From jaybee2741@... Fri May 24 21:54:51 2002
Return-Path:
X-Sender: jaybee2741@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 25 May 2002 04:54:51 -0000
Received: (qmail 66008 invoked from network); 25 May 2002 04:54:51 -0000
Received: from unknown (66.218.66.216) by m5.grp.scd.yahoo.com with QMQP; 25 May 2002 04:54:51 -0000
Received: from unknown (HELO n23.grp.scd.yahoo.com) (66.218.66.79) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 25 May 2002 04:54:51 -0000
Received: from [66.218.67.166] by n23.grp.scd.yahoo.com with NNFMP; 25 May 2002 04:54:50 -0000
Date: Sat, 25 May 2002 04:54:50 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: No NO It is not just 'yur Nambikkai alone... now scientifically proved strongly..
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3989
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "jaybee2741"
X-Originating-IP: 161.142.105.205
X-Yahoo-Group-Post: member; u=52133537
X-Yahoo-Profile: jaybee2741
X-Yahoo-Message-Num: 18228

--- In agathiyar@y..., "sarabeswar" wrote:
> ஜேபி ஐயா,
>
> அற்புதமான கதை. அதைக் கோத்தவிதமும் அருமை.

>
> அன்புடன்,
> குமார்


இன்னும் இருக்குங்குறேன்.....
யாரு விட்டது? கீழே இருக்கு தொடர்ச்சி.....


>--- In agathiyar@y..., "kaviyogivedham" wrote:
>
>>அன்பர் திரு. செயபாரதி அவர்கட்கும்,
>>திரு.ஞானவெட்டியான்(திண்டுக்கல்)அவர்கட்கும்..
>>
வணங்கிப்பணிந்து எழுதுவது,
>>தற்போது நம் சென்னை-அபல்லோ ஆசுபத்ரியிலும்
>>(Apollo
Hospital,chennai-6)"Pranic Healing centre'
>>என்ற தனிப்பகுதியில் அதில்
நம்பிக்கை ஆழமாக உள்ளவர்கட்கு
>>2 டாக்டர்கள் சிகித்சை செய்துவருகிறார்கள்.


>
>
>இந்த விஷயத்தைப் பற்றி மேலும் எழுதுவதற்கு முன்னர்

>மனதைப் பற்றியும் எண்ணங்களைப் பற்றியும் நம்பிக்கையைப் பற்றியும்

>மனதின் ஆற்றலைப் பற்றியும் கொஞ்சம் சிந்திப்போமே.

>
>
> இந்தக் கதை, வள்ளுவரின் அந்தக் குறள், ஜேம்ஸ் ஆலனின்

>புத்தகத்தின் தலைப்பு - 'As a Man Thinketh' ஆகியவற்றை

>வரிசைப்படுத்திப் பாருங்கள்.
>

>அன்புடன்
>

>ஜெயபாரதி


இன்னும் கொஞ்சம் விரிவாக்கிப் பார்க்கலாம்.

