From jaybee@... Thu May 23 03:16:09 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 23 May 2002 10:16:06 -0000
Received: (qmail 17364 invoked from network); 23 May 2002 10:16:05 -0000
Received: from unknown (66.218.66.218) by m15.grp.scd.yahoo.com with QMQP; 23 May 2002 10:16:05 -0000
Received: from unknown (HELO n25.grp.scd.yahoo.com) (66.218.66.81) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 23 May 2002 10:16:05 -0000
Received: from [66.218.67.186] by n25.grp.scd.yahoo.com with NNFMP; 23 May 2002 10:16:05 -0000
Date: Thu, 23 May 2002 10:16:05 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Two thousand years old aappam Re: [agathiyar] Re: andha aappam puLikkum
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2202
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "jaybee555" X-Originating-IP: 203.121.0.15
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18188
At 08:53 AM 5/23/02 +0000, you wrote:
>
>Iஇப்படியே
>>போனால் மலேசியாவில் ஆப்பம் என்பது பெயரளவில்தான் Iருக்கும்.
>
>
>
உண்மைதான். 'ஆப்பம்' எனப்படும் 'அப்பம்', endangered
>species தரத்தில்
சேர்ந்துவிட்டது.
>
> மாவு, பக்குவமாகப் புளிக்க வைக்கப்பட்டிருக்கும்.
>மாவில் கள் ஊற்றும்
வழக்கமும் உண்டு. தேங்காய்ப்பாலும்
>ஊற்றப்படும். இனிப்பு ஆப்பத்தில் சீனி அல்லது
நாட்டுச்சக்கரை.
> ஆகவே ஆப்பத்தின் நடுப்பகுதி 'புஸ்'ஸென்று உப்பிவிடும்.
>பஞ்சு போல்
மென்மையாக இருக்கும். புரட்டிப்போடாமல் சுடுவதால்
>அப்பகுதி வெண்மையாக இருக்கும்.
கரைப்பகுதி பொன்னிறமான
>முறுகலாக ஆகிவிடும்.
>
> இப்படித்தான் ஐயா
'ஆப்பம் சுடுவது'. இப்போது இப்படியெல்லாம்
>லோல்ப்பட்டுக்கொண்டு ஆப்பம் சுடுவதில்லை.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
கரிகால் சோழரின் காலத்திலேயே 'ஆப்பம்' இருந்திருக்கிறது.
அதனைப் பாலில் ஊறவைத்துச் சாப்பிட்டிருக்கிறார்கள். இப்போது
தேங்காய்ப்பாலில் ஊறவைத்துச்சாப்பிடுகிறோம்.
ஒரு சின்ன exercise:
"இது எந்தப் பாடலில் வருகிறது?" என்று கேட்பவர்களுக்கு:
கரிகால் சோழர் என்ற குறிப்பைக் கொடுத்துவிட்டேன். இனி தேடிக்
கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்.
(கண்ணதாசன் ஒருமுறை சொன்னாராம்: "என்னுடைய
பாட்டில் இலக்கணம் இருக்கிறதா என்று கேட்பவர்கள், தேடிப்
பார்த்து, இருந்தால் எடுத்துக்கொள்ளட்டும்".)
ஈராயிரம் ஆண்டுகளாக ஆப்பம் இருந்திருக்கிறது. ஆனால்
இப்போது காணாமற்போய்க்கொண்டிருக்கிறது.
பல விஷயங்கள் காலப்போக்கில் காணாமற்போய்த்தான்
விட்டன. 'எலி மயிர்' ஆடையைப் பற்றி சங்க இலக்கியம் பேசுகிறது.
ஆடை நெய்யும் அளவுக்கு இப்போது தமிழகத்தில் எங்கே எலி
இருக்கிறது? கார்த்திகை-மார்கழிக் குளிர் காலத்தில் எலிக்கே
கம்பளிச் சட்டை போட்டுவிடவேண்டும் போலிருக்கிறது.
ஆடை நெய்யும் அளவுக்கு மென்மையான நீளமான
மயிர் படைத்த எலியினம் இருந்திருக்கிறது. Beaver, Otter,
Musk Rat போன்ற இனமாக இருந்திருக்கவேண்டும். அப்படியானால்
தமிழகத்தின் தட்பவெப்பநிலை இப்போதிலிருந்து வேறுபட்டுத்தான்
இருந்திருக்கவேண்டும்.
ச்ச்ச்.....
மயிர் என்றதும்தான் ஞாபகத்துக்கு வருகிறது. சிகையலங்காரத்
தொடர்.......
அன்புடன்
ஜெயபாரதி
(இதற்குமேல் கீழே பழசுகளெல்லாம் இருந்தால் சுரேஷ் கண்ணா
சீத்தப் பறையும். ஆகவே டிலீட் செய்துவிடுகிறேன். ஃபிஷ்க்).