From sadayan50@... Wed May 22 01:48:28 2002
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 22 May 2002 08:48:28 -0000
Received: (qmail 30656 invoked from network); 22 May 2002 08:48:28 -0000
Received: from unknown (66.218.66.218) by m10.grp.scd.yahoo.com with QMQP; 22 May 2002 08:48:28 -0000
Received: from unknown (HELO web13805.mail.yahoo.com) (216.136.175.15) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 22 May 2002 08:48:28 -0000
Message-ID: <20020522084828.53441.qmail@...>
Received: from [213.42.1.246] by web13805.mail.yahoo.com via HTTP; Wed, 22 May 2002 01:48:28 PDT
Date: Wed, 22 May 2002 01:48:28 -0700 (PDT)
Subject: Milad Day Kavithai 1
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com
Cc: tamil@..., uaetamilnetters@yahoogroups.com
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 18167

இணைய நண்பர்களுக்கு,

எம்பெருமானார் நபி(ஸல்) அவர்களின் பிறந்தநாளான மீலாத் நபி வரும்
வெள்ளிக்கிழமை ( 24.5.02) அரபகத்தில் கொண்டாடப்படுகிறது.
அதன்பொருட்டு கவிக்கோ வின் கவிதை ஒன்று . கவிதை தெளர் என்ற
குகையில் நபி(சல்) அவர்களை காப்பாற்றிய சிலந்தியைப் பற்றி .
எதற்காக தெளர் குகைக்கு நாயகம் (சல்) ஓடி ஒளிந்தார்கள் என்ற
பிண்ணனியை இங்கே தந்திருப்பது நம் தம்பி சுலைமான்.
--------------------------------------------------------------------------------------------------------------
உருவ வழிபாடுகளுக்கு எதிராக 'ஏகத்துவ' கொள்கையை கொண்டுவிட்டார்கள்
என்கிற ஒரே காரணத்திற்காகவே, இதே மண்ணின் மைந்தனாயிற்றே என்றும்கூட
பார்க்காமால்; அன்றிருந்த மெக்காவாசிகள் நபி (சல்) அவர்களையும்
அவர்களது தோழர்களையும் தொடர்ந்து துன்புறுத்தி வந்தார்கள்..
கொல்லவும் துணிந்தார்கள்.

இனியும் இங்கே இருப்பது உசிதமில்லை என்று முடிவெடுத்து, பகைவர்கள்
அறியாமல் நபி (சல்) அவர்கள்,
தனது
தோழர் அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களுடன்,
மதினாவை நோக்கி பயணித்தார்கள். ஆனால், அப்படி அவர்கள் தங்களின்
துன்புறுத்தல்களிலிருந்தும்கூட
தப்பிச்
சென்றுவிடக்கூடாது எனும் தீய எண்ணம்
கொண்ட, அந்தக் கொடுமையான பகைவர்கள்..

தப்பிச் செல்லும் நபி (சல்) அவர்களை உயிரோட - கொன்றோ கொண்டு
வருபவர்களுக்கு 100
ஒட்டகங்களை
பரிசாகத் தருவதாக பகிரங்கமான விளம்பரத்தை
செய்தார்கள். அன்றைய 100 ஒட்டகம் என்பது, ஏறத்தாழ இன்றைய 100
மெர்சிடிஸ் வாகனங்களுக்கு சமமாகக் கூறலாம்.

விபரமறிந்த - 100 ஒட்டகங்களுக்கு ஆசைப்பட்ட மெக்கா வாசிகள் பலரும்
நபி (சல்) அவர்களைத் தேடி பயணப்பட்டார்கள்.

இப்படி ஒரு ஆபத்து தங்களைப் பின் தொடர்வதை அறிந்த நபி (சல்)
அவர்களும்,
நபித் தோழர் அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்களும், 'தெளவ்ர்' என்கிற
குகைக்குள் நுழைந்து கொள்கிறார்கள்.

