From jaybee@... Fri May 24 03:39:28 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 24 May 2002 10:39:27 -0000
Received: (qmail 61054 invoked from network); 24 May 2002 10:39:27 -0000
Received: from unknown (66.218.66.216) by m7.grp.scd.yahoo.com with QMQP; 24 May 2002 10:39:27 -0000
Received: from unknown (HELO n20.grp.scd.yahoo.com) (66.218.66.76) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 24 May 2002 10:39:27 -0000
Received: from [66.218.67.167] by n20.grp.scd.yahoo.com with NNFMP; 24 May 2002 10:39:26 -0000
Date: Fri, 24 May 2002 10:39:24 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Ukraa and others - Re: andha aappam puLikkum
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3669
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "jaybee555" X-Originating-IP: 161.142.105.217
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18216
அன்புள்ள பாலார்,
At 04:07 PM 5/24/02 +0800, you wrote:
>
> In agathiyar@y..., "jaybee555" wrote:
>
> பல பலகாரங்கள் காணாமலேயே போய்விட்டன. பெயரைச்
>>சொன்னால்கூட தெரியமாட்டாது.
>> தமிழகத்திலும் அப்படித்தான் இருக்கும்போல் தோன்றுகிறது.
>>'உக்ரா' அல்லது 'உக்காரை' என்ற பலகாரத்தை கேள்விப்
>>பட்டிருக்கிறீர்களா? செட்டிநாட்டுச் சமாசாரம்.
>
>
>உக்காரை என்று என் பாட்டி செய்து கொடுப்பார்கள் ஆனால் சரியாக
>ஞாபகம் இல்லை, எதோ வேகவைத்துச் செய்வார்கள், புட்டு போல இருக்குமோ?
அது கேசரி, களி ஆகிய இரண்டும் கலந்த தோற்றத்தில்
ஒரு மாதிரியாக இருக்கும். இந்தப் பலகாரத்தை நாற்பத்தைந்து
ஆண்டுகளுக்கு முன்னர் சாப்பிட்டதுண்டு.
மலேசியாவில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சில கோயில்களைக்
கட்டியியிருக்கின்றனர். இந்தக் கோயில்களைப் பற்றி சில ஆண்டுகளுக்கு
முன்னர் அகத்தியத்தில் பேசியிருக்கிறோம். ("என்னடாயிது, அடிக்கடி
'அகத்தியத்தில் பேசியிருக்கிறோம். அகத்தியத்தில் பேசியிருக்கிறோம்',
என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறானே?" என்று நினைக்கக்கூடும்.
உண்மையைத்தான் சொல்கிறேன். அகத்தியத்தின் ஆவணத்தில்
உள்ள அந்தப் பதினெண்ணாயிரம் மடல்களைப் பாருங்கள். பலதுறைகளில்
பல விஷயங்கள் பேசப்பட்டிருப்பது தெரியவரும்.)
அந்தக் கோயில்களின் நிர்வாகம் நாட்டுக்கோட்டையார்களிடம்
மட்டுமே இருக்கும்.
அந்தக்காலத்தில் 'கிட்டங்கி' என்னும் செட்டிமார் நிறுவனங்களில்
செட்டிநாட்டுச் சமையற்காரர்கள் இருந்தனர். ('கிட்டங்கி'யும்
பேசப்பட்டிருக்கிறது). அவர்களுக்குச் செட்டிநாட்டுப் பலகாரங்கள்
அனைத்துமே அத்துப்படி.
அந்தந்த கோயில்களில் நிகழும் விழாக்கள், உபயங்கள்
ஆகியவற்றின்போது இரவில் பலகாரங்கள் மட்டுமே செய்வார்கள்.
பலமாதிரியான பலகாரங்கள் - வெள்ளையப்பம், கந்தரப்பம்,
உக்காரை, பால் பணியாரம், வெண்பொங்கல், சக்கரைப் பொங்கல்,
பால்பொங்கல், கற்கண்டுச்சாதம், தேங்காய்ச்சாதம், புளியோதரை,
நெய்ச்சாதம், சம்பாச்சாதம், கேசரி, காரவடை, தேங்காய்ப்பாலும்
தேங்காய்ப்பூவும் சீனியும் கலந்த இடியப்பம், தாளித்த இடியப்பம்
என்றவாறு விளங்கும். எப்போதுமே ஏழு வகைப் பலகாரங்கள் செய்து
பரிமாறுவார்கள்.
சிறிய கரண்டியால் ஒவ்வொரு கரண்டி பரிமாறுவார்கள்.
ஏழுவகை அல்லவா? ஒவ்வொன்றிலும் இரண்டாம் கரண்டி சாப்பிடுவதற்கு
முன்னர் வயிறு நிரம்பிவிடும். அதனைத் தொடர்ந்து பசும்பால் காப்பி.
ராயர்கடை தோற்றது போங்கள்.
சாதவகையறாக்களை அடுக்கினேன் அல்லவா? அவற்றில்
ஒன்பது தினுசு உண்டு. அவற்றைச் 'சித்திரான்னங்கள்' என்று சொல்வார்கள்.
>என் தாயாரும் செய்ததாக் நினைவு ஆனால் இப்பொழுதைய தலைமுறைக்கு
>இதெல்லாம் செய்யத் தெறியாது அல்லது செய்ய நேரமும் பொருமையும் கிடையாது.
புதிய பலகாரங்கள் தோன்றிவிட்டன. மேலும் 'திடீர்
குலோப்ஜான்', 'இன்ஸ்டண்ட் அல்வா', 'பாக்கெட் அதிரசம்' என்றெல்லாம்
சுப்பர் மார்க்கெட்டில் கிடைக்கிறது. பரபரப்பு மிகுந்த வாழ்க்கை.
(இப்போதுகூட இந்த இடம்வரைக்கும் படித்துக்கொண்டிருப்பார்களா
என்பதேகூட சந்தேகம். Hop, Skip and Jump செய்து அப்பால் போய்விடலாம்?
"அப்போ ஏன் எழுதறே"ன்னுட்டு கேக்கிறீங்களா? ஏதோ ஆத்தமாட்டமதான்.)
>
>அதேபோல இன்னும் பல...பால் கொழுக்கட்டை சோமாசி, சூய்யன் போன்றவை.
>இதெல்லாம் எனக்குத் தெறிந்தவரை, இன்னும் அந்தந்த வட்டாரத்திக்கு உரிய
>பலகாரங்கள் பல இருக்கலாம்.
>
>இப்படிக் காலாவதியான பலகாரங்களைப் பற்றி ஒரு வலைப்பக்கமே போடலாம்.
போடலாம்.
அவற்றில் பலவற்றின் ரிசிப்பி இன்னும் கிடைக்கின்றன.
நாற்பதாண்டு இடைவெளிக்குப் பின்னர் உக்ராவின் ரிசிப்பியை
பிரான்மலையில் பிடித்துவிட்டேன். டயரியில் எழுதிவைத்திருக்கிறேன்.
டயரி காணாமற்போய்விட்டால் அந்த ரிசிப்பியும் போய்விடும்.
மேலே குறிப்பிட்ட அனைத்துப் பலகாரங்களையும் நானே
செய்வேன். நானறிந்த கலைகளில் அவையும் அடங்கும்.