: Tue, 2 Apr 2002 15:40:49 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 6.00.2600.0000
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V6.00.2600.0000
From: "Narayan Swaminathan" X-Yahoo-Group-Post: member; u=65016889
X-Yahoo-Message-Num: 16966
பட்டி மன்றம்
"தமிழ் வழிக் கல்வியால் தமிழனுக்கு உயர்வா தாழ்வா" என்ற தலைப்பில்
நடக்கும் இந்த பட்டி மன்றத்துக்கு வந்ததற்கு நன்றி.
இப்பொழுது "உயர்வு" அணியில் தமிழரசன் பேசுவார்:
தமிழ் வழிக் கல்வியால் தமிழனுக்கு உயர்வு
சந்தேகமாய்யா உங்களுக்கு?
இதுக்கு பட்டி மன்றம்மா தேவை?
கைப்புண்ணுக்கு கண்ணாடியாம்பாங்க...
கற்க ஒருவன் தாய்மொழியை விட எளிமையானது எதாக இருக்க முடியும்?
ஏன்யா சும்மா சீரழிஞ்சு போறீங்க?
ஜப்பான், சீனா, ருசியா, செர்மனி, பிரான்சு போல பல வெளிநாடுகளில்
மக்கள் தங்கள் தாய்மொழியில் தானே கற்கிறார்கள். இல்ல வெளிநாட்டு
மொழிதான் வேண்டும்னு அடம் புடிக்கறானா? தமிழன் புத்தி மட்டும்
ஏன் இப்படி இருக்கு?
ஒரு கருத்தைப் புரிந்து கொள்வது தாய்மொழியில்தானே எளிது ?
சோறு போடு, இன்னம் கொஞ்சம் பொறியல் போடுன்னு வீட்ல தமிழ்லதான கேட்கற?
'கிவ் மி ரைஸ், கிவ் மி பொறியல்'னு சொல்லிப்பாரேன்..மண்டையில கரண்டி விழாது?
நீ என்ன வெள்ளைக்காரனா? நீ டமில், டேன்சூர், டிரிச்சி ,டமிலியன்னு சொல்ரச்சே எனக்கு பத்திக்கிட்டு வருது...ஒன்வாயில தமிழ், தஞ்சாவூர், திருச்சினாப்பள்ளி,
தமிழன்னு வராதாக்கும்..அப்டின்னா அந்த நாக்குல நெருப்பு வெச்சா என்ன?
தமிழ் கற்பதில் ஏன் தாழ்வு மனப்பான்மை ?
மலயாளத்தான் மலயாளத்துல பேசறான், தெலுங்கன் தெலுங்குல பேசறான்,
இந்திக்காரன்..கன்னடக்காரன்..வங்காளத்தான்...எல்லாரும் தன் மொழிய
பேசரான்..
ஒனக்கு மட்டும் என்ன கேடு வந்திச்சு. ஒனக்கு தமிழ் தெரியாதுன்னு சொல்லிக்கறதுல
ஏன் இந்த பெருமை? தமிழ் என்ன பாவம் பண்ணிச்சு?
தமிழில் கற்ற அறிஞர்கள் இன்று வெளிநாடுகளில் சிறப்பாக இல்லையா?
கணினில தமிழ் எழுத சொல்லித்தாராங்க சிங்கப்பூர்ல.
ஆன்மீகத்தப்பத்தி ஆங்கிலத்துலயும் தமிழ்லயும் மலேசியால எழுதி தள்றாங்க.
நீ அதை "செட்டியார் லோகாயதா"ன்னு படிச்சிட்டு ஏதோ சாதி வெவகாரம்னு
ஒதுங்கிடறே. வலையில தனியா இடம்போட்டு பழைய புத்தகங்களை பத்தி எழுதராங்க.
நீ பாபிலோனிய பூசாரிணி உரல் எங்கேன்னு தேடிட்டு இருக்க.
பாஞ்சாலி சபதம் போடறான்யா அமெரிக்கால...நீ பலே பலேன்னு மலே மலே பாக்குற..
செர்மனிலருந்து ஓலச் சுவடியத் தேடிட்டு பொட்டைக்காட்டுக்கு ஓடறான்யா ஒரு ஆளு..
நீ பன நுங்கு தின்னிட்டு கைய நக்கிட்டுஓலையில கையத் தொடைக்கிறே...
காவடிச்சிந்து எழுதறான்யா 'கானடா ஒரு தேசம்'னு. நாக பந்தம் எழுதறானய்யா...நீ தமிழுக்கு நெருப்பு பந்தம் புடிக்குற...
தமிழ்லயும் இங்கிலீசுலயும் பொளந்து கட்டுரானுங்க நம்ம ஆளுங்க?
படிச்சிட்டுதான இருக்க? ஒரு டாக்டரு வேல மெனக்கிட்டு தமிழ்ல அகராதி
போடறாருய்யா..கணினில தமிழ் காலகாலமா இருக்கணுனு நூலகம் ஒருத்தர்
வெக்கிறாரு..அதுக்கு எத்தினி பேரு உதவராங்க..
