From netranger@... Sat May 25 00:17:37 2002
Return-Path:
X-Sender: netranger@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 25 May 2002 07:17:37 -0000
Received: (qmail 63917 invoked from network); 25 May 2002 07:17:37 -0000
Received: from unknown (66.218.66.217) by m2.grp.scd.yahoo.com with QMQP; 25 May 2002 07:17:37 -0000
Received: from unknown (HELO ethfrvs.eth.net) (202.9.145.41) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 25 May 2002 07:17:36 -0000
Received: from smtp2 ([202.9.178.23]) by ethfrvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Sat, 25 May 2002 12:58:57 +0530
Received: from 202.9.169.103 by smtp2 (InterScan E-Mail VirusWall NT); Sat, 25 May 2002 12:41:49 +0530
Message-ID: <3CEF36A0.B726CAB1@...>
Date: Sat, 25 May 2002 12:30:48 +0530
X-Mailer: Mozilla 4.78 [en] (Win98; U)
X-Accept-Language: tamil,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: No NO It is not just 'yur Nambikkai alone... now scientifically proved strongly..
References:
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
Return-Path: netranger@...
X-OriginalArrivalTime: 25 May 2002 07:28:57.0647 (UTC) FILETIME=[D4F73BF0:01C203BD]
From: ஞானவெட்டியான்
X-Yahoo-Group-Post: member; u=95039220
X-Yahoo-Profile: gnanavettiyaan
X-Yahoo-Message-Num: 18232

அன்பும் மதிப்புக்கும் உரிய யோகியாருக்கு,
வணக்கம். ஆமாம். மூன்றாம் பகுதியைத் தாருங்கள். ஆர்வம்
கொப்பளிக்கிறது.
நன்றி
-ஞானவெட்டியான்
-திண்டுக்கல்(தமிழ்நாடு)
sarabeswar wrote:
>
> ஜேபி ஐயா,
>
> அற்புதமான கதை. அதைக் கோத்தவிதமும் அருமை.
> ஆம், உள்ளத்தனையதே உயர்வு!
>
> யோகியாரே, எங்கே மூன்றாம் பகுதி? ஆவலைத் தூண்டிவிட்டுத்
> தாங்களும் அமைதி காத்தல் தகுமா!
>
> அன்புடன்,
> குமார்
>
> --- In agathiyar@y..., "jaybee555" wrote:
> > --- In agathiyar@y..., "kaviyogivedham" wrote:
> >
> > >அன்பர் திரு. செயபாரதி அவர்கட்கும்,
> > >திரு.ஞானவெட்டியான்(திண்டுக்கல்)அவர்கட்கும்..
> > > வணங்கிப்பணிந்து எழுதுவது,
> > >தற்போது நம் சென்னை-அபல்லோ ஆசுபத்ரியிலும்
> > >(Apollo Hospital,chennai-6)"Pranic Healing centre'
> > >என்ற தனிப்பகுதியில் அதில் நம்பிக்கை ஆழமாக உள்ளவர்கட்கு
> > >2 டாக்டர்கள்(Who have advanced practice in such color Pranas')
> > >& who r very efficient in that Healing system,as trained by
> > >Dr. Choa kak Sui Maharaj of Philippines, who found out that theory
> > >& deep practice+has written 2 books on"Pranic Healing"(which
> contain
> > both
> > >basic& Advanced-with Various Chakras healing,Pyramid
> healing,&Magnet
> > >healing)சிகித்சை செய்துவருகிறார்கள்.
> >
> >
> > இந்த விஷயத்தைப் பற்றி மேலும் எழுதுவதற்கு முன்னர்
> > மனதைப் பற்றியும் எண்ணங்களைப் பற்றியும் நம்பிக்கையைப் பற்றியும்
> > மனதின் ஆற்றலைப் பற்றியும் கொஞ்சம் சிந்திப்போமே.
> >
> > 'As a Man Thinketh' என்ற தலைப்பில் ஜேம்ஸ் ஆலன்
> > எழுதிய புத்தகம் ஒன்று இருக்கிறது. தமிழில் மோட்டிவேஷன்
> > புத்தகங்களின் வரிசையில் முன்னோடிகளில் ஒன்றாக
> > விளங்குவது இந்தப் புத்தகம். அதன் தலைப்பைக் கவனிக்க
> > வேண்டும்.
> > அந்தத் தலைப்புக்கும் திருவள்ளுவர் சொன்ன,
> >
> > எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
> > திண்ணியர் ஆகப் பெறின்.
> >
> > குறளுக்கும் உள்ள தொடர்பைப் பார்ப்போம்.
> >
> > இது பற்றிய ஒரு பழங்கதை இருக்கிறது.
