From jaybee@... Thu May 23 01:53:40 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 23 May 2002 08:53:39 -0000
Received: (qmail 95169 invoked from network); 23 May 2002 08:53:39 -0000
Received: from unknown (66.218.66.216) by m13.grp.scd.yahoo.com with QMQP; 23 May 2002 08:53:39 -0000
Received: from unknown (HELO n7.grp.scd.yahoo.com) (66.218.66.91) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 23 May 2002 08:53:38 -0000
Received: from [66.218.67.160] by n7.grp.scd.yahoo.com with NNFMP; 23 May 2002 08:53:38 -0000
Date: Thu, 23 May 2002 08:53:38 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: andha aappam puLikkum
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3888
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "jaybee555"
X-Originating-IP: 161.142.105.221
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18184

--- In agathiyar@y..., balar@t... wrote:
At 09:54 AM 5/23/02 +0800, you wrote:
>
> --- In agathiyar@y..., "jaybee555" wrote:
>
>> "ஆப்பம் புளிக்குதோ, இனிக்குதோ, இந்த அம்மாள் பேசுற
>>பேச்சு ரொம்பவும் இனிக்குது. இங்கயே சாப்பிடுறேன்."
>> டக்கென்று இரண்டு அப்பத்தையும் மனைவிக்குத் தோசையையும்
>>ஆர்டர் செய்துவிட்டு, சுற்றுமுற்றும் பார்த்தேன்.
>
>மலேசியாவில் பெரும்பாலான உணவுக் கடைகளில் ஆப்பத்தைப் பார்க்கவே
>முடியாது. Iதுபோன்ற கைவண்டிக் கடைகளிலும் Iரவுச் சந்தையிலும்தான்
>கிடைக்கும் அதுவும் 50 வயதைத் தாண்டிய பெண்மணிகள்தான்.


சென்னை வேப்பேரி, மதுரை ரயில்வே காலனி போன்ற
இடங்களில் அந்தக் காலங்களில் கொஞ்ச வயதுள்ள ஆப்பக்காரிகளைப்
பார்க்கமுடியும். வேண்டுமானால் எல்லேய் இளைய ராயர்
போன்றவர்களைக் கேட்டுப்பாருங்கள்.


Iஇப்படியே
>போனால் மலேசியாவில் ஆப்பம் என்பது பெயரளவில்தான் Iருக்கும்.


உண்மைதான். 'ஆப்பம்' எனப்படும் 'அப்பம்', endangered
species தரத்தில் சேர்ந்துவிட்டது.
பல பலகாரங்கள் காணாமலேயே போய்விட்டன. பெயரைச்
சொன்னால்கூட தெரியமாட்டாது.
தமிழகத்திலும் அப்படித்தான் இருக்கும்போல் தோன்றுகிறது.
'உக்ரா' அல்லது 'உக்காரை' என்ற பலகாரத்தை கேள்விப்
பட்டிருக்கிறீர்களா? செட்டிநாட்டுச் சமாசாரம்.

மலேசியாவில் ஆப்பம் சுடும் முறை மாறியிருக்கிறது. இப்போது
சிறிய எவர்சில்வர் சட்டிகளில் சுடுகிறார்கள்.
அந்தக் காலங்களில் மண்சட்டிகளே பயன்பட்டன.
அதுவும் இரண்டு சட்டிகள்.
ஒரு சட்டியில் கனன்று கொண்டிருக்கும் தனல்
போடப்பட்டிருக்கும்.
இன்னொரு சட்டியில் எண்ணெயை லேசாகத் தடவி, ஒரு
சிறிய கரண்டி மாவை எடுத்து ஊற்றுவார்கள். உடனேயே அந்தச்
சட்டியைத் தூக்கி ஒரு சுழற்றுச் சுழற்றி விட்டு, அடுப்பின்மீது
வைப்பார்கள். மாவின் பெரும்பகுதி, சட்டியின் நடுப்பகுதியை நாடிச்
சென்றுவிடும். ஆனால் அந்த மாவின் பகுதியைச் சுற்றி, வட்டவடிவத்தில்
ஒரத்தில் மெல்லிய மாக்கரை படிந்திருக்கும்.
அந்தச் சட்டியின் மேல் நெருப்புள்ள சட்டியை வைப்பார்கள்.
அடிக்கடி கீழேயுள்ள ஆப்பச்சட்டியையும் மேலேயுள்ள நெருப்புச்
சட்டியையும் திருப்பிவிடுவார்கள். அடியிலும் மேலாகவும் ஒரே சீராக
நெருப்புப்படவேண்டும் என்பதற்காகத்தான்.

