From sakthia@... Tue May 21 19:42:28 2002
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 22 May 2002 02:42:27 -0000
Received: (qmail 17600 invoked from network); 22 May 2002 02:42:27 -0000
Received: from unknown (66.218.66.216) by m9.grp.scd.yahoo.com with QMQP; 22 May 2002 02:42:27 -0000
Received: from unknown (HELO ethfrvs.eth.net) (202.9.145.41) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 22 May 2002 02:42:27 -0000
Received: from smtp2 ([202.9.178.23]) by ethfrvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Wed, 22 May 2002 08:23:29 +0530
Received: from 202.9.180.93 by smtp2 (InterScan E-Mail VirusWall NT); Wed, 22 May 2002 08:06:34 +0530
Message-ID: <000701c20136$fb7c8a20$5db409ca@sakthia>
To:
Cc:
Subject: "Kootuvittuk kootu...
Date: Wed, 22 May 2002 07:47:47 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 22 May 2002 02:53:29.0370 (UTC) FILETIME=[DA1B0FA0:01C2013B]
From: "kaviyogivedham"
X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 18161

தாத்தா என அழைத்த 'வெங்கடேசு'சித்தன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^(யோகியார்)
1980-ஆம் வருடம்.வசந்தம் கழிந்த ஆகச்ட் மாதம்.ஒருநாள்
வழக்கம்போல் தாம்பரம்பS.ல் பயணித்து,என் மந்திரசக்தி
குருநாதர் ஆன 'திரு.ராமையங்கார் சுவாமிகளைப்பார்க்கச்
சென்றுகொண்டிருந்தேன்.சிங்கப் பெருமாள்கோவில் கிராமத்தில் அவர்
வீடு.பழய ஓட்டுவீடு.திண்ணையிலேயே நான்கு பேர் அமரலாம்.
என் கூடப்பயணித்த ஒரு ஆந்திர வாலிபனும்(23 வயதிருக்கலாம்)
என்னிடமே வழிகேட்டுக் கொண்டு அவரைப்பார்க்க வந்திருந்தான்.
அவரை முன்பே தெரியுமா? என வினவினேன்.தெரியாது.ஆனால்
'சூட்சுமமாய்ப்'பலதடவை கண்டிருக்கிறேன் என பாதி தமிழ் பாதிஆங்கிலம்
கலந்த நடையில் சொன்னான்.தூக்கிவாரிப்போட்டது.
ஏன் எனில் யான் அப்போது 'பருவம்' அடையாத காலம்.
தப்பாக எண்ணாதீர்கள்.தியானம் முதிராத நிலையைச் சொன்னேன்.
எங்களை உள்ளே அழைப்பதாக மகானின் மனைவி சொன்னார்.
சென்றோம்.உடனே அந்தப்பையன் தடாலென அவர்காலைத்தொட்டு
வணங்கி'தாத்தா' ரொம்பநாள் ஆசை(உங்களைப் பார்க்க)யின்றுதான்
நிறைவேறியது எனச்சொல்லிச் சிரித்தான். சிரிப்பு என்றால் ஒரு அட்டகாசச்
சிரிப்பு அது.தெய்வீகமும்,ஒரு மெச்மரிசமும் போட்டியிட்டுக் கலந்த
வசந்தகாலச் சோலை அது.
உடனே அவனை உற்றுப்பார்த்த பெரியவர்(74)கண்களைமூடி ஏதோ ஒரு
மந்திரம் முணுமுணுத்தார்."அடேய்! உனக்குத்தெரியாதது-யில்லை.படவா!
(பாலச்சந்தர் ச்டைலில் படிக்கவும்)என்னைத்தாத்தா என்கிறாய்.
என்னைப் பரிசோதிக்கத்தானே வந்திருக்கிறாய்?நான் எப்படா உனக்குத்தாத்தா
ஆனேன்? என்றார் கிண்டலாக."தாத்தா" என்ன தெரியாததுமாதிரி
கேட்கிறீர்களே நாமதான் தொடர்ந்துவந்துகொண்டிருக்கோமே" என்றான்.
என் மரமண்டையில் அப்போது அதெல்லாம் புரியாத விடயம்.'கம்'என்று
அமர்ந்திருந்தேன்.அடேய்!வேதம்! யிவன் என்னை ஏமாத்தறான்.நீ
நம்பாதே! என்றார் பெரியவர்.என்னை'டெச்ட்'பண்ணத்தான் வந்திருக்கான்.
என்றார்.சற்றுநேரம் அவரது சாதனைகள், அவரைச் சென்ற பிறவியில்
தான் சந்த்தித்தது,மந்திரங்கள் பற்றி விவாதம் என்று ஏதேதோ
பேசிக்கொண்டிருந்தான். அப்படி ஒரு25 நிமிடம் கழிந்திருக்கும்.
திடீரென'தாத்தா' அடையாரு கான்சர் ஆசுபதிரியிலிருந்து
என் 'ப்ரண்டு' அழைக்கிறான்.நானும் அவனும்தான் ஐ.ஐ.டி
ஆச்டலில் ரூம்மில் ஒன்றாகதங்கிப்படித்துவருகிறோம்.திடீரென
போனமாதம் அவனுக்குத் தொண்டையில் கான்சர் வந்துவிட்டது.
கர்மவினை..கொஞ்சமாவது அனுபவித்துக் கழிக்கணுமோ யில்லையோ?
நாந்தான் அங்கே சேர்த்தேன்.சரியாக்கிடுவோம்..சீக்கிரம்..
சரி தாத்தா அப்படியே யிந்த ரூம் மூலையிலே கொஞ்சம் சாஞ்சுக்கிறேன்.