> >
> > ஒரு வழிப்போக்கன் ஒரு வனாந்தரப் பகுதியில் நடந்து
> > சென்றுகொண்டிருந்தான். சரியான வெய்யில். புல்பூண்டைக்கூட
> > காணோம். நடந்து நடந்து காலோய்ந்துவிட்டது. பசியும் தாகமும்
> > மேலிட்டுவிட்டன.
> > அப்போது களைப்பின் மிகுதியால் தன் கண்களை மூடியவாறு
> > நடந்துகொண்டேயிருந்தான். சற்று நேரம் கழித்துத் தன் கண்களைத்
> > திறந்தபோது, ஒற்றை மரம் ஒன்று சற்றுதூரத்தில் காணப்பட்டது.
> > அங்குச் சென்றான்.
> >
> > அதன் நிழலில் தங்கி இளைப்பாறினான். அப்போது அவன் மனதில்
> > ஓர் எண்ணம் ஓடியது.
> >
> > "அடாடா! கொஞ்சம் தண்ணீர் இருந்தால் எவ்வளவு நல்லது?'
> > 'டக்'கென்று ஒரு குவளை தோன்றியது. குளிர்ந்த நீர். தாகம்
> > தீருமளவுக்குக் குடித்தான்.
> > தாகம் அடங்கியதும் பசி அவனுடைய கவனத்தை ஈர்த்தது.
> > "பசிக்கு ஏதும் கிடக்காதா?" என்று நினைத்தான். உடனேயே
> > தட்டுகளில் அறுசுவை உணவு தோன்றியது. உண்டான்.
> > அடுத்தாற்போல, "சற்றுத் தூங்கினால் நலம்", என்று நினைத்தான்.
> > அதற்கேற்றாற்போல 'ஹம்சதூளிகா மஞ்சம்' எனப்படும் கட்டில்
> > தோன்றியது. (இந்த ஹம்சதூளிகா மஞ்சத்தைப்பற்றிச் சொல்கிறேன்.
> > யாராவது ஞாபகப்படுத்துங்கள். இழைகள் தோன்றத் தோன்ற, அங்கெல்லாம்
> > சென்றுவிடுகிறேன்.) படுத்துக்கொண்டான்.
> > "இப்போது சற்று மென்காற்று வீசினால் நல்லது", என்று நினைத்தான்.
> > அதுவும் வீசியது. கால் வலி. "காலைப் பிடித்துவிட்டால் எவ்வளவு
> > சௌகரியம்?" என்று நினைத்தமாத்திரத்தில் ஓர் அழகிய பெண் தோன்றி
> > காலைப் பிடித்துவிட்டாள். அடுத்தாற்போல அவன் எண்ணத்தைப்போல
> > இன்னொரு அழகிய பெண் தோன்றி யாழ் மீட்டிய வண்ணம் இன்னிசை
> > வழங்கலானாள்.
> >
> > அந்த மனிதனுக்கு இப்போது புதியதாக ஒரு யோசனை.
> > "என்னடாயிது? நாம் பாட்டுக்கு ஒவ்வொன்றாக நினைக்கிறோம்.
> > அதற்கேற்றதுபோல ஒவ்வொன்றாகத் தோன்றுகிறதே? இந்த மரத்தின்
> > அடியில்தானே அத்தனையும் நடக்கின்றன? அப்படியானால் இந்த மரத்தில்
> > ஏதும் பிசாசு இருக்கிறதோ?" என்று எண்ணினான்.
> > உடனேயே அவன் எதிரில் ஒரு பிசாசு தோன்றியது.
> > அவனுக்கு ஒரே பயம்.
> > "இந்தப் பிசாசு நம்மை அடித்துவிடுமோ?" என்று நினைத்தான்.
> > அவ்வாறே அந்தப் பிசாசு அவனை அடித்துப்போட்டது.
> >
> > அந்த மரம் ஒரு கற்பகவிருட்சம். நினைத்தையெல்லாம்
> > வழங்கக்கூடிய தன்மை படைத்தது. கற்பகத்தரு, சிந்தாமணி, காமதேனு,
> > சியமந்தகமணி போன்றவை நினைத்தவற்றைக் கொடுக்கும்
> > ஆற்றல் படைத்தவை.
> >
> > இந்தக் கதை, வள்ளுவரின் அந்தக் குறள், ஜேம்ஸ் ஆலனின்
> > புத்தகத்தின் தலைப்பு - 'As a Man Thinketh' ஆகியவற்றை
> > வரிசைப்படுத்திப் பாருங்கள்.
> >
> > அன்புடன்
> >
> > ஜெயபாரதி
>
>
> ---------------------------------------------------------------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> ---------------------------------------------------------------------------------
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/