> ----- Original Message -----
> From: jaybee
> To: agathiyar@yahoogroups.com
> Sent: Thursday, April 11, 2002 5:18 AM
> Subject: RE: [agathiyar] The Truth about Shakespeare
>
> இதைவிடப் பெரிய சரட்டை ஏற்கனவே அகத்தியத்திலும்
> அதற்கும் முன்பாக தமிழ் டாட் நெட்டிலும் எழுதியிருக்கிறேன்.
> தேடிப்பிடித்து மீண்டும் முன்வைக்கிறேன்:-)
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
At 07:03 AM 4/11/02 +0530, Hari Krishnan wrote:
>சரட்டிலேயே சாரட்டையும் ஓட்டியிருப்பீர்களே! உடனே ஆகட்டும் ஆவாகனம்!
>ஹரி
இதுதானய்யா அந்தச்சரடு:
Subject: Fwd:Re: [tamil.net] செகப்பியர்
>From jayabarathi Date Sun, 22 Mar 1998 12:13:16 +0800 (MYT)
Cc tamil@...
Shakespeareஇன் உண்மைப் பெயர் தொயுமோ?
சொல்றேன், கேளுங்க.
அந்தக்காலத்தில் ஆங்கில மொழி வளர்ச்சியில்லாமலிருந்தது.
ஜெஃப் சாஸருடைய "கேண்டர்பா டேல்ஸ்" போன்ற சமாசாரங்களை
வைத்துக்கொண்டு அழுது வடிந்துகொண்டிருந்தது.
ஒருநாள் காலை.
லண்டன் நகால் வெஸ்ட் மின்ஸ்டர் ஆபியின் ஒரு பகுதி.
"Arise, Sir Walter Raleigh!" என்றொரு பெண்ணின் குரல்
ஒலித்தது. முதலாம் எலிசபெத் மகாராணியின் முன் மண்டியிட்டு நைட்
விருதைப் பெற்றுக்கொண்ட வால்டெர் ராலி எழுந்து நின்றார்.
அவாடம் எலிசபெத் , "ஸர் ராலி! நமக்காகவும் நம்
பிட்டானியாவுக்காகவும் நீர் பெரும்தொண்டு ஆற்றிவிட்டீர்.
புதிய பூமியில் நமக்காக ஒரு குடியேற்றத்தைத் தோற்றுவித்து
அதற்கு நம்மைப் பெருமைப்படுத்தும் வண்ணம்'வர்ஜீனியா' என்று
பெயாட்டீர். எஸ்பானிய அர்மாடாவை மூழ்கடித்தீர். இன்னும் ஒன்று
பாக்கியுள்ளது. அது நம் ஆங்கில மொழிக்கு நீர் செய்ய வேண்டிய
கடமை.
நம் மொழி வளம் குன்றி இருக்கிறது. நம் பரம்பரை
விரோதிகளின் மொழியாகிய ஃபிரெஞ்சும் இத்தாலியமும் எஸ்பானியமும்
போர்த்துகீசியமும் வளர்ந்து வருகின்றன. ஆகவே நம் ஆங்கில மொழியைத்
தகுந்த விற்பன்னர்களைக் கொண்டு, இலக்கியநயம் மிகுந்த, வளமிக்க
மொழியாக்க ஏற்பாடு செய்யும். ஒரு காலத்தில் பித்தானியா
எழுகடல்களையும் ஆட்சிபுயப் போகிறாள். அப்போது ஆங்கிலம்
உலகெங்கும் பரவும்; அந்த பித்தானியப் பேரரசுக்கு உய வித்தை நாம்
ஊன்றிவிட்டோம். ஆங்கிலம் உலகப் பொதுமொழியாகும் அடிப்படையையும்
நாமே துவங்குவோம்".
