From kisna@... Wed Apr 10 08:51:15 2002
Return-Path:
X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 10 Apr 2002 15:51:15 -0000
Received: (qmail 30019 invoked from network); 10 Apr 2002 15:19:55 -0000
Received: from unknown (66.218.66.218) by m12.grp.scd.yahoo.com with QMQP; 10 Apr 2002 15:19:55 -0000
Received: from unknown (HELO sombre.pacific.net.sg) (203.120.90.146) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 10 Apr 2002 15:19:54 -0000
Received: from smtp1.pacific.net.sg (smtp1.pacific.net.sg [203.120.90.70]) by sombre.pacific.net.sg with ESMTP id g3AFJqc07755; Wed, 10 Apr 2002 23:19:52 +0800
Received: from Kisna (cm94.omega48.scvmaxonline.com.sg [218.186.48.94]) by smtp1.pacific.net.sg with SMTP id g3AFJoq04767; Wed, 10 Apr 2002 23:19:50 +0800
Message-ID: <005201c1e0a3$e84f80a0$5e30bada@Kisna>
To: "TAMIL NET" , "AGATHIYAR" , "TAMIL-ULAGAM"
Subject: TAMEZIL PUTHTAINDU VAZITHUKAL.
Date: Wed, 10 Apr 2002 23:25:12 +0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 6.00.2600.0000
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V6.00.2600.0000
From: "Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=21549133
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 17113

சித்திரை புத்தாண்டு




தமிழ் கூறு நல்லுகத்திற்கு நமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><>


ஏப்ரல் 13 தெலுங்கு வருடபிறப்பை அடுத்து...

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டான ''சித்திர பானு'' ஆண்டு உதயமாகிறது.


