From aj@... Wed Apr 10 20:58:28 2002
Return-Path:
X-Sender: aj@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 11 Apr 2002 03:58:28 -0000
Received: (qmail 60153 invoked from network); 11 Apr 2002 03:58:26 -0000
Received: from unknown (66.218.66.217) by m12.grp.scd.yahoo.com with QMQP; 11 Apr 2002 03:58:26 -0000
Received: from unknown (HELO omail.emirates.net.ae) (194.170.163.236) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 11 Apr 2002 03:58:26 -0000
Received: from pmail.emirates.net.ae by omail.emirates.net.ae (Sun Internet Mail Server sims.4.0.2001.07.26.11.50.p9) with ESMTP id <0GUD006DGXKJRP@...>; Thu, 11 Apr 2002 07:55:34 +0400 (GST)
Received: from asif (tdd132.emirates.net.ae [217.165.156.132]) by pmail.emirates.net.ae (Sun Internet Mail Server sims.4.0.2000.10.12.16.25.p8) with SMTP id <0GUD00DLVXNNB4@...>; Thu, 11 Apr 2002 07:57:26 +0400 (GST)
Date: Thu, 11 Apr 2002 07:40:14 +0400
Subject: aaNdu vizaa-3
X-Sender: aj@... (Unverified)
To: tamil@...
Cc: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com
Message-id: <1.5.4.32.20020411034014.0068889c@...>
MIME-version: 1.0
X-Mailer: Windows Eudora Light Version 1.5.4 (32)
Content-type: text/plain; charset="iso-8859-1"
Content-transfer-encoding: quoted-printable
From: Asif Meeran
X-Yahoo-Group-Post: member; u=31404947
X-Yahoo-Profile: asifmeeran
X-Yahoo-Message-Num: 17157


என்றாலும், மாலை 6:45க்கு சாபு அண்ணனையும்என் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு விழா அரங்கிற்குச்
சென்றபோது
அரங்கத்தில் அமீரக நண்பர்கள் சிலரைத் தவிர வேறெவருமில்லை.

(தொடரும்)

ஆனாலும் அரங்கத்தின் உள்ளே நுழைந்ததுமே வெள்ளை வேட்டியும்,வெள்ளைச் சட்டையும் அணிந்து நின்ற அமீரக
நண்பர்களின் கோலம் காண்பதற்கு அருமையாக இருந்தது.. அரங்கத்தில் நுழைந்ததும் 'எந்தப் பதாகைஅயை எங்கே
கட்ட வேண்டும்?" "ஒலிவாங்கிக்ளெல்லாம் உருப்படியாக வேலை செய்கிறதா?" "வண்ணவிளக்குகள் ஒழுக்கமாக
வேலை செய்கிறதா?" என்று இறுதி நிமிட வேலைகளில் நண்பர்கள் ஈடுபட்டிருந்தனர்.

கலை நிகழ்ச்சிகளில் பங்குபெறப் போகும் சிறுமியர்க்ளுக்கான சான்றிதழைத் தய்ழ்ழ்ரிக்கும் பணியில் சாபு அண்ணன்,
தௌஃபீக், சத்யா என ஒரு குழுவும், கணினியை நிறுவுவதில் நண்பர் பரமேச்வரன்,முஸ்தபா என மற்றொரு குழுவும்
இயங்கிக் கொண்டிருக்க, தண்ணீர் வாங்குவது, குழந்தைகளூக்கு கொறிக்க நொறுக்குத் தீனி வாங்குவதென்று
காம்ராசன் செயல்பட்டுக் கொண்டிருக்க, வேட்டி உடுத்துவது எப்படி என்று எனக்குப் பாடம் நடத்தியதோடு அதனை
சீராகக் கட்டிவிடவும் உதவி செய்து கொண்டிருந்தார் நண்பர் அரசு.

இதற்கிடையில் நண்பர் ஹிதயதுல்லா அழைத்தார்.'கல்ப் நியூஸ்' நாளிதழின் செய்திப்பிரிவு புகைப்படக்காரர்
வந்திருப்பதாக
அவர் சொல்ல அவரை வரவேற்று அமர்த்தி பேசிக் கொண்டிருந்தேன்.. அவர் சில தகவல்களைக் கேட்க நண்பர்
அரசுவிடம்
அவரை ஒப்படைத்து விட்டு ஓடி விட்டேன்.

இதற்கிடையே அரங்கில் மெல்ல மெல்ல ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்தது எனினும்
எதிர்பார்த்திருந்த
சில நண்பர்கள் வருகைக்காகவும், விருந்தினர்களுக்காகவும் நிகழ்ச்சியை 8 மணி வரை தள்லி வைக்கலாமென
நண்பர் அரசுவும்,
பசீரும் சொல்ல எட்டு மணி வரை காத்திருந்தோம். அதற்குள் சார்ஜாவிலிருந்துசிங்கை கிருஷ்ணன் ஐயா
வந்துவிட அவருக்கு
அமீரக நண்பர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். கூடவே விழாவிற்கு சிறப்பு விருந்தினராக
அழைக்கப்பட்டவர்களும்
கிருஷ்ணன் ஐயாவிடம் அறிமுகம் செய்து கொண்டனர்.

நேரம் எட்டு மணியானதும் ஒலிவாங்கி முன்னால் வந்து நின்று எமது விழா துவங்குவதை
அறிவித்தேன்..விழாவின் முதல்
நிகழ்ச்சியாக தமிழ்த்தாய் வாழ்த்து. திட்டப்படி நானும்,நண்பர்கள் அரசு,சுரேஷ் பாபு,சத்யா ஆகியோர்
மட்டுமே பாடுவதாக
இருந்தது..ஆனால், வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையின் மகத்துவமோ என்னவோ அனைத்து நண்பர்களும் ஒன்று கூடி
உணர்ச்சி பூர்வமாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட விழா ஆரம்பமே களை கட்டத் துவங்கியது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதென்பது அமீரகத்தில் சில அமைப்புக்களில் வழக்கமில்லை..பாடுகின்ற சில
அமைப்புக்களிலோ
அத்ற்குண்டான மரியாதை வழங்கப்படுவதுமில்லை..தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது யாரிடமாவது 'வளவல'வென
கதைத்துக்
கொண்டிருப்பார்கள். துபாய் தமிழ்நாடு பண்பாட்டுக் கழகத்தின் நிகழ்ச்சியொன்றைத் தொகுத்து வழங்க அழைத்தபோது
இதனை நேரிடையாகவே அறிவித்து தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்துங்கள் என்று
சொன்னேன்..ஆனால், எமது
ஆண்டு விழாவில் அத்ற்கு அவசியமேயில்லாமல் நாங்கள் பாடும்போதே அனைவரும்அதே உணர்வோடு எழுந்து நின்றனர்.
அமீரகத் தமிழிணைய நண்பர்கள் நடத்தும் விழாவில் தமிழுக்குத்தானே எப்போதும் முதலிடம்?!

(தொடரும்)



"டமில் ஒழிப்போம்
தமிழ் வளர்ப்போம்"