From naga ganesan@... Sun May 26 06:31:25 2002
Return-Path: Received: (qmail 48790 invoked from network); 26 May 2002 13:31:25 -0000
Received: from unknown (66.218.66.216) by m1.grp.scd.yahoo.com with QMQP; 26 May 2002 13:31:25 -0000
Received: from unknown (HELO n30.grp.scd.yahoo.com) (66.218.66.87) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 26 May 2002 13:31:24 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [66.218.67.166] by n30.grp.scd.yahoo.com with NNFMP; 26 May 2002 13:31:24 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 26 May 2002 13:31:23 -0000
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 26 May 2002 12:38:34 -0000
Received: (qmail 36487 invoked from network); 26 May 2002 12:38:34 -0000
Received: from unknown (66.218.66.216) by m10.grp.scd.yahoo.com with QMQP; 26 May 2002 12:38:34 -0000
Received: from unknown (HELO n4.grp.scd.yahoo.com) (66.218.66.88) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 26 May 2002 12:38:34 -0000
Received: from [66.218.67.156] by n4.grp.scd.yahoo.com with NNFMP; 26 May 2002 12:38:34 -0000
Date: Sun, 26 May 2002 12:38:34 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: vaNDum pUvum (Re: MallikArjun & BhramarAmbA)
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 4455
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 216.88.65.193
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 18261
--- In agathiyar@y..., "sarabeswar" wrote:
> ரீங்காரம் என்ற சொல்லின் வேர் தேடினால்
> பிரமராம்பிகையின் பெயர் விளங்கலாம்.
> அப்பெயர் சுட்டுவது அண்டத்தின் வண்டல்ல;
> மந்திர வண்டது!
>
அன்பு குமார்,
வணக்கம். ரீங்காரம் என்பது ஒலிக்குறிப்பிலிருந்து விளைந்த சொல்.
பாரதியார் பிரமராம்பா என்பதை அழகாக விளக்கியிருக்கிறார். ஆனால் முற்காலத்தில் இருந்ததா?
என்பதைப் பார்த்து என்மடல் எழுதியிருந்தேன்.
வேதங்கள் என்ன சொல்கின்றன என்று metaphorical-ஆகப் பார்த்து இன்று
ஹிந்து ஞானியர் (உ-ம்: சுவாமி விவேகானந்தர்) இன்று எழுதுவதும், அன்றைய ( 3000-2000 வருடம் முன்னர்)
சமூக காலச் சூழலைக் காட்டும் காலக் குறிப்புகளை ஆய்வதும் பெரிதும் வேறுபடுகிறது.
மருதீசர் (-arjunam) என்ற பெயர் ஆதியர்ஜுனம் (மத்தியார்ஜுனம் = திருவிடைமருதூர்,
வெகு தெற்கே புடார்ஜுனம் = திருப்புடைமருதூர்) என்று ஸ்ரீசைலம் அழைக்கப்பட்டு
மற்றைய மருதூர்களோடு எப்போதும் தொடர்புபடுத்துதலாலும், வண்ணான் - மண்ணான்,
வீசை-மீசை, ... என்பதுபோல வெள்மருது மல்லிகார்ஜுனம் ஆகும்போது,
மல்லிகையைச் சுற்றிவருவதாகப் பொருள் கொள்வது எளிது.
ஆனால், பழைய தேவி சம்பந்தமான நூல்களில், அவள் மாலையிலிருந்து
வண்டுகளை அனுப்பி அசுரனைக் கொன்றதாக உள்ளது காட்டியிருந்தேன்.
ராணி ஈ கூடக் கூட்டில்தான் இருக்கும்.
-------------
வேதங்களில் மாட்டினிறைச்சி உண்பது வெகுவாகப் பேசப்படுகிறது.
தற்போது அவ்வழக்கம் மாறியிருக்கிறது. அதனால், metaphorical
ஆக அதை விளக்குவதும் உண்டு. அதனை அவ்வாறு மாற்றத்
தமிழ்க் கலாசாரம் பெருமளவில் உதவியிருக்கவேண்டும்.
