From jaybee@... Fri May 24 17:02:32 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 25 May 2002 00:02:32 -0000
Received: (qmail 79090 invoked from network); 25 May 2002 00:02:31 -0000
Received: from unknown (66.218.66.216) by m4.grp.scd.yahoo.com with QMQP; 25 May 2002 00:02:31 -0000
Received: from unknown (HELO n28.grp.scd.yahoo.com) (66.218.66.84) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 25 May 2002 00:02:31 -0000
Received: from [66.218.67.132] by n28.grp.scd.yahoo.com with NNFMP; 25 May 2002 00:02:15 -0000
Date: Sat, 25 May 2002 00:02:14 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: No NO It is not just 'yur Nambikkai alone... now scientifically proved strongly..
Message-ID: In-Reply-To: <002d01c202c7$ce1ab740$0ab409ca@sakthia>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 5489
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "jaybee555" X-Originating-IP: 161.142.105.197
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18226
--- In agathiyar@y..., "kaviyogivedham" wrote:
>அன்பர் திரு. செயபாரதி அவர்கட்கும்,
>திரு.ஞானவெட்டியான்(திண்டுக்கல்)அவர்கட்கும்..
> வணங்கிப்பணிந்து எழுதுவது,
>தற்போது நம் சென்னை-அபல்லோ ஆசுபத்ரியிலும்
>(Apollo Hospital,chennai-6)"Pranic Healing centre'
>என்ற தனிப்பகுதியில் அதில் நம்பிக்கை ஆழமாக உள்ளவர்கட்கு
>2 டாக்டர்கள்(Who have advanced practice in such color Pranas')
>& who r very efficient in that Healing system,as trained by
>Dr. Choa kak Sui Maharaj of Philippines, who found out that theory
>& deep practice+has written 2 books on"Pranic Healing"(which contain
both
>basic& Advanced-with Various Chakras healing,Pyramid healing,&Magnet
>healing)சிகித்சை செய்துவருகிறார்கள்.
இந்த விஷயத்தைப் பற்றி மேலும் எழுதுவதற்கு முன்னர்
மனதைப் பற்றியும் எண்ணங்களைப் பற்றியும் நம்பிக்கையைப் பற்றியும்
மனதின் ஆற்றலைப் பற்றியும் கொஞ்சம் சிந்திப்போமே.
'As a Man Thinketh' என்ற தலைப்பில் ஜேம்ஸ் ஆலன்
எழுதிய புத்தகம் ஒன்று இருக்கிறது. தமிழில் மோட்டிவேஷன்
புத்தகங்களின் வரிசையில் முன்னோடிகளில் ஒன்றாக
விளங்குவது இந்தப் புத்தகம். அதன் தலைப்பைக் கவனிக்க
வேண்டும்.
அந்தத் தலைப்புக்கும் திருவள்ளுவர் சொன்ன,
ஒரு வழிப்போக்கன் ஒரு வனாந்தரப் பகுதியில் நடந்து
சென்றுகொண்டிருந்தான். சரியான வெய்யில். புல்பூண்டைக்கூட
காணோம். நடந்து நடந்து காலோய்ந்துவிட்டது. பசியும் தாகமும்
மேலிட்டுவிட்டன.
அப்போது களைப்பின் மிகுதியால் தன் கண்களை மூடியவாறு
நடந்துகொண்டேயிருந்தான். சற்று நேரம் கழித்துத் தன் கண்களைத்
திறந்தபோது, ஒற்றை மரம் ஒன்று சற்றுதூரத்தில் காணப்பட்டது.
அங்குச் சென்றான்.
அதன் நிழலில் தங்கி இளைப்பாறினான். அப்போது அவன் மனதில்
ஓர் எண்ணம் ஓடியது.
"அடாடா! கொஞ்சம் தண்ணீர் இருந்தால் எவ்வளவு நல்லது?'
'டக்'கென்று ஒரு குவளை தோன்றியது. குளிர்ந்த நீர். தாகம்
தீருமளவுக்குக் குடித்தான்.
தாகம் அடங்கியதும் பசி அவனுடைய கவனத்தை ஈர்த்தது.
"பசிக்கு ஏதும் கிடக்காதா?" என்று நினைத்தான். உடனேயே
தட்டுகளில் அறுசுவை உணவு தோன்றியது. உண்டான்.
அடுத்தாற்போல, "சற்றுத் தூங்கினால் நலம்", என்று நினைத்தான்.
அதற்கேற்றாற்போல 'ஹம்சதூளிகா மஞ்சம்' எனப்படும் கட்டில்
தோன்றியது. (இந்த ஹம்சதூளிகா மஞ்சத்தைப்பற்றிச் சொல்கிறேன்.
யாராவது ஞாபகப்படுத்துங்கள். இழைகள் தோன்றத் தோன்ற, அங்கெல்லாம்
சென்றுவிடுகிறேன்.) படுத்துக்கொண்டான்.
