From jaybee@... Thu May 23 16:56:11 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 23 May 2002 23:56:11 -0000
Received: (qmail 20184 invoked from network); 23 May 2002 23:56:10 -0000
Received: from unknown (66.218.66.218) by m9.grp.scd.yahoo.com with QMQP; 23 May 2002 23:56:10 -0000
Received: from unknown (HELO n24.grp.scd.yahoo.com) (66.218.66.80) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 23 May 2002 23:56:11 -0000
Received: from [66.218.67.146] by n24.grp.scd.yahoo.com with NNFMP; 23 May 2002 23:56:11 -0000
Date: Thu, 23 May 2002 23:56:10 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: ekan-anekan
Message-ID:
In-Reply-To: <3CED1B35.FCD203DC@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3483
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "jaybee555"
X-Originating-IP: 161.142.105.120
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18203

--- In agathiyar@y..., ஞானவெட்டியான் wrote:
>அன்பு நண்பரே,
>
>> >கருடன் உருவை எண்ணியவுடனே, பெருவிடமேறியிருப்பினும்
>> >அச்சம் நீங்கிவிடுவதால் உயிருக்கு ஆபத்து
>> >குறைந்துவிடுகிறது.
>நாம் இயம்பியது பயம் குறைந்து அதனால் ஆபத்தும்
>குறைகிறது என்பதே.
>
>> மஞ்சள்காமாலை வந்தால் மந்திரித்தால் போகும் என்கிறார்களே. அது
எப்படி ?
>அனுபவம் இல்லை.நம்பிக்கை (நம்பி + கை) வைத்தால்
>நோயின் கடுமை குறைய வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள்
>கூறுகிறார்கள்.
>நன்றி
>அன்புடன்
>-ஞானவெட்டியான்
>-திண்டுக்கல்(தமிழ்நாடு)


இதனை Spontaneous Remission என்று சொல்வார்கள்.
இதனைப் பற்றி ஏற்கனவே அகத்தியத்தில் பேசியிருக்கிறோம்.
இதன் அடிப்படை என்ன என்பது இன்னும் மர்மமாகவே
இருக்கிறது. மேலும் Miraculous Recovery என்ற விஷயமும்
இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. Faith Healing என்ற
முறை, பலகாலமாக நடப்பில் இருந்திக்கிறது. இப்போது
அதுவும் ஒரு மருத்துவமுறையாகக் கருதப்பட்டு, Alternative
Medicine, Holistic Medicine ஆகிய மருத்துவ முறைகளில்
இடம் பெறுகிறது.
நல்ல இழை. நிறையவே எழுதலாம். பூஜைக்குப் பின்னர்
இதனைப் பற்றி இன்னும் கொஞ்சம் எழுதுகிறேன்.

அன்புடன்

ஜெயபாரதி



>
>tamil netter wrote:
>>
>> திரு ஞானவெட்டியான் அவர்களுக்கு
>>
>> மந்திரம் என்று எழுதியதால் ஓர் ஐயம்.
>>
>> மஞ்சள்காமாலை வந்தால் மந்திரித்தால் போகும் என்கிறார்களே. அது
எப்படி ? மஞ்சள்
காமாலை என்பது
>> ஒருவகை வைரஸ். அதை மருந்தால் அழிக்க முடியும். ஆனால்
ஒருவனது உடலுக்குள் மருந்தை
செலுத்தாமல் எப்படி
>> மந்திரத்தால் மஞ்சள் காமாலையை போக்க இயலும் ?
>>
>> இது வெரும் நம்பிக்கையா அல்லது உண்மையா ? தாங்கள் மஞ்சள்
காமாலை வந்தவர்களை இப்படி
குணப்படுத்தியதை
>> கண்டதுண்டா?
>>
>> அன்புடன்
>>
>> தமிழ் நெட்டர்
>>
>> On 21 May 2002 at 22:21, ஞானவெட்டியான் wrote:
>>
>> >அன்புடையீர்,
>> >வணக்கம்.
>> > > மேலும் விளக்கம் வேண்டுவோர்க்கு, பாரதியின் சந்திரமதி
>> >புலம்பல் புரிந்த யோகியாரோ,
>> > > ஞானவெட்டியாரோ தெருட்ட வேண்டும்.
>> >நண்பர் திரு.சரபேSவரர்(குமார்) வேண்டுகோளுக்கிணங்கி
>> >ஏதோ எனக்குத் தெரிந்தவைகளை உளருகிறேன்.தெருட்டும்
>> >அளவுக்கு சரக்கு இல்லை.
>> >கருடன் உருவை எண்ணியவுடனே, பெருவிடமேறியிருப்பினும்
>> >அச்சம் நீங்கிவிடுவதால் உயிருக்கு ஆபத்து
>> >குறைந்துவிடுகிறது.அதுபோல,ஞானாசிரியன் உருவைத்
>> >தியானித்தபோது மும்மலங்களும் நீங்கும்.பாம்பால்
>> >கடியுண்டவர்களை விடமிறக்குபவன் கருட பாவனை
>> >மந்திரத்தை உச்சரித்துக் கருட பாவனையுடன் பார்க்கக்
>> >கடியுண்டவர்களின் உடலில் ஏறியுள்ள விடமிறங்கி உயிர்
>> >பிழைப்பர்.
>> >மலங்கள்:ஆணவம்,மாயை,கன்மம்.இவ்விடங்கள், குருவாகிய
>> >கருடனைத் தியானிக்க நீங்கும்.இறை மலமற்றது.ஆன்மாவும்
>> >மலமறும்போது இறையைப் போலாம்.மலமறுவது மிகவும்
>> >கடினம்.
>> >உலகத்தில் காணப்படும் கருடன் ஆதிபெளதிக
>> >கருடன்.மந்திர உருவமாகிய கருடன் ஆதி தைவீக
>> >கருடன்.அம்மந்திர உருவமே தானாக தன்னரிவு அதன்
>> >வயத்தாம் படி உறைந்து நிற்குமாறு ஒன்றித் தியானிக்கும்
>> >பாவனை கருட பாவனை. அம்மந்திரம் இடமாக நின்று
>> >மாந்திரீகனுக்குப் பயன்(பலம்) கொடுப்பதாகிய சிவ
>> >சத்தி ஆதியான்மிக கருடன் எனப்படும்.இறைவனின்
>> >திருப்பெயராகிய திருவைந்தெழுத்தே பிறவிப்
>> >பகையறுக்கும் மந்திரமாம்.
>> >திருமந்திரம்:
>> >"கருடன் உருவங் கருதும் அளவிற்
>> >பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல்
>> >குருவின் உருவங் குறித்தஅப் போதே
>> >திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே."
>> >நன்றி
>> >அன்புடன்
>> >-ஞானவெட்டியான்
>> >-திண்டுக்கல்(தமிழ்நாடு)
>> >
=====================