மலையடிவாரங்களிலும், குகைகளிலும் தேடிவந்த பகைவர்கள் இந்த 'தெளவ்ர்'
குகையருகே வந்து சூழ்ந்து கொள்கிறார்கள். தாங்கள் பதுங்கியிருக்கின்ற
குகையைச்
சுற்றி பகைவர்கள் சூழ்ந்து நிற்பதையறிந்த அபுபக்கர் சித்தீக் (ரலி)
அவர்கள்,
மிகவும் அச்சப்படுகிறார்கள். அப்போது நபி (சல்) அவர்கள், 'நாம் இரண்டு
பேர் மட்டுமல்ல, நமக்குத் துணையாக இறைவனும் நம்முடன் இருக்கிறான்' என
தைர்யம் கூறி உபதேசிக்கிறார்கள். நபி (சல்) அவர்கள் சொன்னதுப்
போலவே
இறைவனும் தனது கருணையைக் காட்டினான்.

குகையின் வாசலில் ஒரு சிலந்தியை வலை பின்னச் செய்தான். அந்த சிலந்தி
வலையைக் கண்ட பகைவர்கள்..'குகைக்கும் உள்ளே ஆள் நுழைந்திருந்தால்,
சிலந்தி வலை அறுபட்டிருந்திருக்கும்; எந்தவித பாதிப்புமின்றி சிலந்தி
வலை
பின்னப்பட்டதுப் போலவே சிதைக்கப்படாமல் இருப்பதால் நிச்சயமாக குகைக்கும்
உள்ளே யாரும் இருக்கமாட்டார்கள்' என தீர்மாணித்துக் கொண்டு அங்கிருந்து
நகர்ந்து விடுகிறார்கள்.

குகையின் உள்ளே நுழைந்துப் பார்க்கக்கூட வேண்டாம்..கொஞ்சம் குனிந்துப்
பார்த்தாலே தெரிந்து விடும்
நிலையில்தான் நபி (சல்) அவர்களும்,
அவர்களது தோழர்களும் நின்றிருந்திருக்கிறார்கள். ஏனெனில், வெளியில்
நிற்கும் பகைவர்களின் கால்களை, உள்ளே பதுங்கியிருந்த அவர்களால் பார்க்க
முடிந்திருக்கிறது...இறையவன் பகைவர்களின் கண்களையும்-கவனத்தையும்
குருடாக்கி விட்டிருந்தான் என்றுதான் சொல்லவேண்டும்.

பகைவர்களின் ஆபத்து அங்கிருந்து முற்றிலும் நீங்கும்வரை, மூன்று நாட்கள்
அதே குகையில் நபியும் - நபித்தோழரும் தங்கியிருந்திருக்கிறார்கள்.
அந்த மூன்று நாட்களும், முன்பே பேசி வைத்து ஏற்பாடு செய்திருந்தபடி,
அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் மகனார் அப்துல்லா ஆடுகளை ஓட்டிவந்து
பால் கறந்து உணவளித்திருக்கிறார்.

உருவ வழிபாடுகள் மட்டுமின்றி, வழிபாடுகள் என்ற பெயரில் மிகவும்
கண்மூடித்தனமாக சடங்குகளும்,
உயிர்பலிகளும், நிர்வாண பூசைகளும்,
பெண் குழந்தைகளை உயிரோடு புதைக்கின்ற கொடுமைகளும், ஒரே
இனத்துக்குள்ளேயே கோத்திரங்களைக்
காரணமாக்கி-உயர்வென்றும் தாழ்வென்றும்
இன பேதங்களை உண்டாக்கி சாதிச் சண்டைகளைப் போட்டுக் கொண்டு,
ஒருவருக்கொருவர் கொலைவெறியோடு பழி தீர்த்துக் கொள்வதையும்,
கண்டித்து ஏகத்துவத்தை உபதேசித்து, ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்கிற
கொள்கையில் எல்லோரையும் ஒரே மார்க்கத்தில் இணைந்து ஒற்றுமையுடனும்
கண்ணியத்துடனும் வாழச் சொன்னதால்தான்...நபி (சல்) அவர்களையும்,
அவர்களது தோழர்களையும் அன்றைய மெக்கா அரபிகள் துன்புறுத்தினார்கள்;
மன்னின் மைந்தர்கள் என்றும்கூடப் பாராமல், ஓடிச் சென்றவர்களைக் கூட
தேடிச் சென்று கொன்றார்கள்.

