From nagas baan@... Thu May 23 21:38:24 2002
Return-Path:
X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 24 May 2002 04:38:24 -0000
Received: (qmail 62897 invoked from network); 24 May 2002 04:38:09 -0000
Received: from unknown (66.218.66.217) by m7.grp.scd.yahoo.com with QMQP; 24 May 2002 04:38:09 -0000
Received: from unknown (HELO n22.grp.scd.yahoo.com) (66.218.66.78) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 24 May 2002 04:38:09 -0000
Received: from [66.218.67.176] by n22.grp.scd.yahoo.com with NNFMP; 24 May 2002 04:38:08 -0000
Date: Fri, 24 May 2002 04:38:06 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: PuRanaanotRuch chiRukathaikaL - Oru Vaasaka Vimarsanam
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3288
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "nchokkan"
X-Originating-IP: 203.195.223.210
X-Yahoo-Group-Post: member; u=8108360
X-Yahoo-Profile: nchokkan
X-Yahoo-Message-Num: 18209

புறநாற்பத்துநான்கு சிறுகதைகள் - 24 05 2002

புறநானூற்றிலிருந்து தேர்ந்தெடுத்த நாற்பத்து நான்கு பாடல்களின் உரைவடிவமும், கதை
வடிவமும் கலந்து எழுத்தாளர் நா. பார்த்தசாரதி எழுதிய நூல், 'புறநானூற்றுச் சி
றுகதைகள்'. 1978ல் வெளியான இந்நூலை தற்போது தமிழ்ப்புத்தகாலயம் மறுபதிப்பு செய்தி
ருக்கிறார்கள்.

நூலின் சிறப்பான தகுதி - அதன் எளிமை. எல்லோரும் எங்கேயாவது
கேட்டிருக்கக்கூடிய அதியமான் - நெல்லிக்காய் கதை, பாரி மகளிர் கதை, முரசுக் கட்டிலி
ல் தூங்கிய புலவர், போன இளமையை நினைத்து வருந்துகிற முதியவர், யாண்டுபலவாகி
யும் நரையின்றியிருத்தல், கோழையைப் பெற்றுப் பாலூட்டிய மார்பை அறுத்தெரியத் துணி
ந்த தாய், அவமானத்தோடு தந்த நீரை அருந்த மறுத்த அரசன் முதலான கதைகள்தான்,
ஆனால் அவற்றை சுவையோடு சொல்லியிருக்கும்விதம் அற்புதமாய் இருக்கிறது. சங்க இலக்கி
யங்களை அணுகத் தயக்கம் இருக்கிற சாதாரண வாசகர்களைக்கூட உள்ளே இ
ழுத்துப்போட்டு, 'இவ்ளோதாம்பா விஷயம்' என்று சொல்லி பிரம்மிக்கச் செய்கிறது
ஒவ்வொரு கதையும். புறநானூற்றை ஏற்கெனவே வாசித்திருப்பவர்களைக்கூட, இந்தச் சிறிய
பாட்டில் இத்தனை விஷயங்கள், முன்கதைகள் இருக்கிறதா என்று வியக்கவைக்கும் சாதுர்யம் தி
ரு. நா. பாவிடம் இருக்கிறது - அதைத் தன்னுடைய கற்பனா சக்தியோடு கலந்து,
குழைத்து அவர் கதைகளாய்த் தரும்போது, பக்கத்திலேயே புறநானூறு புலியூர்க் கேசிகன்
உரையை வைத்துக்கொண்டு சரிபார்த்தும்கூட, எது கற்பனை, எது நிஜம் என்று கண்டுபி
டிக்க முடியவில்லை !

கதைகள் எதுவும் அநாவசியமாய் நீட்டி முழக்கப்படவில்லை - அநேகமாய் மூன்றிலிருந்து
ஐந்து பக்கங்களுக்குள் எந்தக் கதையானாலும் முடிந்துபோகிறது. ஆனால் அதற்குள் இ
யற்கை வர்ணனை, காட்சி வர்ணனை, பாத்திரங்கள், வசனம் என்று ஒரு முழுமையான
நாடக அமைப்பையே கொண்டுவந்துவிடுகிறார் நா. பா. நாம் வாசித்து அறிந்த புலவர்
பெயர்கள் கதைப்பாத்திரங்களாகவே நேரடியாய்ப் பயன்படுத்தப்பட்டிருப்பது பெருமி
தத்தை அளிக்கிறது. 'அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்' பாடலுக்கான விளக்கமாய்
உணர்ச்சிபொங்க எழுதப்பட்டிருக்கும் 'அன்றும், இன்றும்' என்ற கதை, தனிப்பட்டதொரு
வரலாற்றுச் சிறுகதையாகவே மிளிர்கிறது. ஒவ்வொரு கதையின் இறுதியிலும், கதைக்குரிய
புறநானூற்றுப்பாடலை வெளியிட்டு, அதன் கடினமான வார்த்தைகளுக்குப் பொருளும் தந்தி
ருப்பது மிகப் பயனுள்ளது. பாடலில் இருக்கும் சிறு தகவல்களைக்கூட காட்சிப்பூர்வமாய்
கதையில் பயன்படுத்தியிருக்கும் நுணுக்கம் வியக்கச் செய்கிறது - உதாரணமாய் மோசி
க்கீரனார் படுத்த முரசுக் கட்டிலின்மேல் எண்ணெய்நுரையைப்போல் விரிக்கப்பட்டிருந்த
மெல்லிய பூம்பட்டு !

முழுப்பாடல்களை மட்டும் கதைசொல்ல எடுத்துக்கொள்ளாமல், அவ்வப்போது பாடலின்
ஒரு சிறு பகுதியை மட்டும் சொல்லியிருக்கிறார் நா. பா. 'கால்கட்டு' என்னும் தலைப்பி
ல் வந்திருக்கும் 193வது புறநானூற்றுப் பாடலுக்கான கதையிலும், இன்னும் சிலவற்றிலும் -
பாடலின் மையக் கருத்து கதைக்காக சமரசம் செய்யப்பட்டிருப்பது சற்றே வருத்தமான
விஷயம்தான்.

பழந்தமிழர் வீரம், பண்பு, வாழ்க்கைமுறை, தத்துவ எண்ணங்கள், தமிழ்ப்பற்று
போன்றவற்றின் அடையாளச் சின்னங்களாய் இந்தக் கதைகள் விளங்குகின்றன -
மூலநூலான புறநானூற்றைப்போலவே. குழந்தைகளும்கூட வாசித்து அறியவேண்டிய
உபயோகமான, நல்ல நூல் இது.

- லாவண்யா

**********************************************************************
***********
புறநானூற்றுச் சிறுகதைகள் - நா. பார்த்தசாரதி - தமிழ்ப் புத்தகாலயம் - பக்கங்கள் :
192 - ரூ 55/-
**********************************************************************
***********