From sarabeswar@... Fri May 24 21:28:29 2002
Return-Path: X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 25 May 2002 04:28:28 -0000
Received: (qmail 78976 invoked from network); 25 May 2002 04:28:27 -0000
Received: from unknown (66.218.66.217) by m3.grp.scd.yahoo.com with QMQP; 25 May 2002 04:28:27 -0000
Received: from unknown (HELO n27.grp.scd.yahoo.com) (66.218.66.83) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 25 May 2002 04:28:27 -0000
Received: from [66.218.67.152] by n27.grp.scd.yahoo.com with NNFMP; 25 May 2002 04:28:22 -0000
Date: Sat, 25 May 2002 04:28:20 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: No NO It is not just 'yur Nambikkai alone... now scientifically proved strongly..
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 4285
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar" X-Originating-IP: 202.158.24.97
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18227
ஜேபி ஐயா,
அற்புதமான கதை. அதைக் கோத்தவிதமும் அருமை.
ஆம், உள்ளத்தனையதே உயர்வு!
யோகியாரே, எங்கே மூன்றாம் பகுதி? ஆவலைத் தூண்டிவிட்டுத்
தாங்களும் அமைதி காத்தல் தகுமா!
அன்புடன்,
குமார்
--- In agathiyar@y..., "jaybee555" wrote:
> --- In agathiyar@y..., "kaviyogivedham" wrote:
>
> >அன்பர் திரு. செயபாரதி அவர்கட்கும்,
> >திரு.ஞானவெட்டியான்(திண்டுக்கல்)அவர்கட்கும்..
> > வணங்கிப்பணிந்து எழுதுவது,
> >தற்போது நம் சென்னை-அபல்லோ ஆசுபத்ரியிலும்
> >(Apollo Hospital,chennai-6)"Pranic Healing centre'
> >என்ற தனிப்பகுதியில் அதில் நம்பிக்கை ஆழமாக உள்ளவர்கட்கு
> >2 டாக்டர்கள்(Who have advanced practice in such color Pranas')
> >& who r very efficient in that Healing system,as trained by
> >Dr. Choa kak Sui Maharaj of Philippines, who found out that theory
> >& deep practice+has written 2 books on"Pranic Healing"(which
contain
> both
> >basic& Advanced-with Various Chakras healing,Pyramid
healing,&Magnet
> >healing)சிகித்சை செய்துவருகிறார்கள்.
>
>
> இந்த விஷயத்தைப் பற்றி மேலும் எழுதுவதற்கு முன்னர்
> மனதைப் பற்றியும் எண்ணங்களைப் பற்றியும் நம்பிக்கையைப் பற்றியும்
> மனதின் ஆற்றலைப் பற்றியும் கொஞ்சம் சிந்திப்போமே.
>
> 'As a Man Thinketh' என்ற தலைப்பில் ஜேம்ஸ் ஆலன்
> எழுதிய புத்தகம் ஒன்று இருக்கிறது. தமிழில் மோட்டிவேஷன்
> புத்தகங்களின் வரிசையில் முன்னோடிகளில் ஒன்றாக
> விளங்குவது இந்தப் புத்தகம். அதன் தலைப்பைக் கவனிக்க
> வேண்டும்.
> அந்தத் தலைப்புக்கும் திருவள்ளுவர் சொன்ன,
>
> எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
> திண்ணியர் ஆகப் பெறின்.
>
> குறளுக்கும் உள்ள தொடர்பைப் பார்ப்போம்.
>
> இது பற்றிய ஒரு பழங்கதை இருக்கிறது.
>
> ஒரு வழிப்போக்கன் ஒரு வனாந்தரப் பகுதியில் நடந்து
> சென்றுகொண்டிருந்தான். சரியான வெய்யில். புல்பூண்டைக்கூட
> காணோம். நடந்து நடந்து காலோய்ந்துவிட்டது. பசியும் தாகமும்
> மேலிட்டுவிட்டன.