அவனைப்போய்ப் பார்த்துட்டு வந்திடறேன்.திருமூலருக்கு ஆனமாதிரி
என் ஒடம்பை எரிச்சுடாதீங்கோ!(அறைகுறை தெலுங்கு+தமிழில்)
என்றான். யிவரோ'சரி போயிட்டுவாப்பா..20நிமிடத்துக்குள் வந்துடு.
வேற யாரும் வந்தா விபரீதமாப்போயிடும்..வேதம் மெல்லப் புரிஞ்சிக்குவான்.
என்றார்.அவ்வளவுதான்.சுவரில் சாய்ந்தான்.ஒரு தீர்க்கப்'பச்த்ரிகா'ப்ராணாயாமம்.
சுவரில் உடல் கிடந்தது.உயிர் எங்கோ போவதை நாங்கள் அனைவருமே
உணர்ந்தமாதிரி,தொட்டுச்சென்றமாதிரி யிருந்தது.என் உடல் சிலிர்த்தது.
அவன் போனவுடன் அவர் தம் மனைவியுடன்'யிப்போ வேரயார் வந்தாலும் உள்ளே
விடாதே'என்று அவர் அவளுக்கும் அவன் கதையை லேசாகச் சொன்னார்.
யிதெல்லாம் ரொம்ப சாதாரணம் என்கிறமாதிரி கேட்டுக்கொண்டு உள்ளே
சென்றுவிட்டாள் மாமி,.எனக்குத்தான் அடிவயிற்றில் 'கப்'பென்று
ஏதோ பற்றிக்கொண்டிருந்தது. வருவானா? யில்லை,பெரியவர்க்குச் செலவு
வைத்துவிடுவானா? என்ற உள்பயம்..
அதை அறிந்த மகான் அந்தவகைப் ப்ராணாயாமம்,அதை சீக்கிரமே
என் குருநாதர் ,லகரி மகான் மூலம் நான் கற்றுக்கொள்ளப்போவது
பற்றிஎல்லாம் மிக விரிவாகச் சிரிப்போடு சொன்னார்.ரொம்பப் பெரிய
தவச்சாதனையாளன்டா யிந்த ஆந்திராச் சித்தன்.குண்டூரிலிருக்கும்
(பேர் மறந்துவிட்டேன்.ராமுலுகாரு..என்றமாதிரிவரும்.)பெரிய சித்தரிடம்
யிக்கலையைக்கற்றிருக்கிறான்..நீ கொன்ஞ்சகாலம் யிவன்பற்றி
யாரிடமும் மூச்சுவிடாதே..உன்னைப்பைத்யம் என்பார்கள்.சாக்கிறதை.
யிதோ வந்துகொண்டிருக்கிறான்..பார்!"என்று அவர் சொன்னதுமே
திடீர் என அந்த உடம்பு அசைந்தது.விறைத்தஅங்கமெல்லாம்,புனருத்தாரணமாயிற்று.
மறுபடி ஒரு சில ப்ராணாயாமம் செய்தான்(ர்!) சித்தன்."என்ன தாத்தா
ரொம்ப தான்க்சு..உடம்பைப் பத்ரமாப் பார்த்துக்கொண்டதுக்கு..ஏன் சார்!
பயந்துட்டேளா? என என்னை நோக்கிக் கேட்டான்.பிறகு நண்பனைப்போய்
பார்த்து ஆறுதல் சொன்னது.உடம்புபூரா தடவிக்கொடுத்தது(ஓ! எப்படி?
உடம்புதான் யிங்கே யிருந்ததே..என் சந்தேகம்!)ஒரேமாதம்தாண்டா
நீ சரியாய்விடுவேடா! என்று ஆவேசமாய்ச் சொன்னது..எல்லாம்
சிரிப்போடு சொன்னான். அடிக்கடி தாத்தா என்று அவரை அழைத்து
அவர்காலைத்தொட்டு ஒற்றிக்கொண்டதுதான் எனக்கு அவன்'மானரிசமாக'
யிருந்தது.நான் அப்படிச் செய்தால்'சும்மா காலைப் பிடிக்காதடா!நீ பயிற்சிசெய்தால்
தான் அந்த 'அவனோட'கரண்ட்' உனக்குள்வருமே ஒழிய என் காலிலிருந்து
ஒரே கணத்தில் யோகநிலை பெற்றுவிடலாம் என கனவு காணாதே.
என்று காலை மடக்கிக்கொள்வார். அவனுக்குமட்டும் ச்பெசல்'அனுமதி கொடுத்தது
எனக்கு அப்போ ஒருவித பொறாமையாய் யிருந்தது..
கொஞ்சநேரம் அவர் எனக்குப்புரியாத சில உயர்-தவநிலைப் பயிற்சி,'கண்டயோகம்'
சீர்டி சுவாமி..குடலை வெளியே எடுத்துக்கழுவினதுபோன்ற
என்னை மருட்டின விடயமாகப் பேசிக்கொண்டிருந்தார்.நான் போயிட்டு வரட்டுமா
சுவாமி என்ரேன். போகாதே..யின்னும் யிருக்கு யிவனோட..யிங்கேயே
யிவனோட சேர்ந்து நாம சாப்பிடலாம்..வேடிக்கைபாரு என்றார்.
உள்ளே மனைவியிடம் 3 யிலைபோடச்சொன்னார்.அவனுக்குமட்டும்
'விட்டுணு'யிலையாக யிரட்டையிலை சேர்த்துப் போடு' என்றார்.
புரியவில்லை..?சொல்கிறேன்..நாளை..(யோகியார்)
(அனுமதி யுண்டு)