From netranger@... Tue May 21 09:57:17 2002
Return-Path: X-Sender: netranger@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 21 May 2002 16:57:17 -0000
Received: (qmail 53109 invoked from network); 21 May 2002 16:57:17 -0000
Received: from unknown (66.218.66.216) by m13.grp.scd.yahoo.com with QMQP; 21 May 2002 16:57:17 -0000
Received: from unknown (HELO ethfrvs.eth.net) (202.9.145.41) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 21 May 2002 16:57:15 -0000
Received: from smtp2 ([202.9.178.23]) by ethfrvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Tue, 21 May 2002 22:38:18 +0530
Received: from 202.9.169.142 by smtp2 (InterScan E-Mail VirusWall NT); Tue, 21 May 2002 22:21:07 +0530
Message-Id: <4.3.0.20020521222059.00a75dc0@localhost>
X-Sender: netranger/pop3.eth.net@localhost
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Tue, 21 May 2002 22:21:00 +0530
To: agathiyar@yahoogroups.com
Subject: ekan-anekan
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: netranger@...
X-OriginalArrivalTime: 21 May 2002 17:08:18.0724 (UTC) FILETIME=[1A87A640:01C200EA]
From: ஞானவெட்டியான் X-Yahoo-Group-Post: member; u=95039220
X-Yahoo-Profile: gnanavettiyaan
X-Yahoo-Message-Num: 18157
அன்புடையீர்,
வணக்கம்.
> மேலும் விளக்கம் வேண்டுவோர்க்கு, பாரதியின் சந்திரமதி
புலம்பல் புரிந்த யோகியாரோ,
> ஞானவெட்டியாரோ தெருட்ட வேண்டும்.
நண்பர் திரு.சரபேSவரர்(குமார்) வேண்டுகோளுக்கிணங்கி
ஏதோ எனக்குத் தெரிந்தவைகளை உளருகிறேன்.தெருட்டும்
அளவுக்கு சரக்கு இல்லை.
கருடன் உருவை எண்ணியவுடனே, பெருவிடமேறியிருப்பினும்
அச்சம் நீங்கிவிடுவதால் உயிருக்கு ஆபத்து
குறைந்துவிடுகிறது.அதுபோல,ஞானாசிரியன் உருவைத்
தியானித்தபோது மும்மலங்களும் நீங்கும்.பாம்பால்
கடியுண்டவர்களை விடமிறக்குபவன் கருட பாவனை
மந்திரத்தை உச்சரித்துக் கருட பாவனையுடன் பார்க்கக்
கடியுண்டவர்களின் உடலில் ஏறியுள்ள விடமிறங்கி உயிர்
பிழைப்பர்.
மலங்கள்:ஆணவம்,மாயை,கன்மம்.இவ்விடங்கள், குருவாகிய
கருடனைத் தியானிக்க நீங்கும்.இறை மலமற்றது.ஆன்மாவும்
மலமறும்போது இறையைப் போலாம்.மலமறுவது மிகவும்
கடினம்.
உலகத்தில் காணப்படும் கருடன் ஆதிபெளதிக
கருடன்.மந்திர உருவமாகிய கருடன் ஆதி தைவீக
கருடன்.அம்மந்திர உருவமே தானாக தன்னரிவு அதன்
வயத்தாம் படி உறைந்து நிற்குமாறு ஒன்றித் தியானிக்கும்
பாவனை கருட பாவனை. அம்மந்திரம் இடமாக நின்று
மாந்திரீகனுக்குப் பயன்(பலம்) கொடுப்பதாகிய சிவ
சத்தி ஆதியான்மிக கருடன் எனப்படும்.இறைவனின்
திருப்பெயராகிய திருவைந்தெழுத்தே பிறவிப்
பகையறுக்கும் மந்திரமாம்.
திருமந்திரம்:
"கருடன் உருவங் கருதும் அளவிற்
பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல்
குருவின் உருவங் குறித்தஅப் போதே
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே."
நன்றி
அன்புடன்
-ஞானவெட்டியான்
-திண்டுக்கல்(தமிழ்நாடு)
sarabeswar wrote:
>
> http://www.endicott-studio.com/forum.html
> >
> > ஆமைத்தீவென (Turtle Island: the Mythology of
North America) அமெரி
> க்கப்
> > பழங்கதை சொல்லும் சுட்டியைத் தட்டிப் பாருங்கள்! அந்தப்
பெண் தமிழச்சி என்றால்
> யாரே
> > மறுப்பர்;-)
> > மேலும் அக்கதைகள் சுட்டும் உட்பொருள் ஒன்றெனத்
தேடினால் பலதும் புரியலாம்!
>
> >>>>>
>
> மேற்கண்ட காணும் சுட்டியில் பன்னாட்டுப்பண்டைக்
கதைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.
