Dr.Carl C.S.Sloan என்னும் ஜெர்மன்காரரின் தயாரிப்பு.
பல ஆண்டுகளாக மலேசியாவிலேயே தயார் செய்கிறார்கள்.
மலேயாவில் 'கொண்டுவித்துவிட்டோ', 'சாமார்த்தியம் செய்து
விட்டோ' தமிழகம் செல்பவர்கள் வாங்கிச்செல்லும் பல
பொருள்களின் லிஸ்ட் ஒன்று உண்டு.
அதில் கோடாலிச் சாப்புத் தைலம், இண்டிமேட் ஸ்ப்ரேய்,
ஹபினோலியா/வினோலியா செண்ட், யார்ட்லி பவுடர், புலிச்சாப்புத்
தைலம், கர்ணபுறாத் தைலம் என்ற பொருள்கள் எல்லாம் இருக்கும்.
அந்தச் சாமான்களுடன் மீசைக்காரத் தைலமும் கட்டாயம் இடம்
பெற்றிருக்கும்.
அது கால்வலி மேல்வலித் தைலத்துக்குரிய சகல சர்வ
லட்சணங்களுடன்தான் விளங்கும். இருப்பினும் அதில் விஷேசமாகச்
சேரும் இரண்டு சரக்குகளும் உண்டு. அவற்றில் முக்கியமானது
மிளகாய் எண்ணெய்.
மற்ற தைலங்களைப் போன்று இதைக் 'கொற கொற' என்று
அழுத்தித் தேய்த்துவிடக்கூடாது.
ஒரு மெல்லிய துணி - அது மலாயாவில் வாங்கிய பிரேஸ்லெட்
வேட்டியிலிருந்து எடுத்த மல் துணியாக இருந்தால் இன்னும் நல்லது.
அதை வைத்துத்தான் தைலத்தை மெதுவாகத்தடவவேண்டும். கையால்
தடவினால், உடனேயே கையை சோப்புப் போட்டுக் கழுவிவிடவேண்டும்.
தைலத்தைத் தடவியபின்னர் கொஞ்சம் கதகதப்பு, இதமான
எரிச்சல், டர்ப்பெண்டைன்-மிதைல் ஸாலிஸிலேட்-கற்பூரம் ஆகியவற்றுக்கே
உரித்தானதொரு குளுமை ஆகிய பலவிதமான கலவைகள் சேர்ந்த
உணர்ச்சி, வலியைப் போகச்செய்யும். சிலருக்கு அந்த இதமான எரிச்சல்
இருந்தால்தான் தூக்கமே வரும்.
அன்புடன்
ஜெயபாரதி
>
>தலைப்பை அவசரமாக பார்த்து விட்டு ஏதோ மச்ச உணவு என்று உள்ளே சென்றால்
>அது மின்வாசனை. நானும் பெரியவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன் இந்நுலை
>கண்ணிலே காட்ட மறுக்கிறார் ;-))))
>
>=====
>அன்புடன்
>
>சாபு
>துபாய்
>
>__________________________________________________
>Do You Yahoo!?
>Yahoo! Tax Center - online filing with TurboTax
>http://taxes.yahoo.com/
>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>