From sakthia@... Sun May 19 00:07:49 2002
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 19 May 2002 07:07:43 -0000
Received: (qmail 48216 invoked from network); 19 May 2002 07:07:42 -0000
Received: from unknown (66.218.66.218) by m11.grp.scd.yahoo.com with QMQP; 19 May 2002 07:07:42 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.174.30) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 19 May 2002 07:07:42 -0000
Received: from smtp1.eth.net ([202.9.178.22]) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Sun, 19 May 2002 12:43:27 +0530
Received: from 202.9.180.202 by smtp1.eth.net (InterScan E-Mail VirusWall NT); Sun, 19 May 2002 12:48:21 +0530
Message-ID: <000b01c1ff00$93f25660$cab409ca@sakthia>
To: , , "harikrishnan"
Cc: "pas" , "ananth"
Subject: oru Pennaip perravan...
Date: Sun, 19 May 2002 12:14:04 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 19 May 2002 07:13:27.0828 (UTC) FILETIME=[AC459D40:01C1FF04]
From: "kaviyogivedham"
X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 18125

நான் ஒரு புரட்சிப்பெண்ணைப்பெற்ற புரட்சித் தந்தை(கவிமாமணி வேதம்)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
என்மகள் பார்க்கும் பையன் வருகையில்
...இல்லத்தில் புரட்சிப் பூகுலுங்கும்!-அவன்
பொன்மகள் கண்ணைப் பார்க்கிற போதேஓர்
....போதையில் மாட்டும் கைவிலங்கும்!

பவுன்நகை,புடவைசீர் பட்சண 'லிSட்'-எலாம்
.. .பையனின் பெற்றோர் நீட்டிடுவார்!-அதைக்
கவிழ்க்கும் வகையில் அழகில் மயங்கியோன்
...கையால் கிழித்தே போட்டிடுவான்!

கணினியில் பட்டம் உயர்தர வேலைஎன
.. காதுவரை சம்பந்தி முழக்கிடுவாள்!-நல்ல
பணமும் பட்டமும் பெண்ணே பெறுவதாய்ப்
..பையனே 'வழிந்து' வழக்கு-இடுவான்!

முயலைப் பெற்றே பயத்துடன் வளர்த்தால்
..முட்டாள் போன்றே நடுங்கிடணும்:-நானோ
அயனான அரபிக் குதிரையை நிறுத்தினேன்!
..அசடனைப் போல்-ஏன் குனிந்திடணும்?

தீப்பொறி பறக்கும் கவிஞனுக் கெதற்கு
...திருடர் சம்பந்தி சகவாசம்?-ஒரு
பூப்போல் மணக்கும்,குயில்போல் பாடும்
...பூவைக்கேன் மாமியார் உபதேசம்?

தேவரா என்ன? பையனைப் பெற்றவர்?
...தஞ்சாவூர் பொம்மையாய்த் தலையாட்ட?-ஒரு
தேவிபோல் பெண்களின் கண்களை நிமிர்த்துங்கள்!
...திருடரால் முடியாது வாலாட்ட!(கவியோகி வேதம்)19-05-02
**********************************************