இனி கவிதையைப் படியுங்கள்.

தொடக்கம் உன் பெயரால்
தொடர்வதெல்லாம் உன் அருளால்
அடக்கம் நீ என் நெஞ்சில்
அடங்காத பேரொளியே
முதல்வா உன்னை என்
முதலாகக் கொண்டதால்
என் வாழ்க்கை வணிகத்தில்
இழப்பே இல்லை

தாள் கண்டால் குனிந்து
தலை வணங்கும் பேனா
உன் தாள் பணியும்
உபதேசம் பெற்ற பின்னர்
எழுத்தல்ல இறைவா
இவையெல்லாம்
என் எழுதகோல் செய்த
'சஜ்தாவின்'* சுவடுகள்

உன் பெயரில் ஊற்றெடுத்து
ஓடுகிறேன் நதியாக
கலப்புக்கும் நீயே
கடலாகி நில்
எண்ணுவது உன்னையே
எழுதுவது உன்னையே
உண்ணுவது உன்னையே
உயிர்ப்பதும் உன்னையே
என்னை உன் கையில்
எழுதுகோலாய் ஏந்தி
நின்னையே நீ எழுதிக்கொள்

நாமோ
பாவலர் உமரின்
பரம்பரையில் வந்தவர்கள்
சேகுனாப் புலவரின்
செல்லக் குழந்தைகள்
பீரப்பாவின் பேரப்பிள்ளைகள்
காசிம் புலவரின்
கால்வழித் தோன்றல்கள்
வண்ணக் களஞ்சிய
வாரிசானவர்
குலாம் காதிரின்
குலக் கொழுந்துகள்
செய்குத் தம்பியின்
சின்னத் தம்பிகள்
ரகுமான் என்றால்
இது என்ன ரக மான் என்பார்
பொய்மான் பின்னால்
போனவன் அல்ல
நான் 'ஈமான்' பின்னால்
ஏகும் ரகுமான்

இதுவரை ஓட்டடை அடிக்கக்
கோல் ஏந்தினோம்
இன்றோ நான்
ஓர் ஒட்டடையைப் புகழக்
கோல் ஏந்தினேன்
அன்றொரு நாள் என் வீட்டில்
ஒட்டடை அடிக்கக் கோலெடுத்து நின்றேன்
மூலையில் ஒரு சிலந்தி வலை
அடடா என்ன அழகு
கவிதை மனம் ழந்த வலையில்
சிக்கிக் கொண்டது
அழுகம் ஒரு வலைதான்-அதனால்தான்
நாமெல்லாம் அகப்பட்டு
கொள்கிறோம் அதற்குள்ளே

உலகத்தைப் பார்க்கிறேன்
எத்தனை சிலந்திகள்
இதோ இரவு
கறுப்பு இழைகளால் வலை பின்னுகிறது
வலையில் சிக்கித் துடிக்கின்றன
நட்சத்திர ஈக்கள்

இதோ
இருட்டில் ஒருத்தி
ஒப்பனையால் வலை விரித்து
இரைக்காகக் காத்திருக்கிறாள்
பாவம் தானே இரையாகிறாள்
அதோ சூரியன்
கிரணங்களால் வலை பின்னுகிறான்
இருளைப் பிடித்து
உண்பதற்கு

அதோ அரசியல் மேடையில் ஒருவன்
வார்த்தைகளால் வலை பின்னுகிறான்
எதிரே அப்பாவி இரைகள்
பிரபஞ்ச வலையைப் பின்னிவிட்டு
மறைந்து உட்கார்ந்திருக்கிறானே
அவனும் ஒரு சிலந்திதான்
அவனுடைய இரை நாம்தான்
அவனே படைத்து
அவனே உண்ணும் இரை