திருநாவுக்கரசர் சமணத்திலிருந்து சைவ சமயத்திற்கு
மாறியபின்னர், அவரைப் மகேந்திரவர்ம பல்லவர் கொல்விப்பதற்கு
முயற்சி செய்தார். யானையை விட்டு இடறவிட்டார்; பாலமுதில் நஞ்சு
கலந்து உண்ணச்செய்தார்; காளவாயில் இட்டுவித்தார்; கல்லில்
கட்டி கடலில் போட்டுவித்தார்.
ஆனாலும் ஆரொருவர் ஆட்டுவித்தார் ஆரொருவரும்
ஆடாமலிருக்கமுடியாதோ அந்த நச்சினார்க்கு இனியனின்
திருவருளால் அவர் உயிர் தப்பினார்.
காளவாயில் சில வகைகள் உண்டு. செங்கல், மட்பாண்டம்,
சுண்ணாம்பு ஆகிய காளவாய்கள் இருக்கின்றன. அவற்றில் ஆளைச்
சுண்ணாம்புக் காளவாயில் இடுவது என்பது அக்காலத்தில் கொடுக்கப்படும்
தண்டனைகளில் ஒன்றாக இருந்தது.
சுண்ணாம்புக் காளவாயில் ஆளைப்போட்டு, சுற்றிலும் Lime-stone
என்னும் சுண்ணாம்புக் கற்துண்டுகளைப் போட்டு விடுவார்கள். விறகுகள்
அவற்றிற்குரிய இடங்களில் இடப்படும். கடைசியில் மேலே மணலையும்
சுண்ணாம்புக் கற்களை கலந்து மூடிவிடுவார்கள்.
கீழேயுள்ள விறகுகளைப் பற்றவைத்துவிடுவார்கள். நாட்கணக்கில்
மெதுவாக எரிந்துகொண்டேயிருக்கும். எரிந்து கொண்டே உட்புறமாகச்
செல்லும். Lime-stone என்பது Calcium Carbonate. சூடு ஏற்றப்படும்போது
அது ரசாயனவினைக்கு ஆளாகி, Quick lime எனப்படும் Calcium Oxide
ஆக மாறிவிடும். உபரி Carbon Dioxide வெளியாகிக்கொண்டிருக்கும்.
இதன் விளைவாக உள்ளேயிடப்பட்டிருக்கும் ஆளின் உடல்
மெதுவாக வெந்து, சதையெல்லாம் அரிக்கப்பட்டு, எலும்பு மட்டுமே எஞ்சும்
நிலையில் இருக்கும். எலும்பும்கூட ரசாயனவினைக்கு ஆளாகிவிட்டிருக்கும்.
இந்த எஞ்சிய மிச்சம் மீதாரியைக் காட்சியில் வைத்தார்களா
என்று தெரியாது. அந்தக் காலத்தில் தண்டனைக்கு ஆளாகியவர்களையும்
அவர்களின் மிச்சம் மீதாரிகளையும் பார்வைக்கு வைப்பது வழக்கம்.

இந்த மாதிரிக் காளவாயில் இடப்பட்ட திருநாவுக்கரசர்,
இறைவனின் திருவடிகளை நினைத்துக்கொண்டார். அந்தத் திருவடி
நிழலில் தாம் இருப்பதாகவும் முழு ஆழமாக நம்பினார். இறைவனின்
திருவடி நிழல் எப்படியிருக்கும் என்று மிகஆழமாக, மிக முழுமையாக
ஏகாக்ர சித்தத்துடன் தமக்கே கற்பித்துக்கொண்டார்.

மாசு இல் வீணையும், மாலை மதியமும்
வீசு தென்றலும், வீங்கிளவேனிலும்
மூசு வண்டர பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தையின் இணையடி நீழலே

மாலை நேரம்; முழு நிலவு தோன்றியிருக்கிறது. தென்றல்
வீசிக்கொண்டிருக்கிறது; காலமோ இளவேனிற் காலம் - Spring-time.
அழகிய பொன்வண்டுகள் இழுமிக்கொண்டிருக்கும் பொய்கை.....
இதைப் போன்றதே ஈசன் எந்தையின் இணையடி நீழலே, என்று
அறுதியிட்டுக் கூறுகிறார்.

இப்போது Virtual Imaging, Psycho-cybernetics என்று
அழைக்கிறோம் அல்லவா? அந்த முறையும் திருநாவுக்கரசரின்
முறைக்குள் அடங்கும். அப்பரின் முறை அந்த முறையிலேயே
இறுதியான நிலையை ஒட்டிய நிலை. ஒட்டிய நிலை என்றுதானே
சொன்னேன். இறுதி நிலை என்று சொல்லவில்லையே?
:-)
இறுதிநிலை வெறெதாக இருக்கமுடியும்?
தான் அதுவாதல்தான்.
தத் த்வம் அஸி - திருமூலர் இதனைத் 'தொந்தத்தசி' என்று கூறுவார்.

சரி.
இதற்கெல்லாம் ஆணிவேராகத் திகழ்வது?
நம்பிக்கை.

அன்புடன்

ஜெயபாரதி