From harikris@... Wed Apr 10 18:25:55 2002
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 11 Apr 2002 01:25:54 -0000
Received: (qmail 29021 invoked from network); 11 Apr 2002 01:25:54 -0000
Received: from unknown (66.218.66.217) by m4.grp.scd.yahoo.com with QMQP; 11 Apr 2002 01:25:54 -0000
Received: from unknown (HELO smtp01.vsnl.net) (203.197.12.7) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 11 Apr 2002 01:25:53 -0000
Received: from g9d6h9 ([203.199.240.181]) by smtp01.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GUDQN202.IAW; Thu, 11 Apr 2002 06:55:51 +0530
Message-ID: <00d001c1e0f8$c6f5e700$b5f0c7cb@g9d6h9>
To: , "jaybee"
References: <3.0.3.32.20020411075039.006f19b4@...>
Subject: Re: Nikumbalai vELvi
Date: Thu, 11 Apr 2002 06:46:23 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan"
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Profile: harikrishnan61
X-Yahoo-Message-Num: 17144

மருத்துவரே,

வால்மீகி இராமாயணத்தில் விரிவாக வருகிறது. உடனடியாக என்றால் ஆங்கிலத்தில் எழுதியது கையில் இருக்கிறது. சென்னை ஆன்லைனில் வீடணனைப் பற்றி எழுதும் போது சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறேன். அகத்தியத்தில் ஆங்கிலத்தில் எழுதவே மாட்டேன். அவசரமோ அவசரமாகி, தமிழ் எழுத்துரு கிடைக்காமல் போனாலொழிய.

மாலை (மாலை! நள்ளிரவுதான் நமக்கு மாலை!) வந்ததும் பழைய கட்டுரையைத் தட்டிக் கொட்டி முயற்சிக்கிறேன். இந்திரஜித் நிகும்பிலையில் வழிபட்டது பிரத்தியங்கராவை என்று சொல்கிறார்கள். வால்மீகியிலோ, கம்பனிலோ அப்படிஒரு குறிப்பு கிடைக்கவில்லை. இன்னும் கொஞ்சம் ஊன்றிப் படிக்க வேண்டும்.

பிரத்தியங்கராவைப் பற்றி எழுத இரண்டு பேர் மிகத் தகுதியானவர்கள். ஒருவர்மலேசியாவின் வைத்திய நாதன். இன்னொருவர் அங்கே ஜாவாவில் இருக்கிறார். ("மாருதி அல்லன் ஆகின் நீஎனும் மாற்றம் பெற்றேன்" இராவணனிடம் தூது சென்ற அங்கதன் சொல்லிக்கொள்வது. குமாராங்கதர் என்ன சொல்கிறார்?)

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.

----- Original Message -----
From: "jaybee"
To: ; "Hari Krishnan"
Sent: Thursday, April 11, 2002 5:20 AM
Subject: Nikumbalai vELvi



அன்புள்ள ஹரி,

என்னிடம் ஒருமுறை கேட்கப்பட்ட கேள்வி.
'நிகும்பலை வேள்வி' என்றால் என்ன?

உங்களுடைய கைவரிசையைக் காட்டுங்கள்.

அன்புடன்

ஜெயபாரதி

===========================