From sarabeswar@... Mon May 20 04:00:04 2002
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 20 May 2002 11:00:04 -0000
Received: (qmail 67523 invoked from network); 20 May 2002 11:00:03 -0000
Received: from unknown (66.218.66.218) by m9.grp.scd.yahoo.com with QMQP; 20 May 2002 11:00:03 -0000
Received: from unknown (HELO n22.grp.scd.yahoo.com) (66.218.66.78) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 20 May 2002 11:00:04 -0000
Received: from [66.218.67.152] by n22.grp.scd.yahoo.com with NNFMP; 20 May 2002 11:00:04 -0000
Date: Mon, 20 May 2002 11:00:02 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Ekan anEkan - 3 - nI athuvAnAy ena ninRa pErurai - thathuvamasivAkkiyam
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2340
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar"
X-Originating-IP: 202.152.1.146
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18139

> திரு.ப.சு.மணியன் அவர்களின் உரையினைத் தொடர்கிறேன்:
> ஒரே இறைவனின் நியதி. இதில் கிறித்துவனானாலும் சரி, இந்துவானாலும் சரி, முகமதி
யன்
> ஆனாலும் சரி ஒரே வைத்தியக் கொள்கை. இதிலும் ஒரே விதமான தத்துவம்.
>>>>

அதே போலத்தான், ஒரு வித்து இத்தனை நாள் என்ற குறிப்பிட்ட நாட்களில்
பூத்து அந்தந்தக் காலங்களில் பூத்தும், காய்த்தும், உதிர்ந்தும் குறிப்பிட்ட ஆயுளில் இ
ருந்து அதுவும் மரணத்தை அடைகிறது. அதுபோலவே பருவகாலங்கள். வசந்தகாலம், இ
லையுதிர்காலம், முன்பனி, பின்பனி, கார்காலம், கூதிர்காலம், அந்தந்தக் காலங்களின்
மாற்ற வளர்ச்சிகளுக்கேற்ப அண்ட பிண்ட தத்துவங்கள், இந்த இயற்கை நியதிகளைத்
தோற்றுவித்து நடத்துபவனும் ஒரே தலைவன்.

அவனே முழுமுதல் தெய்வம். ஆயின், அவனுக்குப் பல நாமங்கள்; அவனுக்குப் பல
மதங்கள், வழிபாடுகள், சர்ச்சைகள்! அவன் உண்டு என்றும், அப்படி ஒருவன் இல்லை
என்றும் விவாதங்கள்!

உலகங்கள் என்றும் உள்ளவையே; அவற்றைத் தோற்றுவித்ததற்குப் பரம்பொருள்
என்ற ஒரு பொருள் வேண்டியதில்லை. ஆதலால் கடவுள் இல்லை என்றும்
சொல்வர். அப்படிச் சொல்லும் கொள்கையை மேலும் ஆய்வோம்.

உலகங்கள் என்றும் உள்ளவை அல்ல. இந்தப் பூமியும் அதன் சூரியனைச் சுற்றும் இதர
கோள்களும் ஒரு காலத்திலே தோன்றியவை என்று வானசாஸ்திரமும், கணித சாஸ்தி
ரமும் சொல்கின்றன. இவைகள் யாவும் சூரியக்கூறுகளே. இப்படியே உலகங்களும் உலகங்களி
ல் உள்ள பொருட்களும் தோன்றி நின்று அழிகின்றன. அஃதாவது பிரபஞ்சமானது இ
டையூறாமல் மாறுதல் அடைந்து வருகிறது!

ஒரு பொருள் மாறுதல் அடைய அந்த மாறுதலுக்குக் காரணம் வேண்டும். அந்தக்
காரணம் அந்தப் பொருளில் இருக்க மாட்டாது! உதாரணமாக தண்ணீர் ஆவியாகிறது. இதை
ஆவியாக்கும் சூடான தன்மை தண்ணீரில் இயல்பாய் உள்ளதன்று. தண்ணீர் தண்ணீராய் இ
ருப்பதே அதனியல்பு. ஆவியாகும் தன்மை தண்ணீரில் இயல்பாய் இருந்தால் அது ஆவியாகி வி
டும். நீராய் நிற்காது.

ஒரு பொருள் அப்பொருளாகவே மாறுதலின்றி இருத்தலே அதனியல்பு.
மாறுதல் அடைந்தால் அதனைத் தூண்டும் சக்தி அதனின் வேறாய் உள்ள பொருளாயிருக்க
வேண்டும். இப்படி இப்பிரபஞ்சம் முழுவதும் மாறுதல் அடந்து கொண்டே இருக்கும். பிரபஞ்சத்தின்
ஒரு பகுதியில் நடக்கும் மாற்றத்துக்குக் காரணம் அதன் வேறொரு பகுதியாகலாம்.
ஆகவே இம்மாறுதலைச் செய்வது பிரபஞ்சத்தின் வேறாய் உள்ள பொருளாதல்
வேண்டும்! அப்பொருளே நாம் இறையென உணர்வது. தோன்றல், நிலைத்தல், அழித்தல்
ஆகிய மாற்றங்களைத் தொடர்ந்திருக்கும் சக்தியினை இறையென்போம்!

>>>>>

இனி சில அண்டம்/பிண்டம் தொடர்புகளை ஆய்வோம்.

அன்புடன்,
குமார்