From suganjb@... Sat May 25 04:46:38 2002
Return-Path: X-Sender: suganjb@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 25 May 2002 11:46:38 -0000
Received: (qmail 36761 invoked from network); 25 May 2002 11:46:37 -0000
Received: from unknown (66.218.66.217) by m11.grp.scd.yahoo.com with QMQP; 25 May 2002 11:46:37 -0000
Received: from unknown (HELO smtp4.jaring.my) (61.6.32.54) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 25 May 2002 11:46:37 -0000
Received: from user (j35.spt.jaring.my [161.142.105.229]) by smtp4.jaring.my (8.11.4/8.11.4) with SMTP id g4PBkY802014 for ; Sat, 25 May 2002 19:46:35 +0800 (MYT)
Message-Id: <3.0.3.32.20020525194323.006b84fc@...>
X-Sender: suganjb@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sat, 25 May 2002 19:43:23 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: Hamsa DhULikaa Manjam - Re: [agathiyar] Re: No NO It is not just 'yur Nambikkai alone... now scientifically proved strongly..
In-Reply-To: References: <002d01c202c7$ce1ab740$0ab409ca@sakthia>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=68538591
X-Yahoo-Message-Num: 18238
At 12:02 AM 5/25/02 -0000, you wrote:
> அடுத்தாற்போல, "சற்றுத் தூங்கினால் நலம்", என்று நினைத்தான்.
>அதற்கேற்றாற்போல 'ஹம்சதூளிகா மஞ்சம்' எனப்படும் கட்டில்
>தோன்றியது. (இந்த ஹம்சதூளிகா மஞ்சத்தைப்பற்றிச் சொல்கிறேன்.
>யாராவது ஞாபகப்படுத்துங்கள். இழைகள் தோன்றத் தோன்ற, அங்கெல்லாம்
>சென்றுவிடுகிறேன்.)
யாரும் ஞாபகப்படுத்தவில்லை.
பரவாயில்லை.
'ஹம்சதூளிகா மஞ்ச'த்தை அந்தக் காலத்துபாணியில்
எழுதப்பட்ட கதைகளில் அடிக்கடி காணலாம். 'பெரிய எழுத்து
விக்கிரமாதித்தன் கதை' போன்றவற்றில் அடிக்கடி வரும்.
'அது ஏதோ ஒரு கட்டில்' என்று சுருக்கமாகச் சொல்லி
விடலாம். அது சரி. அது மஞ்சம். ஆகவே சொல்லமுடிகிறது.
ஆனால் அந்த 'ஹம்சதூளிகா' விஷயம்?
'ஹம்சம்' என்பது அன்னப்பறவையைக் குறிக்கும்.
ஆண் அன்னமும் பெண் அன்னமும் காதல் லீலைகள்
புரிந்து புணர்ந்த சமயத்தில் அவற்றின் மார்புப் பகுதியிலிருக்கும்
மெல்லிய சிறகுகள் உதிருமாம். அவை மிருதுவான ரோமத்தைப்
போன்று விளங்குமாம்.
அன்னத்தின் சிறகுகள் மென்மையானவை; அதிலும்
மார்பின்மேலுள்ள சிறகுகள் இன்னும் மென்மையானவை.
ஆங்கிலத்தில் அதனை 'Down' என்று சொல்வார்கள்.
இவ்வாறு உதிரும் ரோமம் போன்ற சிறகுகளைத்தான்
தூளிகா என்று அழைப்பார்கள். இவ்வாறு அன்னப்புணர்ச்சியின்போது
காத்திருந்து காத்திருந்து, பார்த்திருந்து பார்த்திருந்து, பொறுக்கி
எடுத்துச் சேகரிக்கப்பட்ட தூளிகைகளைப் பட்டுத்துணியைப்
பயன்படுத்தி மெத்தையாகத் தைப்பார்கள். இதில் பலமாதிரியான
வேலைப்பாடுகள் விளங்கும்.
இதுதான் ஹம்சதூளிகா மஞ்சம்.