எழுதுகோல் ஏந்துகிறவன் நான்
ஒட்டடைக் கோல் எந்தியபோதும்
ஊறியது கற்பனை
சிலந்தி வலை பின்ன
சிலந்தியைப் பற்றி நான்
சிந்தனை வலை பின்னி நின்றேன்

அற்பப் பிராணியா சிலந்தி இல்லை
அற்புதப் பிராணி நம்முடைய
வீட்டுக்குள் வீடு கட்டும்
விந்தைப் பிராணி
இதற்குத்தான் எவ்வளவு தன்மானம்
நம்மைப் போல்
அந்நியப் பொருள்களால் வீடு கட்டாமல்
தன் சொந்தப் பொருளாலல்லவா
வீடு கட்டுகிறது
வாயால் ஆகாயக் கோட்டைகளை
கட்டும் மனிதர்களை விட
இச்சிலந்தி உயர்ந்தது
இதுவும் வாயால்தான் கட்டுகிறது
ஆனால் உண்மையாகவே
ஒரு வீட்டைக் கட்டிவிடுகிறது

உணவு,உடை,உறையுள்
இந்த மூன்றையும்
மனிதன் தனித்தனியாக
தேட வேண்டியிருக்கிறது
சிலந்திக்குத்தான்
எத்தனை சாமர்த்தியம்
நுலாலேயே ஒரு
வீடு கட்டிவிடுகிறது அந்த
வீட்டாலேயே உணவையும்
பெற்று விடுகிறது

இந்தச் சிலந்தி
வாயால் பூ வரையும்
ஓவியனா இல்லை
சுவருக்கே ஆடை கட்டும்
பைத்தியமா ?
சிலந்திக்கு மட்டும் என்ன
இவ்வளவு அழகிய வாந்தி
எவ்வளவு நுல் நுற்றாலும்
இப்பஞ்சு குறைவதே இல்லை

எங்கள் இதயம்
இரண்டு குகைகளை மறந்து விடாது
ஒன்று 'ஹிரா'
வெளிச்சம் பிரசவமான விடுதி
மற்றொன்று 'தெளர்'
அந்த வெளிச்ச தீபம்
அணைந்து விடாமல்
காப்பாற்றிய கல் சிம்னி

'தெளர்' குகையே
கல் கூடாரமே
சரித்திரத்தில் எத்தனையோ
தங்குமிடங்களைப் பார்த்திருக்கிறோம்
ஆனால்
சரித்திரத்தில் தங்கிவிட்ட
தங்குமிடம் நீ மட்டும்தான்

'தெளர்' குகையே
கல் வாயே
அன்று எவ்வளவு பெரிய ரகசியத்தை
நீ மறைத்து வைத்திருந்தாய்
எங்கே நீ உளறி விடுவாயோ
என்று பயந்துதான்
சிலந்தி உன் உதடுகளைத் தைத்ததோ

சிலந்தியே
இரையைப் பிடிப்பதற்குத்தான்
நீ வலை பின்னுவாய்
ஆனால் அன்று
மக்க நகரத்து
மிருகங்களின் இரையைக்
காப்பாற்றுவதற்கல்லவா
நீ வலை பின்னினாய்

உலகத்தின் ஒட்டடைகளை
அழிக்க வந்த இஸ்லாத்தில்
சிலந்தியே நீ அன்று கட்டிய
வலையை மட்டும்
நாங்கள் அழிக்க விரும்பவில்லை
ஏனென்றால்
ஒட்டடைக் கோலையே காப்பாற்றிய வலை
உன் வலைதான்

மீன் பிடிப்பதற்காக வலை விரிப்பார்கள்
ஆனால் நீயோ ஓரு மீன்
எங்கள் மீன் அல் அமீன்
தப்புவதற்காகல்லவா வலை விரித்தாய்
சிலந்தியே அன்று மட்டும்
உன் வலை கொசுவலையாக இருந்தது
சித்தம் மகிழும் செம்மல் நபியின்
ரத்தம் குடிக்கு வந்த
குரைஷிக் கொசுக்களை
அண்டாமல் விரட்டியதால்

