From suganjb@... Sun May 26 01:07:47 2002
Return-Path:
X-Sender: suganjb@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 26 May 2002 08:07:46 -0000
Received: (qmail 30844 invoked from network); 26 May 2002 08:07:46 -0000
Received: from unknown (66.218.66.218) by m2.grp.scd.yahoo.com with QMQP; 26 May 2002 08:07:46 -0000
Received: from unknown (HELO smtp6.jaring.my) (61.6.32.56) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 26 May 2002 08:07:45 -0000
Received: from user (j32.spt.jaring.my [161.142.105.226]) by smtp6.jaring.my (8.11.4/8.11.4) with SMTP id g4Q87dK15227 for ; Sun, 26 May 2002 16:07:40 +0800 (MYT)
Message-Id: <3.0.3.32.20020526160419.006cf914@...>
X-Sender: suganjb@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sun, 26 May 2002 16:04:19 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: Nambikkai#1 - Re: [agathiyar] Re: No NO It is not just 'yur Nambikkai alone... now scientifically proved strongly..
In-Reply-To:
References:
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=68538591
X-Yahoo-Message-Num: 18256


அன்பர்களே,

At 04:54 AM 5/25/02 -0000, JayBee wrote:
> சுண்ணாம்புக் காளவாயில் ஆளைப்போட்டு, சுற்றிலும் Lime-stone
>என்னும் சுண்ணாம்புக் கற்துண்டுகளைப் போட்டு விடுவார்கள். விறகுகள்
>அவற்றிற்குரிய இடங்களில் இடப்படும். கடைசியில் மேலே மணலையும்
>சுண்ணாம்புக் கற்களை கலந்து மூடிவிடுவார்கள்.
> கீழேயுள்ள விறகுகளைப் பற்றவைத்துவிடுவார்கள். நாட்கணக்கில்
>மெதுவாக எரிந்துகொண்டேயிருக்கும். எரிந்து கொண்டே உட்புறமாகச்
>செல்லும். Lime-stone என்பது Calcium Carbonate. சூடு ஏற்றப்படும்போது
>அது ரசாயனவினைக்கு ஆளாகி, Quick lime எனப்படும் Calcium Oxide
>ஆக மாறிவிடும். உபரி Carbon Dioxide வெளியாகிக்கொண்டிருக்கும்.
> இதன் விளைவாக உள்ளேயிடப்பட்டிருக்கும் ஆளின் உடல்
>மெதுவாக வெந்து, சதையெல்லாம் அரிக்கப்பட்டு, எலும்பு மட்டுமே எஞ்சும்
>நிலையில் இருக்கும். எலும்பும்கூட ரசாயனவினைக்கு ஆளாகிவிட்டிருக்கும்.


இதைப் போன்றதொரு இன்னொரு முறை இருந்தது. அதனை
'துஷாக்னி பிரவேசம்' என்று சொல்வார்கள்.
'துஷம்' என்றால் உமி. நடுவில் ஆள் அமர்ந்திருப்பார். அவரை
அவருடைய கழுத்தளவுக்கு உமியைக் குவித்து மூடிவிடுவார்கள்.
ஓரங்களில் நெருப்பை மூட்டிவிடுவார்கள்.அந்த நெருப்பு மிக மிக மிக
மிக மெதுவாகக் கனன்றுகொண்டே உட்புறமாகச் செல்லும்.

நம்பிக்கை சம்பந்தமாக இன்னொரு கதை.
'துஷாக்னி பிரயோகம்' செய்த ஒரு நபரைப் பற்றிய கதை இது.

குமாரில பட்டர் என்பவர் ஆதிசங்கரர் காலத்தில் வாழ்ந்தவர்.
அந்தக் காலத்தில் வைதிக சமயத்தில் பெரும் பெரும் மாறுதல்கள்
ஏற்பட்டுக்கொண்டிருந்தன.
இரு பிரிவாக வைதிக சமயம் பிரிவுற்றிருந்தது. அவற்றில்
மிக வலுவாக இருந்தது பூர்வ மீமாம்சை என்னும் பிரிவு.
அது, வேதங்களுக்கும் வைதிக கர்மானுஷ்டானங்களுக்கும்
அதிக முக்கியத்துவம் கொடுத்தது. ஒரு மனிதன், தான் செய்யவேண்டிய
யாகம், ஹோமம், பூஜை, சடங்குகள் போன்ற வைதிககர்மாக்களை
மட்டுமே செய்தால் போதும். யோகம், ஞானம் என்று அலட்டிக்கொள்ளக்
கூடாது. தேவர்களுக்குரிய யக்ஞங்களே மனிதனுக்குரிய செயற்பாடுகள்;
கடமை என்று பூர்வமீமாம்சை வலியுறுத்தியது.
உபநிஷதங்கள் சொல்கிற ஞான மார்க்கம் என்பது செல்வாக்கு
இழந்துபோனது.
ஞானமார்க்கத்தை வலியுறுத்தி வந்தவர். ஆதி சங்கரர். ஞான
மார்க்கத்தை ஞான காண்டம் என்றும் உத்தர மீமாம்சை என்றும்
சொல்வார்கள்.
கர்மகாண்டமாகிய பூர்வமீமாம்சையின் முக்கிய குருவாக
குமாரில பட்டர் என்ற பெரியவர் இருந்தார். அவர் பூர்வமீமாம்சையை
ஒருங்குபடுத்தி, வலுவானதாக்கி செல்வாக்குடையதாக ஏற்படுத்தி
விட்டார். அவர் பெயரால் 'பாட்ட மதம்' என்ற மதம்கூட நிலவியது.
அவருடைய இளமைக் காலத்தில், அவர் வாழ்ந்த வட
இந்தியாவில் பௌத்த மதமே பெரும்செல்வாக்கு மிகுந்து விளங்கியது.
அப்போது 'தாந்த்ராயனம்' போன்ற முறைகளும் Logic எனப்படும்
தர்க்க நூல் முறைகளும் அவர்களுக்கு அத்துப்படியாக விளங்கின.
அவற்றில் அவர்களே திறமையானவர்களாக விளங்கினார்கள்.
அவர்களைத் தோற்கச்செய்யவேண்டுமானால், அவர்களுடைய
நுணுக்கங்களை அறிந்துகொள்ளவேண்டும். வெளியார்களுக்கு
அவர்களின் ரகசியங்களைச் சொல்லிக்கொடுப்பதில்லை. அதற்கு
அவர்களில் ஒருவனாகச் சென்று அவர்களிடமேயிருந்து
கற்றுக்கொண்டால் மட்டுமே முடியும்.
ஆகவே குமாரில பட்டர் தம்மை ஒரு பௌத்தனாக
மாற்றிக்கொண்டு பௌத்தத்தின் தலைமை குருவிடம் சென்று
சீடராகச்சேர்ந்தார்.

அன்புடன்

ஜெயபாரதி

==========================