பரிமேலழகர் உரைய இன்னொருத்தர் எழுதி முடிச்சிட்டாருன்னு தெரியாமலே
லொட்டு லோட்டுனு தட்டிக்கிட்டு ஒருத்தர்அந்த உரையை இன்னம் எழுதிட்டிருக்காரு
லாஸ் ஏஞ்சலுசுல ? ஏன் ? அறியாமைன்னு சொல்லாத..ஆர்வம் தான்..
தஸ்கின்னு தகுதர எழுத்து பண்ணறாங்க.. தமிழ் நாட்டுல இருந்து கொண்டு
நீ அது மலிவு விலை விஸ்கியான்னு கேட்டுகிட்டு திரியற..இங்க வெள்ளைக்காரன்
தமிழ் படிச்சு பேராசிரியரா தமிழ் சொல்லித்தரான்...நீ "பாபா பாபா ப்ளாக்ஷீப்
ஹாவ் யூ எனி உல்"னு பாடற.. வெய்யிலுக்கு உல்லா கேக்குது ஒனக்கு?
உனக்கு மட்டும் ஏன் இப்ப தமிழ் வாணாம்? நீ அவங்கள விட பெரிய
மனிசனாயிட்டயா?
வெளிநாட்டு அறிஞர்கள் தங்கள் பொன்னான நேரத்தில் தொழில்நுட்ப
சொற்களுக்கு தமிழில் சொல் கண்டுபிடித்து எழுதவில்லையா? ஸ்கேனருக்கு
ஒளிவருடி, டாட்டபேசுக்கு தகவல்தளம், சர்ச் எஞ்சினுக்கு தேடி..பேஜருக்கு கூவி ...
ஆகா..ஆகா.. கேட்கவே இனிமையாக இல்லை? அற்பர்களே ஏன் ஆங்கிலத்துக்கு அடி
வருடுகிறீர்கள்?
தமிழனுக்கு தமிழந்தான் எதிரி. தமிழ் தெரிஞ்சவனே ப்ரெளசர்ங்கறான்..
'என் ப்ரெளசரில் மெசேஜ் பட்டன் ஒர்க் செய்யவில்லை"ங்கறான்.
கவர் ஸ்டோரி...சூப்பர் ந்யூஸ்...யோவ் தமிழ்ல சொன்னா என்ன கேடு ?
ஆட்டோக்காரன் சொல்றான்யா "என்னா இடது வலதுன்னறே..
லெப்ட் ரைட்னு தமிழ்ல சொல்லித்தொலை"ங்கறான்.. ஒரு நாளைக்கி
அஞ்சு ரூபா சம்பாதிக்கரா கல்லு தூக்கி பொம்பிளை, புள்ளை கிட்ட சொல்றா
"அம்மான்னு சொல்லாத..மம்மி"ன்னி சொல்லுடானு..தேவையா இது நாட்டுக்கு ?..
ஆப்ரிக்கக் காட்டுவாசி கூட "ஜப்மொ, லம்போ, திம்போ"னு தன் மொழியை
பெருமையா பேசறான்..உலக மொழியிலெயே பழமையானதும் முறையான இலக்கணம் உள்ளதும் இன்னும் (2000 வருசம் கழிச்சும்) வாழ்ந்திருக்கும் மொழியில பேச, கற்க ஒனக்குத் தயக்கம்,வெட்கம்..நீ உருப்பிடுவயா....இந்த மொழியில எது இல்லை? விமானம் பண்ணியிருக்கான் தமிழன், கப்பல் விட்டுருக்கான், வான சாத்திரம் தெரியும்,உலோகவித்தை தெரியும்...
கணிதம் தெரியும்..மாகாணின்னு கேள்விப்பட்டிருக்கயா? பெரிய சிறிய எண்களுக்கு
பேரு உண்டு தமிழ்ல..பதில் பாட்டு பாடலேன்னா காதை அறுத்திருக்கான்..
கழுவேத்தி இருக்கான்...
நாட்டை ஆண்டானே வெள்ளைக்காரன், அவனே தமிழை அழிக்கல..அவனே
சொன்னான்யா "we shall preserve the variety of native tongues in the British Empire
in their entirety for the sake of posterity"ன்னு. அவன் பைபிள தமிழ்ல எழுதி
பிரசாரம் பண்ணினான்..எழுத்து சீர் திருத்தம் பண்ணின்னான்..அச்சகம் வைத்தான்..நீ வெடி வைக்கப் பாக்குற...
தமிழ் மட்டும் தெரிஞ்ச ஆங்கிலம் கற்காத முதல்வர்கள் ஆண்ட நாடுய்யா இது.
வேட்டிய அவுத்து தலைப்பாகை கட்டுறமாதிரி உழச்சு சம்பாரிக்கற காசை
புள்ளைங்க இங்கிலீசுல படிக்க செலவழிக்கற. அதுஎன்னா படிக்குதுன்னு நீ கண்டே?
தமிழில் கற்பது தமிழனுக்கு உயர்வே தரும், தாழ்வு தராது எனக்கூறி விடை
பெறுகிறேன்...