From suganjb@... Sun May 26 01:16:28 2002
Return-Path: X-Sender: suganjb@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 26 May 2002 08:16:27 -0000
Received: (qmail 34019 invoked from network); 26 May 2002 08:16:27 -0000
Received: from unknown (66.218.66.217) by m2.grp.scd.yahoo.com with QMQP; 26 May 2002 08:16:27 -0000
Received: from unknown (HELO smtp6.jaring.my) (61.6.32.56) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 26 May 2002 08:16:26 -0000
Received: from user (j32.spt.jaring.my [161.142.105.226]) by smtp6.jaring.my (8.11.4/8.11.4) with SMTP id g4Q8GGK15748 for ; Sun, 26 May 2002 16:16:21 +0800 (MYT)
Message-Id: <3.0.3.32.20020526161259.006de934@...>
X-Sender: suganjb@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sun, 26 May 2002 16:12:59 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Nambikkai#2 - Re: [agathiyar] Re: No NO It is not just 'yur Nambikkai alone... now scientifically proved strongly..
In-Reply-To: <3.0.3.32.20020526160419.006cf914@...>
References: Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=68538591
X-Yahoo-Message-Num: 18257
At 04:04 PM 5/26/02 +0800, JayBee wrote:
அன்பர்களே,
ஆகவே குமாரில பட்டர் தம்மை ஒரு பௌத்தனாக
மாற்றிக்கொண்டு பௌத்தத்தின் தலைமை குருவிடம் சென்று
சீடராகச்சேர்ந்தார்.
பட்டருடைய அறிவின் கூர்மைக் கண்டு, பௌத்தகுரு
தம்முடைய ரகசிய நுணுக்கங்களையெல்லாம் கற்றுக்கொடுத்துவிட்டார்.
நாளடைவில் பட்டரின்பேரில் அந்த மகாகுருவுக்குs சந்தேகம்
ஏற்பட்டது. மற்ற சீடர்களும் கவனித்தார்கள். பின்னர் ஒரு நாள்
அவரிடம் பேசிக்கொண்டேபோய் தம்முடைய விஹாரத்தின்
ஏழாவது மாடிக்கே அழைத்துச்சென்று, அங்கிருந்து பட்டரைப்
பிடித்துத் தள்ளினார்கள்.
அவர் ஏழாவது மாடியிலிருந்து விழலானார். அவ்வாறு அவர்
விழுந்துகொண்டிருக்கும்போது அவர் ஒரு சபதம் எடுத்தார்.
"வேதமே பிரமாணமானால் எனக்கு ஒன்றுமே நேரக்கூடாது."
கீழே தரையில் வந்து விழுந்தார்.
உடலுக்கு ஒன்றும் ஆகவில்லை - கிட்டத்தட்ட.
ஆனால் ஒரு கண்ணில் சிறிய கல்லொன்று குத்திக்
கண் போயிற்று.
அப்போது அவர் வேதமாதாவிடம் கேட்டார்.
"உன் மேல் ஆணையிட்டுக்கொண்டுதானே விழுந்தேன்? அப்படியும்
ஏன் இவ்வாறு கண் போயிடச்செய்தாய்?"
வேதமாத பதில் சொன்னாள்:
"குமாரில பட்டா! நீ விழும்போது என்ன சொன்னாய்?
'வேதம் என்பது பிரமாணமானால்....' என்றுதானே? அப்படியென்னும்போது
உனக்கே வேதம் பிரமாணன் என்பதில் முழுநம்பிக்கையில்லை.
'பிரமாணமானால்' என்றுதானெ சொல்கிறாய். நீ அறுதியிட்டுச்
சொல்லியிருக்கவேண்டியது, இப்படி:
"வேதம்தான் பிரமாணம். ஆகவே எனக்கு ஒன்றும் நேரக்கூடாது".
அப்படிச்சொல்லியிருந்தால் இம்மியளவும் சந்தேகமில்லாமற் சொன்னதாக
இருந்திருக்கும்.
அந்தச் சிறிய சந்தேகம் இருப்பதுபோல் தொனித்ததாலேயே
ஒரு கண் போயிற்று. ஆனாலும் உன் உடலும் உயிரும் காப்பாற்றப்பட்டு
விட்டன".