அகமது நபியின்
ஆள் மயக்கும் அழகு கண்டால்
அகம் அது மயங்கும்
முகமது நபியின்
முத்து நிலா முகம் கண்டால்
மூ ஊலகும் தான் மயங்கும் என்று
அவர் முகமது மறைக்க
ஒரு முகத்திரை போட்டாயோ

நிர்வாண உலகத்திற்கு
ஆடையாய் வந்தவரைப் பாராட்ட
பொன்னாடை நெய்து
போர்த்தினாயோ இல்லை
குபுரியத்திற்கு*
கபன்* நெய்யத் தொடங்கினாய்
இறைவன் தந்த நுல் மறை-நுல்
உன் நுலோ மறை கொணர்ந்த
துதரை மறைத்த நுல்
அன்று உன் மறை நுலால்
இறைவனின் மறை நுலையே
காப்பாற்றிவிட்டாய்.

இறைவா
வீடுகளிலேயே
பலவீனமான வீடு
சிலந்தியின் வீடுதான் என்று
உன் திருமறையில் கூறினாய்
ஆனால் என்ன அதிசயம்
அந்த பலவீனமான வீடு
எவ்வளவு பலமான
கோட்டையைக் கட்டிவிட்டது

இறைவா நீ நினைத்தால்
ஒரு மேலாம் படையைக் கூட
ஓரு நுலாம் படையால்
தடுத்து நிறுத்தி விடுகிறாய்
சிலந்திகள்
ஒட்டடைக் கோலால் அழியும்
நீயோ ஓர் ஒட்டடைக் கோலை
காப்பாற்றிய சிலந்தி
மனித மூளையின்
இருண்ட மூலைகளில்
வலை பின்னியிருந்த
மூடச் சிலந்திகளை
ஒழிக்க வந்த ஒட்டடைக் கோல்
உன்னாலல்லவா அன்ற காப்பாற்றப்பட்டது.

இதோ
என் வாயும் ஒரு சிலந்திதான்
வார்த்தைகளால் கவிவலை பின்னுவதால்
ஆனால் ஒரு வேறுபாடு
அது மாநபியை மறைப்பதற்காக
வலை பின்னியது
இது வேத நபியை வெளிப்படுத்துவதற்காக
வலை பின்னுகிறது

என் இதயமும் ஒரு தெளர் குகைதான்
எங்கே ஏந்தல் நபி எழுந்தருளி இருப்பதால்
ஆனால் ஒரு வேறுபாடு
அந்தக் குகை அவர்களை வெளியே விட்டது
இந்தக் குகையோ அவர்களை வெளியில் விடாது
இறைவா
அந்தச் சிலந்தியாய் என்னைப்
பிறக்க வைத்திருக்கக் கூடாதா ?
இந்த மினிதப் பிறவியை விட
மகத்துவம் பெற்றிருப்பேனே
இன் கவிதைகளை நாடு புகழ்கிறது
ஆனால்
என் கவிதைகளை விட
அந்தச் சிலந்தி வலை உயர்ந்ததல்லவா

புனிதமான சிலந்தியே
இதோ என் இதய வீட்டில்
நன்றிக் கண்ணீராலேயே
ஒரு வலை பின்னிக் கொடுக்கிறேன்
நீ இங்கே நிரந்தரமாகவே தங்கிவிடு

கவிக்கோ

* ஸஜ்தா - நெற்றி தரையில்பட தொழுவது
* குபுரியம் - ஏகத்துவத்திற்கு எதிரானது
* கபன் - அடக்கம் செய்யும்போது உடுத்தும் வெண்ணிற ஆடை


=====
அன்புடன்

சாபு
துபாய்

__________________________________________________
Do You Yahoo!?
LAUNCH - Your Yahoo! Music Experience
http://launch.yahoo.com