ஸர் ராலி கூறினார், " மகாராணி! அதையும் நான் யோசித்துத்தான்
வைத்திருக்கிறேன். தற்சமயம் உலகில் மிக உன்னத மொழிகளாக
விளங்குபவை இந்தியாவின் சமஸ்கிருதமும் தமிழும்தான் என்று வெனிஸ்
நகர அறிஞர்களும் அரபு ஞானிகளும் கூறுகின்றனர். ஆகவே நான் அடுத்த
கப்பலிலேயே இந்தியா சென்று நல்ல இந்திய மொழி அறிஞரைக்
கூட்டிவருகிறேன். கவலை வேண்டாம்."
அடுத்த படலம்:
லண்டன் நகால் அரண்மனை. எலிசபெத் முன் ஸர் ராலியும்
இன்னொருவரும். அந்த இன்னொருவர் - மெலிந்த தேகம்; கூய நாசி;
இடையில் பஞ்சகச்சம் கட்டியுள்ளார். நீண்ட குடுமி ஒன்று அவருடைய
தலையை அலங்காத்தது.
ஸர் ராலி அறிமுகபடுத்தினார்.
"மகாராணி! இவர்தான் இந்தியாவின் மிகச்சிறந்த மொழியறிஞர்;
தமிழ்நாட்டிலுள்ள "அஸ்திரபாடி" என்னும் ஊனர். சமஸ்கிருதத்திலும்
தன்னுடைய தாய்மொழி தமிழிலும் பெரும்புலவர். முத்தமிழில் 'இயல்',
'இசை', 'நாடகம்' என்னும் வகைகளில் இவர்'நாடகம்' என்னும் துறையில்
சிறந்தவர். பெயர் சுப்பையர். சிறந்த குடுமி வைத்திருப்பதால் அவரை
எல்லோரும் "குடுமி சுப்பையர்" என்று அழைப்பார்கள்."
அதற்கு மகாராணியார், "குடுமி சுப்பையர் அவர்களே!
உம் வரவு நல்வரவாகுக. "ரோமில் இருக்கும்போது ரோமர்களைப்போல்
இரு", என்று என் தந்தை எட்டாம் ஹென் அடிக்கடி கூறுவார். அதற்கிணங்க
நீர் நம் ஆங்கில மொழியை வளப்படுத்தும் வேளையில், நீரும் நம்
ஆங்கிலேயரைப் போன்றே மாறவேண்டும்.
உமக்கென்று சர்வமானியமாக "அவன்" நதிக்கரையில் ஓர்
ஊரை தானம் செய்கிறோம். உம்முடைய பழைய ஊன் பெயரான
'அஸ்திரபாடி' என்னும் பெயரையே அதற்கு வைத்துக்கொடுக்கிறோம்.
ஆகவே உம்முடைய உடைகளை நீர் மாற்றிக்கொள்ளும். ஆங்கிலேயர்
பாணியில் மீசை, குறுந்தாடி வைத்துக்கொள்ளும். ஸர் ராலி தன்னுடைய
சிகையலங்காரக் கலைஞாடம் கூட்டிச்செல்வார். உடன் உம்முடைய
குடுமியை நீர் வெட்டிவிட வேண்டும். ஆங்கிலேயர் பாணியில் நீர்,
சேக்கு(cropped-hair style) வெட்டிக்கொள்ளும்.
இன்றிலிருந்து உம்முடைய பெயர் "குடுமி சுப்பையர்" அல்ல.
"சேக்கு சுப்பையர்"!"
மூன்றாம் படலம்:
இப்படியாகத்தானே குடுமி சுப்பையர், 'சேக்கு சுப்பையர்' ஆக
மாறி, ஆங்கில மொழியில் மிகச்சிறந்த பல நாடகங்களைப் படைத்து,
ஆங்கில மொழிக்கு உலகில் பெரும் பெருமையை ஏற்படுத்தினார்.
(வரலாற்றுப் பின்குறிப்பு: நாளடைவில் அவருடைய
"சேக்குச்சுப்பையர்" என்னும் பெயர் ஆங்கிலமயமாகி "Shakespeare"
என்றாகியது. அவருடைய ஊன் பெயராகிய அஸ்திரபாடி "Stratford"
என்று மருவியது. இதைத்தான் "Anglizisation" என்று மொழி வல்லுனர்கள்
குறிப்பிடுவார்கள்.)