"இப்போது சற்று மென்காற்று வீசினால் நல்லது", என்று நினைத்தான்.
அதுவும் வீசியது. கால் வலி. "காலைப் பிடித்துவிட்டால் எவ்வளவு
சௌகரியம்?" என்று நினைத்தமாத்திரத்தில் ஓர் அழகிய பெண் தோன்றி
காலைப் பிடித்துவிட்டாள். அடுத்தாற்போல அவன் எண்ணத்தைப்போல
இன்னொரு அழகிய பெண் தோன்றி யாழ் மீட்டிய வண்ணம் இன்னிசை
வழங்கலானாள்.
அந்த மனிதனுக்கு இப்போது புதியதாக ஒரு யோசனை.
"என்னடாயிது? நாம் பாட்டுக்கு ஒவ்வொன்றாக நினைக்கிறோம்.
அதற்கேற்றதுபோல ஒவ்வொன்றாகத் தோன்றுகிறதே? இந்த மரத்தின்
அடியில்தானே அத்தனையும் நடக்கின்றன? அப்படியானால் இந்த மரத்தில்
ஏதும் பிசாசு இருக்கிறதோ?" என்று எண்ணினான்.
உடனேயே அவன் எதிரில் ஒரு பிசாசு தோன்றியது.
அவனுக்கு ஒரே பயம்.
"இந்தப் பிசாசு நம்மை அடித்துவிடுமோ?" என்று நினைத்தான்.
அவ்வாறே அந்தப் பிசாசு அவனை அடித்துப்போட்டது.
அந்த மரம் ஒரு கற்பகவிருட்சம். நினைத்தையெல்லாம்
வழங்கக்கூடிய தன்மை படைத்தது. கற்பகத்தரு, சிந்தாமணி, காமதேனு,
சியமந்தகமணி போன்றவை நினைத்தவற்றைக் கொடுக்கும்
ஆற்றல் படைத்தவை.
இந்தக் கதை, வள்ளுவரின் அந்தக் குறள், ஜேம்ஸ் ஆலனின்
புத்தகத்தின் தலைப்பு - 'As a Man Thinketh' ஆகியவற்றை
வரிசைப்படுத்திப் பாருங்கள்.
அன்புடன்
ஜெயபாரதி
> 1995-ல் அந்த ப்லிப்பைன்ச் டாக்டரே அங்கே அப்பகுதியைத் தொடங்கிவைத்துப் பேசினார்.
>அதன் சுருக்கத்தை நாளை (பழைய டயரி கிட்டிடின்!)யிவண் எழுதுகிறேன்.
>நாளது தேதிவரை சுமார் 4017 பேர் அப்பகுதியில்(போனில் பேசித் தெரிந்துகொண்டு
எழுதுகிறேன்).ஆனால்
>சிகித்சைக்குப்பிறகு கண்டிப்பாய்(to support& as complimentary)
>கொஞ்சமாய் சிலவகை(குறைந்த திறனுள்ள)மருந்துகளும் கொடுப்பார்கள்.
>நாளை யிதுபற்றித் தொடர்ந்து எழுதுகிறேன்.ஆக, யிது வெறும் நம்பிக்கையின்பாற்
>பட்டதுமட்டுமில்லை.எல்லா நோய்களும்,விடங்களும்,முதலில் நம்மைச்சுற்றியுள்ள
>"Aura body"-spiritual sushma fine body-தனைத் தாக்கியபிறகே,முதலில்
>outer "psychic vibratic Health-body current'-யினாலும்+பின்பு
>வெள்ளை அணுக்களாலும் தோற்கடிக்கப்படாவிட்டால் மட்டுமே,நம் உடலினுள்ளே
>செல்லமுடியும். விஞ்ஞான முறையினாலும் யிது நிரூபிக்கப்பட்டுள்ளது.யிதுவே உண்மை..
>(யோகியார்)
>
>----- Original Message -----
>From: jaybee555 >To: >Sent: Friday, May 24, 2002 5:26 AM
>Subject: [agathiyar] Re: ekan-anekan
>iதனை Spontaneous Remission என்று சொல்வார்கள்.
>> இதனைப் பற்றி ஏற்கனவே அகத்தியத்தில் பேசியிருக்கிறோம்.
>> இதன் அடிப்படை என்ன என்பது இன்னும் மர்மமாகவே
>> இருக்கிறது. மேலும் Miraculous Recovery என்ற வி"யமும்
>> இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. Faith Healing என்ற
>> முறை, பலகாலமாக நடப்பில் இருந்திக்கிறது. இப்போது
>> அதுவும் ஒரு மருத்துவமுறையாகக் கருதப்பட்டு, Alternative
>> Medicine, Holistic Medicine ஆகிய மருத்துவ முறைகளில்
>> இடம் பெறுகிறது.
>> அன்புடன்
>>
>> fயபாரதி
>
>===========================
>
>