From jaybee@... Sat May 25 19:58:55 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 26 May 2002 02:58:54 -0000
Received: (qmail 35868 invoked from network); 26 May 2002 02:58:54 -0000
Received: from unknown (66.218.66.218) by m7.grp.scd.yahoo.com with QMQP; 26 May 2002 02:58:54 -0000
Received: from unknown (HELO n10.grp.scd.yahoo.com) (66.218.66.65) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 26 May 2002 02:58:54 -0000
Received: from [66.218.67.189] by n10.grp.scd.yahoo.com with NNFMP; 26 May 2002 02:58:54 -0000
Date: Sun, 26 May 2002 02:58:54 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: andha aappam puLikkum
Message-ID:
In-Reply-To: <3CEFA5B9.38260F4E@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2948
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "jaybee555"
X-Originating-IP: 161.142.105.78
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18246

--- In agathiyar@y..., ஞானவெட்டியான் wrote:
>அன்பு நண்பர் திரு.போசு அவர்கட்கு,
>வணக்கம்.
>செட்டிநாட்டுபக்கம் சீயம் என்று சொல்லும் இனிப்பு உருண்டை
>தான் சூய்யமா? அப்படியெனில் கேள்வி
>"சூய்யமும்,சுசியமும்,சீயமும் ஒன்றா? எது திரிந்து
>நிற்கிறது?" ஆகிறது.



எல்லாமே ஒன்றுதான். அரிசிமாவில் தோய்த்தெடுத்துப்
பொறிக்கப்பட்ட பச்சைப்பயிறு/ஏலக்காய்/உப்பு/சர்க்கரை
ஆகியவற்றின் வேகவைத்த கலவை.
இடத்துக்குத்'தக்கன' அதன் பெயரும் மாறும். அதேபோல
அதன் அளவும் மாறும். சில இடங்களில் அதைச் சிறியதாகவும்
சற்றுக் கடினமாகவும் செய்கிறார்கள். அது கொஞ்சம் அதிக
நாட்கள் கெடாமலிருக்கும். அதனை 'சுகியன்' என்று சொல்வார்கள்.
சற்று யோசிக்கும் வேளையில்(gratis -
Jeyakanthan+Thaayumaanavar) 'சுகியன்'தான் அப்படியெல்லாம்
மாறிவந்துள்ளது என்று தோன்றுகிறது.

டாக்டர் போஸ் குறிப்பிட்டிருக்கும் பலகாரங்கள் இன்னும்
வழக்கில் உள்ளன.

ForumHub-இல் South Indian Cooking
என்னும் பிரிவில் ஹேமந்த் போன்றவர்களுடன் சேர்ந்து நானும்
சிலநாட்கள் இந்தமாதிரி அயிட்டங்களையெல்லாம் விலாவாரியாக
எடுத்து எழுதிக்கொண்டிருந்தோம்.
இப்போது அந்த இழையில் மட்டும் நூற்றுக்கணக்கில்
ரிசிப்பிக்கள் இருக்கும்.
சில பலகாரங்கள்/மிட்டாய்கள், செய்வதற்கு மிகவும்
எளிதானவை.

வரமிளகாய், புளி, உப்பு ஆகிய மூன்றையும் தகுந்த
கலவையாகச் செய்து, சிறிய உரலில் வைத்து இடித்து
எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
காரமிட்டாய் போல இதனை வாயில் உருட்டிப்
போட்டு சப்பிக்கொண்டேயிருக்கலாம். சிலருக்கு வாயூறல்
இருந்துகொண்டேயிருக்கும். அதற்கு இது நல்லது.
இன்னொன்றும்கூட. இது ஒரு Appetiser. வரமிளகாய்
சேர்ந்திருக்கிறதல்லவா?
அகத்திய ஆவணத்திற்குள் நுழைந்து பார்த்தால் இதே
போன்று இஞ்சி சம்பந்தமான சில குறிப்புகளைக் காணலாம்.
மிகுந்த புகழ் பெற்ற இஞ்சி முராப்பாவும்கூட இருக்கிறது.

அன்புடன்

ஜெயபாரதி





>விளக்கத்திற்குக் காத்திருக்கும்
>-ஞானவெட்டியான்
>-திண்டுக்கல்(தமிழ்நாடு)
>
>
>"Dr.P.Chandra Bose" wrote:
>>
>> அய்யோ இன்னும் எத்தனையோ வழக்கொழிந்துவிட்டன.
>>
>> சுசியம், ஓலைக் கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை, பணியாரம், முந்திரிக் கொத்து,
அதிரசம் ஆகிய
>> பலகார வகைகளும், கூழ், களி போன்ற சாப்பாடு வகைகளும் மறைந்து விட்டன; அல்லது மறைந்து
>> கொண்டிருக்கின்றன.
>>
>> சூய்யமும் சுசியமும் ஒன்றா? எது திரிந்து நிற்கிறது.
>>
>> மிக்க அன்புடனும் வருத்தத்துடனும் மற்றும் ஏக்கத்துடனும்
>> நாக்கைச் சப்புக் கொட்டி
>>
>> பெ.சந்திர போஸ்
>> சென்னை.
>>
>> At 04:07 PM 5/24/02 +0800, you wrote:
>> > In agathiyar@y..., "jaybee555" wrote:
>> >
>> >
>> >> பல பலகாரங்கள் காணாமலேயே போய்விட்டன. பெயரைச்
>> >>சொன்னால்கூட தெரியமாட்டாது.
>> >> தமிழகத்திலும் அப்படித்தான் இருக்கும்போல் தோன்றுகிறது.
>> இப்பொழுதைய தலைமுறைக்கு
>> >இதெல்லாம் செய்யத் தெறியாது அல்லது செய்ய நேரமும் பொருமையும் கிடையாது.
>> >
>> >அதேபோல இன்னும் பல...பால் கொழுக்கட்டை சோமாசி, சூய்யன் போன்றவை.
=====================