> அப்போது களைப்பின் மிகுதியால் தன் கண்களை மூடியவாறு
> நடந்துகொண்டேயிருந்தான். சற்று நேரம் கழித்துத் தன் கண்களைத்
> திறந்தபோது, ஒற்றை மரம் ஒன்று சற்றுதூரத்தில் காணப்பட்டது.
> அங்குச் சென்றான்.
>
> அதன் நிழலில் தங்கி இளைப்பாறினான். அப்போது அவன் மனதில்
> ஓர் எண்ணம் ஓடியது.
>
> "அடாடா! கொஞ்சம் தண்ணீர் இருந்தால் எவ்வளவு நல்லது?'
> 'டக்'கென்று ஒரு குவளை தோன்றியது. குளிர்ந்த நீர். தாகம்
> தீருமளவுக்குக் குடித்தான்.
> தாகம் அடங்கியதும் பசி அவனுடைய கவனத்தை ஈர்த்தது.
> "பசிக்கு ஏதும் கிடக்காதா?" என்று நினைத்தான். உடனேயே
> தட்டுகளில் அறுசுவை உணவு தோன்றியது. உண்டான்.
> அடுத்தாற்போல, "சற்றுத் தூங்கினால் நலம்", என்று நினைத்தான்.
> அதற்கேற்றாற்போல 'ஹம்சதூளிகா மஞ்சம்' எனப்படும் கட்டில்
> தோன்றியது. (இந்த ஹம்சதூளிகா மஞ்சத்தைப்பற்றிச் சொல்கிறேன்.
> யாராவது ஞாபகப்படுத்துங்கள். இழைகள் தோன்றத் தோன்ற, அங்கெல்லாம்
> சென்றுவிடுகிறேன்.) படுத்துக்கொண்டான்.
> "இப்போது சற்று மென்காற்று வீசினால் நல்லது", என்று நினைத்தான்.
> அதுவும் வீசியது. கால் வலி. "காலைப் பிடித்துவிட்டால் எவ்வளவு
> சௌகரியம்?" என்று நினைத்தமாத்திரத்தில் ஓர் அழகிய பெண் தோன்றி
> காலைப் பிடித்துவிட்டாள். அடுத்தாற்போல அவன் எண்ணத்தைப்போல
> இன்னொரு அழகிய பெண் தோன்றி யாழ் மீட்டிய வண்ணம் இன்னிசை
> வழங்கலானாள்.
>
> அந்த மனிதனுக்கு இப்போது புதியதாக ஒரு யோசனை.
> "என்னடாயிது? நாம் பாட்டுக்கு ஒவ்வொன்றாக நினைக்கிறோம்.
> அதற்கேற்றதுபோல ஒவ்வொன்றாகத் தோன்றுகிறதே? இந்த மரத்தின்
> அடியில்தானே அத்தனையும் நடக்கின்றன? அப்படியானால் இந்த மரத்தில்
> ஏதும் பிசாசு இருக்கிறதோ?" என்று எண்ணினான்.
> உடனேயே அவன் எதிரில் ஒரு பிசாசு தோன்றியது.
> அவனுக்கு ஒரே பயம்.
> "இந்தப் பிசாசு நம்மை அடித்துவிடுமோ?" என்று நினைத்தான்.
> அவ்வாறே அந்தப் பிசாசு அவனை அடித்துப்போட்டது.
>
> அந்த மரம் ஒரு கற்பகவிருட்சம். நினைத்தையெல்லாம்
> வழங்கக்கூடிய தன்மை படைத்தது. கற்பகத்தரு, சிந்தாமணி, காமதேனு,
> சியமந்தகமணி போன்றவை நினைத்தவற்றைக் கொடுக்கும்
> ஆற்றல் படைத்தவை.
>
> இந்தக் கதை, வள்ளுவரின் அந்தக் குறள், ஜேம்ஸ் ஆலனின்
> புத்தகத்தின் தலைப்பு - 'As a Man Thinketh' ஆகியவற்றை
> வரிசைப்படுத்திப் பாருங்கள்.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி