From jaybee@... Wed May 22 07:07:40 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 22 May 2002 14:07:40 -0000
Received: (qmail 77781 invoked from network); 22 May 2002 14:07:40 -0000
Received: from unknown (66.218.66.216) by m15.grp.scd.yahoo.com with QMQP; 22 May 2002 14:07:40 -0000
Received: from unknown (HELO n30.grp.scd.yahoo.com) (66.218.66.87) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 22 May 2002 14:07:40 -0000
Received: from [66.218.67.150] by n30.grp.scd.yahoo.com with NNFMP; 22 May 2002 14:07:38 -0000
Date: Wed, 22 May 2002 14:07:38 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: andha aappampuLikkum
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2133
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "jaybee555" X-Originating-IP: 161.142.105.222
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18169
இன்று காலையில் பினாங்குக்கு மறுகரையில் இருக்கும் 'பட்டர்வர்த்' என்னும் ஓர் ஊருக்குச்
செல்லநேரிட்டது. சாதாரணமாக federal highway வழியாகத்தான் செல்வது வழக்கம்.
திரும்பிவரும்போது வழக்கத்திற்கு மாறாகப் பழைய பாதையொன்றின் வழியாக நானும் என் மனைவியும்
வந்தோம். பச்சைப்பசேலென்ற அழகிய நெல்வயல்கள்; கமுகு, தென்னை, வாழை, பலா, மா,
என்றவாறு பழந்தமிழ்நாட்டை நினைவுறுத்தும் காட்சிகள். மலேசியா சுதந்திரம் அடைந்த
ஆண்டில்(1957) மூடா ஆற்றின்மீது கட்டப்பட்ட மலேசியா பாலத்தை அடையும் முன்னர் ஒரு சிற்றூர்
இருக்கிறது. 'கப்பலா பத்தாஸ்' என்று பெயர். அந்த வட்டாரத்தில் மலாய்க்காரர்கள்தான் மிக
அதிகம். இருப்பினும் அந்த ஓர் ஊரில் தமிழர்கள் ஒரு கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.
அங்கேயே காலை உணவை முடித்துக்கொள்வோம் என்று இடத்தைத் தேடிச்சென்றோம். ஒரு
புத்தகக்கடை இருந்தது. விசாரித்தேன். அங்கே விற்கப்பட்ட புத்தகங்கள் எல்லாமே மலாய் மொழியில்
உள்ள pulp fiction என்ற வகையைச் சேர்ந்தவை. மிகவும் மலிவானவை. ஆனால் ஏராளமாக
விற்பனை ஆகக்கூடியவை. அவை தவிர சஞ்சிகைகள் நிறைய இருந்தன. இரண்டு மூன்று வகைத் தமிழ்
சஞ்சிகைகள் இருந்தன. அவற்றை ஓர் அட்டைப்பெட்டியில் போட்டு வைத்திருந்தனர்.
அவர்களிடம் கேட்டேன், "இங்கே தமிழ்ப் புத்தகங்கள் விற்பதுண்டா?"
சொன்னார்கள், "அதெல்லாம் இங்கே விற்கமுடியாது; விற்கமாட்டாது."
"ஒன்றிரண்டுகூட விற்கமாட்டாதா?"
"விற்காது. அப்படி வாங்குபவர்கள் பினாங்குக்குச் சென்று வாங்கிக்கொள்வார்கள். அங்கே
நிறையப் புத்தகங்கள் கிடைக்கும்."
தொடர்ந்து தோசை கிடைக்கும் கடைக்கு வழி காட்டினார்கள். நான் இருக்கும்
ஊரிலிருந்து அந்த இடம் பதினைந்து மைல்கள்தாம் இருக்கும். ஆனாலும் அங்கெல்லாம் சென்றதில்லை.
ஒன்றும் அலுவலில்லையே?
அவர்கள் சொன்ன திக்கில் சென்று 'தோசைக்கடை'யை அடைந்தோம்.
ஒரு கோயில். அந்தக்கோயிலுக்குத் திரும்பும் சிறிய பாதையும் வீதியும் சந்திக்கும்
சாலையோரத்தில் தள்ளுவண்டிகள் இரண்டை வைத்துக்கொண்டிருந்தார்கள். அவற்றில் அப்பம், தோசை
முதலியவை. இன்னொன்றில் காப்பி, டீ, வகையறா.
அருகில் ராயர் கீயர் ஒருத்தரையும் காணோம். பலதர வயதுகளில் பெண்கள்தாம்
இருந்தார்கள்.
நான் கேட்டேன், "இந்த ஆப்பம் இனிக்குமா?"
"இந்த ஆப்பம் இனிக்கும். அந்த ஆப்பம் புளிக்கும்".