முதலில் சித்தரபானு வெண்பாவும், அது கூறும் செய்தியும் காண்போம்

சித்திரபானு வெண்பா
`````````````````````````````````
சித்திரபானிற் சிறக்க மழை மிகுந்து
வித்துள்ள வெல்லாம் விளையுமே - எத்திசையும்
பார்ப்பாருக் காகாது பார்வேந்தர்க் கோலமாம்
தீர்ப்பாகப் பூமி பயஞ் செப்பு.


இந்த ஆண்டில் மழை அதிகமாக பொழிவதால், பயிர் எல்லா
இடங்களிலும் நல்ல முறையில் விளையும்.
பிராமணர்களுக்கு எதிர்ப்புகள் அதிகம்உண்டாகும்.
அரசர்கள் நல்ல சக்திப் பெற்று விளங்குவார்கள்.
அதே நேரத்தில், பூமி அதிர்ச்சியும், எரிமலைப்
போன்றவற்றால் பயமும் உண்டாகும்.

ஏப்ரல் 14-ல் சித்திரபானு தமிழ்ப் புத்தாண்டு பரணி என்னும் பொருத்தமான
நட்சத்திரத்தில் மலர்வதால் உடல் நலம், மனமகிழ்ச்சி,பொருள் வளம் என்று சிறப்பாக
இருக்கும் என்றும், மழையும் சிறக்கும் என்று பஞ்சாங்கமும், சோதிடர்களும் கூறுகிறார்கள்.

உலகெங்கிலும் உள்ள யுத்த பயம் சற்று குறையும்.இலங்கையில் அமைதி நிலவும்.
கட்டிடக்கலை,நுட்பகலை,இலக்கியம்,முத்தமிழ் கலைகள்,செய்தி தொடர்பு, ஆன்மீகம்
போன்றவைகள் சிறக்கும் என்றும் - மொத்ததில் கடந்த ஆண்டைவிட சிறப்பாக
சித்திரபானு இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த சித்திர பானு ஆண்டில் ஏற்படும் குரு,சனிப் பெயர்ச்சிகள் தனிப்பட்ட
மனிதர்கள் வாழ்விலும் எதிரொலிக்கும்.இதனால் மே"ம்,மிதுனம்,கடகம்,விருச்சிகம்,
மகரம் ஆகிய இராசியில் பிறந்தவர்கள் கூடுதலான நன்மைகள் உண்டாக குரு
பகவான் அருள் புரிவார் என்று பஞ்சாங்கம் கூறுகிறது.

கதிரவன் தனது வெப்ப கனலை தாராளமாக கொடுக்கும் காலமிது.
கோடையும், அக்னி நட்சத்திடமும் கொண்டு உத்தராயண புணய நேரமிது.
கடுமையாகத்தான் இருக்கும்.
கோடைகாலம்,மாரிக்காலம்,பனிக்காலம் என்று இயற்கையின் மாற்றம் இது.
மனித வாழ்வில் ஏற்றமும், இறக்கமும் போல் இயற்கையிலும் மாற்றம் உண்டு.
இயற்கை அன்னை நமக்கு கற்றுக்கொடுக்கும்பாடமிது.

ஒளியும் இருளும் ஆகிய இவ்விரண்டு வரிகள்
இயற்கையில் என்றென்றும் உள்ளவை என்று
எண்ணப்படுகின்றன.ஒன்று பிறவாமைக்குப்போவது'
மற்றொன்று பிறப்பைத் தருவது.


அதனால்தான் நம் முன்னோர்கள் புது வருடப் பண்டிகையின் போது
புளிப்பும்,கசப்பும்(வேப்பம்பூவும்),இனிப்பும் கலந்து பச்சடியை...
வாழ்க்கையில் இவைகளும் உண்டு, மற்றும் அனைத்து சுவையும்
உண்டு என்று உண்ணத் தருகிறார்கள்.

தமிழ் புத்தாண்டுப் பிறப்பை கேரளத்தில்''வி"'' பண்டிகையாக, சிறப்பான
முறைய்ல் கொண்டாடுகிறார்கள். அரிய இயற்கைச் செல்வங்களைப் புனித
நாள் தோன்றும் நேரத்தில் முதன்முதலாக காண்பது ஒரு புண்ணியமாக
நம்மவர்கள் எண்ணுகிறார்கள். நல்லவைகள் நடக்க வேண்டும் என்று
எண்ணி மனநிறைவு பெறுகிறார்கள்.

புத்தாண்டில் மங்கல பொருட்களை காணும் பொருட்டு முகம் பார்க்கும்
கண்ணாடி,நகைகள், தங்கம் போல் பளபளக்கும் குத்துவிளக்கு,மலர்கள்,
தானியங்கள்,வாழைபழக் குலை,தென்னம்பூ,மஞ்சள் கொத்து, ஒரு கிண்ணத்தில்
சில்லறைப் பணம், தங்கப் பவுன், இப்படி மங்கல பொருட்களைப் கண்டு
மனம் நிறைவு அடைகிறார்கள்

ஆண்டின் முதல் நாள்''யுகாதி''. இயற்கை எழில் பொங்கும் வசந்தத்தை
வரவேற்று தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்கள் புத்தாண்டு
தினமாக ''யுகாதி''யைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.யுகாதி அன்று
எண்ணெய் தேய்த்து குளித்து, புது துணிகளைஅணிந்து கொண்டு,
அன்று வடை,பாயசத்துடன், போளியும் செய்து வீட்டிற்கு வந்த
விருந்தினரை உபசரிப்பர்.

யுகாதியன்று வெல்லமும்,வேப்பந்துளிரும்,கலந்து இறைவனுக்கு படைத்து,
பின் அதனையே பிரசாதமாக அனைவரும் சாப்பிடுவார்கள்.
மனித வாழ்க்கையில் இன்ப,துன்பமும் கலந்தே வரும் என்பதை குறிப்பிடவே இது.
இந்து மத காலக் கணக்கின்படி சூரிய வருடத்தின் முதல் நாளாகும் பைசாகி.
பஞ்சாபிலும், வடக்குப்பகுதியிலும் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்ளும்
விழாவாக யுகாதி கொண்டாடப்படுகிறது.

தமிழ் ஆண்டுகள் குறித்த அறிஞர்களின் கருத்து.


பிரபவ முதல் அட்சயவரை உள்ள 60 ஆண்டுகள் நமது தமிழ் ஆண்டுகள்
இல்லை என்பது தமிழ் அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். இதில் வரும்
ஆண்டுகளின் பெயர் ஒன்றுகூட தமிழில்லை. 60 ஆண்டுகளும் பற்சக்கர
முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தை கணக்கிடுவதற்கு
உதவியாக இல்லை. இதற்கு வழங்கும் கதையோ அறிவுக்கும், அறிவியலுக்கும்,
காலத்திற்கும், கருத்துக்கும் பொருத்தமாக இல்லை.

இவ்வாறு தமிழருக்கு தமிழில் தொடராண்டு இல்லாத குறையை உணர்ந்த
தமிழ் அறிஞர்கள்,புலவர்கள் தமிழ்க்கடல் மறையடிகள் தலைமையில் கூடினர்.
1921- ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடந்த கூட்டத்தில்
திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது என்றும், அதையே தமிழராண்டு
எனக்கொளவது என்றும், திருவள்ளுவர் காலம் கி.மு. 31 என்றும் முடிவு செய்தனர்.
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் சுறவம் [தை] இறுதி மாதம் சிலை
[மார்கழி] என்றும், புத்தாண்டு துவக்கம் சுறவம்[தை] முதல் நாளே என்றும்
முடிவெடுத்தனர்.

ஆங்கில ஆண்டுடன் 31 -யைக் கூட்ட வருவது திருவள்ளுவர் ஆண்டு.
2002 + 31 = 2033. தமிழக அரசு திருவள்ளுர் ஆண்டு முறையை 1971 முதல்
நாட்குறிப்பிலும் 1972 -ல் அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து
அலுவல்களிலும் பின்பற்றி வருகிறது.

தமிழ் திங்கள் (மாதம்)
```````````````````````````````
பன்னிரண்டு ஓரை[ராசி]களின் பெயர்களே பனனிரண்டு திங்களின் பெயர்களாக
வழங்கி வந்தன.

