From ramanbalachendran@... Wed May 22 19:49:22 2002
Return-Path: X-Sender: ramanbalachendran@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 23 May 2002 02:49:22 -0000
Received: (qmail 20996 invoked from network); 23 May 2002 02:49:22 -0000
Received: from unknown (66.218.66.218) by m15.grp.scd.yahoo.com with QMQP; 23 May 2002 02:49:22 -0000
Received: from unknown (HELO web13906.mail.yahoo.com) (216.136.175.69) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 23 May 2002 02:49:22 -0000
Message-ID: <20020523024921.49911.qmail@...>
Received: from [161.142.78.84] by web13906.mail.yahoo.com via HTTP; Wed, 22 May 2002 19:49:21 PDT
Date: Wed, 22 May 2002 19:49:21 -0700 (PDT)
Subject: Re: [agathiyar] Re: Oru Vuthevi!
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: MIME-Version: 1.0
From: ramanbalachendran X-Yahoo-Group-Post: member; u=105905715
X-Yahoo-Profile: ramanbalachendran
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 18178
*** Vanakam aiya Jayabarathi avergelei***
En Anbu Vanakanggal, aiya vunggeludeya urai Tamilil mige sirenthethu anal yennal vasikke mudiyevillai. I've download the tamil murasu software yet notapplicable, I don't want to left our in this matter, Aiya kindly guide me how to install the tamil software step by step.
Mikke nandri aiya!!
"இந்த ஆப்பம் இனிக்கும். அந்த ஆப்பம் புளிக்கும்".
சொன்னவர் ஐம்பதைத் தாராளமாகவே தாண்டிவிட்டதொரு பெண்.
வியப்பு.
'யின்னாடாயிது? ஆப்பத்தில் புளித்த ஆப்பமா? சுட்ட பழம்
சுடாத பழம்போலல்லவா இருக்கிறது? கொஞ்சம் நிதானித்துக்கொண்டு
பார்த்தேன். சொன்ன அம்மையாரோ ஓர் ஔவையார். ('ஔ'வுக்கு முன்னால்
'ஓர்'தான் வரும்). சின்னப்பையன் இருக்கும் இடத்தில் நான்.
"என்னடாது? Reversal of roles-ஆ இருக்கே? நாம்அல்லவா
இந்த மாதிரி பதில் கேள்வி போடணும்?" மனதிற்குள் ஓடுகிறது.
சுதாரித்துக்கொண்டு, அதென்ன ஆப்பத்தில் புளித்த ஆப்பம்?
மாவை ரொம்பவும் புளிக்கவைப்பீர்களோ".
"ஒண்ணு புஸ்ஸுனு இருக்கும். இன்னோண்ணு சப்பட்டையா
இருக்கும்". விரலால் சுட்டிக்காட்டினார். கண்களில் குறும்பு பொத்துக்
கொண்டு வழிந்தது. அவர் காட்டியது மூடிவைக்கப்பட்டிருக்கும் ஒரு
தோசைக்கல்லை. தோசையைத்தான் புளித்த ஆபாம் என்று அந்த
அம்மாள் குறிப்பிட்டார். அவர் சொன்னது விளையாட்டாகத்தான்.
ஆனாலும் அதிலும் ஓர் உண்மை இருந்தது. பழங்காலத்தில்
தோசையையும் 'அப்பம்' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
"ஆப்பம் புளிக்குதோ, இனிக்குதோ, இந்த அம்மாள் பேசுற
பேச்சு ரொம்பவும் இனிக்குது. இங்கயே சாப்பிடுறேன்."
டக்கென்று இரண்டு அப்பத்தையும் மனைவிக்குத் தோசையையும்
ஆர்டர் செய்துவிட்டு, சுற்றுமுற்றும் பார்த்தேன்.
சராசரியைவிடப் பெரிய கோயில்தான். மாரியம்மன் கோயில்.
ராஜகோபுரத்தில் நிறைய பொம்மைகள் இருந்தன. ஓர் ஆள், தன்னுடைய
புறங்கையின்மீது ஒரு புறாவை வைத்துக்கொண்டு தடவுவதற்காக கையைச்
சற்று உயர்த்தியிருப்பதுபோலத் தோற்றம். புறா தத்ரூபமாக இருந்தது.
அருகில் மற்ற பொம்மைகள், மாடங்கள் ஆகியவற்றின்மீது நிஜப்புறாக்கள்.
இவற்றை ஒருங்கே காண்பது ஒரு அனுபவமாகத்தான் இருந்தது. அந்தப்
பதுமைகளை அமைத்த ஸ்தபதி, சராசரிக்கும் அதிகமான
திறமையுடவன்போலும்.
ஆனால் என்ன செய்ய? கோயில் பூட்டியிருந்தது. கோயிலுக்குள்
பார்க்கமுடியாதபடி சுற்றிலும் சுவர்களை எழுப்பியிருந்திருந்தனர்.
மாரியம்மன் கோயில்.
கோயில் பூட்டியிருந்தது - காலை மணி 8-00த்தான்.
கோயிலைத் திறப்பதே இல்லையா? திறந்தால் எத்தனை மணிக்கு?
யாரும் பூசை செய்கிறார்களா? பூசையாவது உண்டா? எத்தனை காலப்பூசை?
இந்தக் கோயிலைக் கட்டுவதற்கு எவ்வளவு செலவழித்திருப்பார்கள்?
எவ்வளவு செலவிட்டுக் கும்பாபிஷேகம் செய்திருப்பார்கள்?
மண்டலாபிஷேகம் என்ற பெயரில் எத்தனை ஆயிரங்கள்?
ஆனால் நடப்பில்?
வழிபாடு செய்யப்படவேண்டிய நேரத்தில் மூடியிருக்கிறதே.
மலேசியாவில் காணப்படும் மிகப்பெரும்பான்மையான நிகழ்ச்சிக்கு
அது ஓர் உதாரணமாக விளங்கியது. அதைப் பற்றி அடுத்தாற்போல சொல்கிறேன்.
அந்த யோசனை அப்புறப்படுத்திவிட்டு, அப்பத்தில் கைவைத்தேன்.
அன்புடன்
ஜெயபாரதி
Yahoo! Groups SponsorADVERTISEMENT
---------------------------------------------------------------------------------
For archives click
http://groups.yahoo.com/group/agathiyar/messages
---------------------------------------------------------------------------------
Your use of Yahoo! Groups is subject to the Yahoo! Terms of Service.
---------------------------------
Do You Yahoo!?
LAUNCH - Your Yahoo! Music Experience
[Non-text portions of this message have been removed]