From jaybee@... Fri May 24 02:52:08 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 24 May 2002 09:52:08 -0000
Received: (qmail 52091 invoked from network); 24 May 2002 09:52:08 -0000
Received: from unknown (66.218.66.216) by m15.grp.scd.yahoo.com with QMQP; 24 May 2002 09:52:07 -0000
Received: from unknown (HELO n16.grp.scd.yahoo.com) (66.218.66.71) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 24 May 2002 09:52:07 -0000
Received: from [66.218.67.178] by n16.grp.scd.yahoo.com with NNFMP; 24 May 2002 09:52:07 -0000
Date: Fri, 24 May 2002 09:52:04 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: andha aappam puLikkum
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2461
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "jaybee555" X-Originating-IP: 161.142.105.217
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18214
அன்புள்ள திரு,
--- In agathiyar@y..., "jaybee555" wrote:
> திராட்சையின் தோலின்மீது லேசாகப் படர்ந்திருக்கும்
>வெண்மையான படலம் யீஸ்ட்டால்
ஏற்பட்டது. குலுக்கோஸ்
>சீனியைக் கரைத்துக்கொண்டு, அதில் திராட்சைத் தோலைக்
>கிள்ளிப்
போட்டு, இறுக மூடிவைத்தால் மூன்றுநாட்களில் ஒரு
>அருமையான வைன் தோன்றுவதைக் காணலாம்.
>
இதேபோல தென்னையின் பாளையில் இயற்கையிலேயே
>யீஸ்ட் காலனிகள் இருக்கும். பாளையைச்
சீவி, அதன் நுனியிலிருந்து
>வழியும் பதநீருடன் இந்த யீஸ்ட் கலந்து, அதன்மூலம் நொதித்தல்
>நிகழ்ந்து, கள் தோன்றுகிறது. கள் தோன்றா காலத்தே அது, அதன்
>முன்தோன்றிய பதநீராகத்தான்
இருக்கும்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
மதுவிலக்கு அமுலில் இருக்கும் சில நாடுகளில்
வேலை செய்யும் வெள்ளைக்காரர்களில் பலருக்குக் குடிப்
பழக்கம் இருக்கும். அவர்கள் சாதாரணமாகவே போதை
தராத மதுவகைகளை அடிக்கடி அருந்தும் வழக்கம்
கொண்டவர்களாக இருப்பார்கள். வைன் போன்றவற்றையும்
பீயரையும் அவர்கள் வீடுகளில் எப்போதும் கைவசம்
வைத்திருப்பார்கள்.
மதுவிலக்கு அமுலில் இருக்கும் நாடுகளில் அவர்களுக்குக்
குவோட்டா முறையில் மது அனுமதிக்கப்படக்கூடும். ஆனால் அது
எந்த மூலைக்கு?
ஆகவே அவர்களாகவே செய்துகொள்வார்கள்.
எப்படி?
இதுவும் ஒருமுறை. கண்டுகொள்க.
அவர்களுக்கு மூலப்பொருள் பழம். பெரும்பாலும் திராட்சை.
ஆரஞ்சு போன்ற பழங்களும் பயன்படுகின்றன.
திராட்சையை எடுத்துக்கொள்வோம்.
18 லிட்டர் தண்ணீரில் ஐந்து கீலோ திராட்சைப் பழத்தைச்
சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டுவிடுவார்கள். அதில் மூன்று
கீலோ சீனியைச் சேர்ப்பார்கள். இரண்டு பெரிய கரண்டி யீஸ்ட்
போடுவார்கள்.
இரண்டு பாக்கெட் டீத்தூளை ஒரு கப் நீரில் போட்டு
டீ தயாரித்துக்கொள்வார்கள். அதனையும் சேர்த்துக்கொள்வார்கள்.
இதனைப் பெரிய வாய் படைத்த ஜெரீ கேனில் ஊற்றி
மூடிவிடுவார்கள். மூடியில் ஒரு சிறிய துவாரம் போட்டுவிடுவார்கள்.
மூன்று வாரம் கழித்து, ஜெரீ கேனைத் திறப்பார்கள். மேலாக
இருக்கும் திரவம் தெளிவாக இருக்கும். அந்தப் பகுதியை மட்டும்
அப்படியே இன்னொரு பாத்திரத்தில் ஊற்றிக்கொள்வார்கள். பின்னர்
துணியில் வைத்து வடிகட்டிக்கொள்வார்கள். அதனை வாட்டர் கூலரில்
ஊற்றி வைத்துக்கொள்வார்கள்.
"அதுதான் தெரியுமே. அதுக்கப்பறந்தானே தெரியாது",
என்று டீ.பி. முத்துலட்சுமி, 'மேதாவிகள்' படத்தில் தங்கவேலுவிடம்
சொன்னாப்புல சொல்லாதீர்கள். அப்புறம் இன்னும் சொல்ல ஆரம்பித்து
விடுவேன். போகப் போகக் களைகட்டிவிடும். தூங்குபவர்கள் தூங்க
முடியாது.
ஏனென்றால் அடுத்து சொல்லப்போவது இன்னும் ரசமானது.......