From jaybee@... Thu Apr 11 02:15:15 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 11 Apr 2002 09:15:15 -0000
Received: (qmail 33017 invoked from network); 11 Apr 2002 09:15:14 -0000
Received: from unknown (66.218.66.216) by m6.grp.scd.yahoo.com with QMQP; 11 Apr 2002 09:15:14 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 11 Apr 2002 09:15:14 -0000
Received: from user (sp-103-127.tm.net.my [210.186.103.127]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GUE002GLCAB9H@...> for agathiyar@yahoogroups.com; Thu, 11 Apr 2002 17:13:25 +0800 (SGT)
Date: Thu, 11 Apr 2002 17:19:17 +0800
Subject: Sikai, kudumi, kuundhal, sadai, etc.
X-Sender: jaybee@... (Unverified)
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020411171917.00742a38@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 17167
அன்பர்களே,
சிகை, குடுமி, முடி ஆகியவற்றைப் பற்றிய இழைகள்
ஓடின.
அவற்றைப் பார்த்ததும் நான் சுமார் பத்தாண்டுகளுக்கு
முன்னர் மலேசியாவின் மயில் இலக்கிய இதழுக்கு எழுதிய
கட்டுரை நினைவுக்கு வந்தது.
'ஸ்ரீதேவி வழிபாடு' என்னும் அந்த நீள்கட்டுரையின்
ஒரு பகுதியில் மேற்குறித்த விஷயங்களைப் பற்றி எழுதியுள்ளேன்.
சம்பந்தப்பட்ட அந்தப்பகுதியை எழுதி முற்படுத்துகிறேன்.
அந்த நீள்கட்டுரையில் ஒவ்வொரு இதழுக்கும் மும்மூன்று
படங்களாவது ஸெராக்ஸ் செய்து அனுப்புவதுண்டு.
முடி சம்பந்தப்பட்ட பகுதியில் இன்னும் அதிகமாகவே
படங்களை அனுப்பிருந்தேன்.
அவ்வாறு கட்டுரைகளுடன் படங்களை இணைப்பது
ஒரு நல்ல முறை.
இப்போதும் நீங்கள் பார்க்கிறீர்கள் அல்லவா? இண்டர்நெட்டில்
illustrated email posting என்பதை நான் கையாண்டுகொண்டிருக்கிறேன்
அல்லவா? தமிழில் இவ்வகையான illustrated email posting
என்னுடையதாகத்தானிருக்கும் என்பதை மிகப் பணிவுடன் தெரிவித்துக்
கொள்கிறேன். இன்னொரு URL-லையோ File-லையோ காட்டுவதில்லயே.
சம்பந்தப்பட்ட படங்களையும், ஏடுகளையும், பொருள்களையும் ஸ்கேன்
செய்து, அவற்றை வலையில் ஏற்றி, கூடுமானவரைக்கும் அந்த வலையேறும்
பக்கங்களிலும் விளக்கங்கள் குறிப்புகள் போன்றவற்றைக் கொடுக்கிறேன்
அல்லவா?
சொல்லவந்தது என்னவென்றால் இந்த மடல்களுக்கும்
படங்களின் link உண்டு.
மேலே படியுங்கள்:
ஸ்ரீதேவியாகிய லட்சுமியை வழிபடுபவர்கள் அனுஷ்டிக்க
வேண்டிய நெறிமுறைகள் சில இருக்கின்றன. தூய்மையாக
உடுத்தியிருக்கவேண்டும். சுத்தமாக இருக்கவேண்டும். நல்ல
பழக்கவழக்கங்கள் இருக்கவேண்டும். பேச்சும் செயலும் சிந்தனையும்
மங்கலகரமாக இருக்கவேண்டும். மனதில் உறுதியும், வாக்கினில்
இனிமையும் நினைவில் நல்லதும் வேண்டும். சுற்றுச்சூழல்கள்
துப்புரவாக இருக்கவேண்டும். அச்சம், பேடிமை, அடிமைச்சிறுமதி,
சஞ்சலம், வெறுப்பு, சோம்பல், பொறாமை, பேராசை, கொடுமை,
வீராப்பு, மமதை, ஆணவம் போன்ற எதிர்மறையான உணர்ச்சிகள்
கூடாது. வீடு சுத்தமாக இருந்து தீபம் ஏற்றும் பழக்கமும் நித்திய பூஜையும்
இருக்கவேண்டும். கோலம் போட்டிருக்கவேண்டும். சுமங்கலிகள்
அமங்கலமாகக் காட்சியளிக்கக்கூடாது. பொட்டு இன்றித்
தலைவிரிகோலமாக விளங்கக்கூடாது. (ஹேர்ஸ்டைல் எல்லாம்
மாறிவிட்டதே, என்ன செய்வது?)
ஆனால் பெண் தெய்வங்களின் படங்கள் பலவற்றில் அந்தத்
தெய்வங்கள் கூந்தலை விரித்துபோட்டுக்கொண்டிருப்பதாக வரைந்திருப்பார்கள்.
அதிலும் குறிப்பாக லட்சுமியின் படங்களும் சிலைகளும் தலை விரி
கோலமாக அமைந்திருப்பதை நாம் நிறையவே காணமுடிகிறது.
இது மரபுக்கு விரோதமானது. சமய ஆசார நெறிமுறைகளோ,
சில்ப ஓவிய சாஸ்திரங்களோ இவ்வாறுஅமைக்கச்சொல்லவில்லை.
ஆனால் தமிழகத்திலிருந்து வரும் படங்கள் கூட இவ்வாறு
அமைந்துள்ளனவே என்று நீங்கள் கேட்கலாம். வாஸ்தவம்தான்.
இந்த ஓவிய/சிற்ப வழக்கம் தென்னாட்டில் ஏற்பட்டதுதான்.