பேரா. துவிஜேந்திர நாராயண ஜா (டெல்லிப் பல்கலை) அண்மையில் ஒருபுத்தகம்
எழுதியிருக்கிறார். The myth of the Holy cow என்பது பெயர்.
www.amazon.com-ல் வாங்கலாம். அப்புத்தகத்தில் எனக்கும் பேரா. ஜா
நன்றி பாராட்டியுள்ளார். ஹிந்துத்வா மக்கள் அப்புத்தகம் இந்தியாவிலிருந்து
நீக்க முயன்றனர். பிறகு தடை நீக்கப்பட்டுள்ளது. தென் இந்தியா
பற்றி பேரா. ஜா சிலபிழைகளைச் சொல்கிறார். அவைபற்றி
வேறு இடங்களில் பேசவேண்டும்.
----------------------------------
metaphorical-க்கு வருவோம். அண்மையில் நண்பர் லாஸ் ஏஞ்சலஸ்
ராம் அவர்களை லாஸ் ஏஞ்சலஸில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
என்னை மாலிபு கோயிலுக்கு அழைத்துச் சென்றார்.
அவரது அருமையான கவிதைத் தொகுதியைப் பரிசளித்தார்.
நல்ல பல கவிதைகள். அருமையான கவிஞர். அதில் பிராமணன் என்னும் கவிதையை,
பேரா. ஜா அவர்கள் புத்தகத்துடன் படித்திடல் வேண்டும்.
அப்போது, தமிழ்ப்பண்பாடு எப்படி மாற்றங்களைச் செய்யத் தூண்டுகோலானது
என்பது புலப்படும்.
அன்புடன்,
நா. கணேசன்
In agathiyar@y..., "naga_ganesan" wrote:
>
> முன்னொரு இழையில் சிவானந்தலகரி தமிழ்/வடமொழி இரு இலக்கிய
> மரபுக்கும் எவ்வாறு மாறியிருக்கிறது என்று கண்டோம்.
> வண்டை ஆண்களுக்கும் மலரைப் பெண்களுக்கும் ஒப்பிடுவது
> இலக்கிய மரபு. கனகதாரை ஸ்தவத்திலும், லக்ஷ்மியை வண்டாக்குவதில்லை.
> அவள் பார்வை வண்டு அங்குமிங்கும் சுற்றுவதுபோல் உள்ளது
> என்கிறார் சங்கரர்:
> http://groups.yahoo.com/group/agathiyar/message/15612
>
> எனவேதான், வண்டுவார்கண்ணி- வெள்ளைமருதீசர் என்னும் ஸ்வாமி-அம்பாள்
> நாமங்கள் காலப்போக்கில் ஸ்ரீசைலத்தில் மாறியதோ என்றும்
> மேற்சுட்டியில் வினவியிருந்தேன்.
>
> பண்டைய சமுதாயம் ஆணாதிக்கம் மிக்கது. அதில் வண்டாக ஆண்
> பல மலர்களுக்கும் சென்றுவருவான் என்பது இலக்கியம்.
> உ-ம்: கோவலன் சிலம்பில்.
> http://groups.yahoo.com/group/agathiyar/message/15697
> http://groups.yahoo.com/group/agathiyar/message/15647
>
> ஆணாக வண்டு என்பதை மஹாகவி காளிதாஸரும் உபயோகிக்கிறார்:
>
> சாகுந்தல நாடகக் காட்சியை மோனியர்-வில்லியம்ஸ் translation:
>
> " A bee hovers round Shakuntala's face and the maiden in annoyance
> tries to drive it away. The king already drunk with love of
> Shakuntala speaks in envy of the circling bee:
>
> Where'er the bee his eager onset plies,
> Now here, now there, she darts her kindling eyes:
> Ah! Happy bee! How boldly dost thou try
> To steal the lustre from her sparkling eye;
> And in thy circling movements hover near
> To murmur tender secrets in her ear;
> Or as she coyly waves her hand, to sip
> Voluptuous nectar from her lower lip !
> While rising doubts my heart's fond hopes destroy,
> Thou dost the fullness of her charms enjoy."
>
> அன்புடன்,
> நா. கணேசன்