(ஒரு சைடு பொடி: 'நெருப்புச்சட்டி' என்று குறிப்பிட்டேன்.
அது சரி. 'தீச்சட்டி கோவிந்தனை'க் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?)

மாவு, பக்குவமாகப் புளிக்க வைக்கப்பட்டிருக்கும்.
மாவில் கள் ஊற்றும் வழக்கமும் உண்டு. தேங்காய்ப்பாலும்
ஊற்றப்படும். இனிப்பு ஆப்பத்தில் சீனி அல்லது நாட்டுச்சக்கரை.
ஆகவே ஆப்பத்தின் நடுப்பகுதி 'புஸ்'ஸென்று உப்பிவிடும்.
பஞ்சு போல் மென்மையாக இருக்கும். புரட்டிப்போடாமல் சுடுவதால்
அப்பகுதி வெண்மையாக இருக்கும். கரைப்பகுதி பொன்னிறமான
முறுகலாக ஆகிவிடும்.

இப்படித்தான் ஐயா 'ஆப்பம் சுடுவது'. இப்போது இப்படியெல்லாம்
லோல்ப்பட்டுக்கொண்டு ஆப்பம் சுடுவதில்லை.

அன்புடன்

ஜெயபாரதி


>
>> கோயில் பூட்டியிருந்தது - காலை மணி 8-00த்தான்.
>> கோயிலைத் திறப்பதே இல்லையா? திறந்தால் எத்தனை மணிக்கு?
>>யாரும் பூசை செய்கிறார்களா? பூசையாவது உண்டா? எத்தனை காலப்பூசை?
>> இந்தக் கோயிலைக் கட்டுவதற்கு எவ்வளவு செலவழித்திருப்பார்கள்?
>>எவ்வளவு செலவிட்டுக் கும்பாபி"கம் செய்திருப்பார்கள்?
>>மண்டலாபி"கம் என்ற பெயரில் எத்தனை ஆயிரங்கள்?
>> ஆனால் நடப்பில்?
>
>Iது எனக்குப் புதிய தகவல், ஒருவேளை தனிழர்கள் அதிகம் இலாததால் இருக்கலாம்.
>நான் அறிந்தவரை மலேசியாவில் சாலையோர மரத்தடிக் கோவிலில்கூட Iரண்டுகாலப்
>பூசை உண்டு. பெரும் நகரங்களில் எல்லாக் கோவிலிலும் கார்த்திகை, ச?டி, பிரதோசம்
>போன்ற நாட்களிலும் மற்ற விழாக்காலங்களிலும் மக்கள் கூட்டம் பெருகும். சில புகழ்
>பெற்ற கோவில்களில் பெரும் பண வரவும் உண்டு, அதைக் கையாளும் பொருப்பைப்
>பெறக் குழுச் சண்டைகளும் கீழருப்புக்களும் உண்டு.
>
>என் அறிவுக்குப் பட்டவரை மலேசியத் தமிழர்களூக்கு பக்தி அதிகம். ஆனால் நான்
>நகரத்து நடப்பை வைத்து என் கருத்தை வளர்த்துக் கொண்டவன், உங்கள் அனுபவமோ
>பலதரப் பட்ட மக்களையும் இடங்களையும் கண்டதிலிருந்து ஏற்பட்டது, சொல்லுங்களேன்
>கேட்கிறோம்.
>
>அன்பன்
>பாலச்சந்திரன்
>
>
>>அன்புடன்
>
>>?யபாரதி