அவை:--
1. சுறவம் (தை)
2. கும்பம் (மாசி)
3. மீனம் (பங்குனி)
4. மேழம் (சித்திரை)
5. விடை (வைகாசி)
6. ஆடவை (ஆனி)
7. கடகம் (ஆடி)
8. மடங்கல் (ஆவணி)
9. கன்னி (புரட்டாசி)
10. துலாம் (ஐப்பசி)
11. நளி (கார்த்திகை)
12. சிலை (மார்கழி)

இவை இன்றும் பழந்தமிழ் சேர நாடான கேரள நாட்டில் வழக்கில் உள்ளது.

1. மே"ம் 2. ரி"பம் 3. மிதுனம் 4. கடகம் 5. சிம்மம் 6. கன்னி
7. துலாம் 8. விருச்சிகம் 9. தனுசு 10. மகரம் 11. கும்பம் 12. மீனம்.

என்னும் பன்னிரண்டு ராசி(ஓரை)களில் கடகம்,கன்னி,துலாம்,கும்பம்,மீனம்
ஆகிய ஐந்தும் தமிழ்ப் பெயர்களே.

மே"ம், ரி"பம், மிதுனம், சிம்ம, விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய
ஏழு பெயர்களும் தமிழிலிருந்து வடமொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டன.

அவை முறையே மேழம், விடை, ஆடவை, மடங்கல், நளி, சிலை, சுறவம்
என்று தமிழில் பாவாணர் அவர்களால் மீட்கப்பட்டது


எதிர்வரும் தமிழ் புத்தாண்டில் எல்லோரும்
எல்லா நலமும், வளமும், சுகமும், நோயற்ற வாழ்வும் பெற
நமது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை இங்கு பதிவாக்குகிறோம்.

பேருவுகையுடன்:-
கிரு?ணன் - பாஞ்சாலி இல்லறத்தினர்.
சிங்கப்பூர்.


























[Non-text portions of this message have been removed]