>
> முதலில் இந்தப் பறவைக்கதைகள்:
>
> >>>
> According to various Siberian tribes, the
eagle was the very first
> shaman, sent to humankind by the gods to heal
sickness and suffering.
> Frustrated that human beings could not
understand its speech or ways,
> the bird mated with a human woman, and she
soon gave birth to a child
> from whom all shamans are now descended.
>
> In a mystic cloak of bird feathers, the
shaman chants, drums and
> prays him- or herself into a trance. The soul
takes flight, soaring
> into the spirit world beyond our everyday
perception. (Great care
> must be taken in this exercise, lest the
wing-borne soul forgets its
> way back home.)
>
> Likewise, the shamans of Finland call upon
their eagle ancestors to
> lead them into the spirit realms and bring
them safely back again.
> Shamans, like eagles, are blessed (or cursed)
with the ability to
> cross between the human world and the realm
of the gods, the lands of
> the living and the lands of the dead.
>
> Despite the healing powers this gives them
(the "medicine" of their
> bird ancestry), men and women in shamanic
roles were often seen as
> frightening figures, half-mad by any ordinary
measure, poised between
> co-existent worlds, fully present in none.
>
> The Buriats of Siberia traced their lineage
back to an eagle and a
> swan, honoring the ancestral swan-mother with
migration ceremonies
> each autumn and spring.
> >>>
>
> அன்னத்தின் தொன்மம் குறித்து முன்னர் ஒரு நீண்ட திரி
வலித்திருந்தேன். இப்போது
> கருடன் சொல்லும் கதை தேடுவோம்.
>
> 'ஊனக்கண் பாசம் உணராப் பதியை' என்றுதொடங்கும்
சிவஞானபோதத்தின் ஒன்பதாம்
> நூற்பாவினை விளக்க வரும் பாடலொன்றைப் பார்ப்போம்:
>
> கண்டதை யன்றன் றெனவிட்டுக் கண்டசத்தாய்
> அண்டனை ஆன்மாவில் ஆய்ந்துணரப் - பண்டணைந்த
> ஊனத்தைத் தான்விடுமா றுத்தமனின், ஒண்கருட
> சானத்தில் தீர்விடம்போற் றான்.
>
> அசத்தாய்க் கண்டதை மெய்யன்று மெய்யன்று எனப்
பற்றுவிட்டு, மெய்யாய்க் கண்ட
> சத்துப்பொருளாய் இறைவனை ஆன்ம உணர்வில்
நுணுகியுணரப் பிறவியில் முன்
> அணைந்துவிட்ட மாயைக் கருவிகளை இறைவன் திருவருளால்
உயிர்கள் விடும் வகையானது,
> ஒளிமிக்க கருடத்தேனிப்பு கொண்டு பாம்பின் நஞ்சு தீர்வதைப்
போலத்தான் என்று
> சுட்டுகிறார் சிவஞானமுனிவர்.
>
> கருட சானம் என்பது கருடத்தேனிப்பு. அண்டத்தின்
கருடனன்று! இங்கே கூறுவது மந்திரக்
> கருடனாதலால் ஒண்கருடன் என வந்தது. மந்திர ஒலிகளின்
மாண்பு இதனாலும் விளங்கும்.
>
> பாம்பு கடித்து விட்டால் அதன் நஞ்சு ஏறுவதற்கு முன்
கருடமந்திரம் சொல்லிக் கருடனைத்
> தேனித்தால் நஞ்சு தீர்கிறது. அது தானே தீராது. பாம்புக்குக்
கருடன் பகையாதலால்
> கருடனைத் தேனிக்க நேர்ந்தது. இறைசக்தி முதலில் ஒலியிலும்
பின்பு அந்நச்சுப் பொருளி
> லும் நின்று நஞ்சை நீக்கியது.
>
> தேனிப்பவரின் உண்மைக்கும், மனவலிமைக்கும் தக்கபடி
சிவசக்தி பெருகிவரும்!
> நஞ்சும் அவ்வண்ணமே நீங்கும். மந்திரக் கருடனை ஏற்றி
விடம் தீர்ப்பது போல்
> மந்திர ஒலிகளால், திருவைந்தெழுத்தால் தேனித்திருக்க எங்கும்
நிறை அண்டனை
> ஆன்மா ஆய்ந்துணரும்.
>
> மேலும் விளக்கம் வேண்டுவோர்க்கு, பாரதியின் சந்திரமதி
புலம்பல் புரிந்த யோகியாரோ,
> ஞானவெட்டியாரோ தெருட்ட வேண்டும்.
>
> மருத்துவரைய்யா ஓய்வாயிருக்கட்டும்!
>
> அன்புடன்,
> குமார்
> fவா
>
> ------------------------ Yahoo! Groups
>
>
----------------------------------------------------------------------------
-----
> For archives click
>
http://groups.yahoo.com/group/agathiyar/messages
>
----------------------------------------------------------------------------
-----
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to
http://docs.yahoo.com/info/terms/