From suganjb@... Sun May 26 08:26:31 2002
Return-Path: Received: (qmail 51333 invoked from network); 26 May 2002 15:26:31 -0000
Received: from unknown (66.218.66.216) by m6.grp.scd.yahoo.com with QMQP; 26 May 2002 15:26:31 -0000
Received: from unknown (HELO n12.grp.scd.yahoo.com) (66.218.66.67) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 26 May 2002 15:26:31 -0000
X-eGroups-Return: suganjb@...
Received: from [66.218.67.164] by n12.grp.scd.yahoo.com with NNFMP; 26 May 2002 15:26:31 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 26 May 2002 15:26:29 -0000
X-Sender: suganjb@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 26 May 2002 15:25:42 -0000
Received: (qmail 42246 invoked from network); 26 May 2002 15:25:42 -0000
Received: from unknown (66.218.66.217) by m12.grp.scd.yahoo.com with QMQP; 26 May 2002 15:25:42 -0000
Received: from unknown (HELO smtp4.jaring.my) (61.6.32.54) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 26 May 2002 15:25:41 -0000
Received: from user (j46.spt2.jaring.my [161.142.105.120]) by smtp4.jaring.my (8.11.4/8.11.4) with SMTP id g4QFPc816266 for ; Sun, 26 May 2002 23:25:39 +0800 (MYT)
Message-Id: <3.0.3.32.20020526232225.006dacac@...>
X-Sender: suganjb@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sun, 26 May 2002 23:22:25 +0800
To: "agathiyar@yahoogroups.com" Subject: Nambikkai#3 - A Book's Story
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=68538591
X-Yahoo-Message-Num: 18263
அன்பர்களே,
நம்பிக்கையைப் பற்றியும் holistic healing பற்றியும்
மேலும் பேசுமுன், இங்கு இன்னொரு விஷயத்தையும்
சொல்லவேண்டியிருக்கிறது.
டாக்டர் ஏ.வி.ஜெய்ச்சந்திரன் என்னுடைய mentor-ஆக
இருந்தவர். இப்போது நான் பலருக்கு இருப்பதுபோல எனக்கு
அவர்.
ஒருநாள் மதுரையில் மேலமாசி வீதி, வடக்கு மாசிவீதி
சந்திப்பின் அருகிலிருக்கும் மதுரை ஹிக்கின்ஸ்பாதம்ஸ் புத்தகக்
கடைக்குக் கூட்டிச்சென்றார்.
ஸ்ரீதேவீ மாஹாத்ம்யம், கனகதார ஸ்தோத்திரம் போன்ற
சில புத்தகங்களை வாங்கச்சொல்லி இட்டுச்சென்றார்.
அப்போது திடீரென்று ஒரு பச்சை நிறப்புத்தகத்தை
எடுத்து என் கையில் திணித்து, "அதெல்லாம் படிக்கறதுக்கு
முன்னால மொதல்ல்ல இதப் படிச்சுருங்கோ. This is a
unique book, Bharathi. There is none like this", என்றார்.
வாங்கிப்பார்த்தேன்.
'Think and Grow Rich - by Napoleon Hill' என்ற தலைப்பு.
"Boss! I don't want to get rich. You know that?" என்று
புரியாமல் கேட்டேன். ஏனெனில் ஆன்மீக விஷயங்களைப் பற்றியும்
வரலாறு போன்றவற்றையும் அறிந்து, அந்தத் துறைகளில் ஆழமாகச்
செல்லவேண்டும் என்ற நோக்கம் இருந்தது. பணம், அந்த மாதிரியான
தேடலுக்கும் பக்குவத்திற்கும் தடங்கலாக இருக்கும் என்று நம்பி
வந்தேன். (அந்தக் கெட்ட பழக்கம் இன்றளவும் இருந்துகொண்டிருக்கிறது.)
'வாழ்க்கைக்கு உரிய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும்,
ஆராய்ச்சிகள் செய்வதற்கு உரிய செலவுகளை ஈடுகட்டவும்,
பிணி தீர்க்கும் புனிதப் பணியை மேற்கொள்வற்காகவுமே மருத்துவத்
தொழில்', என்ற உறுதி என்னுள் ஆழமாகப்பதிந்திருந்தது. மதுரைக்கு
அருகிலிருந்த காந்தி கிராமம், சர்வோதயா இயக்கம் போன்றவற்றின்
தாக்கமும் ஒரு பெரிய காரணம். இவற்றுடன் ஆன்மீக வேட்கையும்
சேர்ந்துகொண்டது. 'How to Die a Poor Fool' என்ற தலைப்பில்
வேண்டுமானால் ஆராய்ச்சி நூலெழுதி ட்ரிப்பல் டாக்ட்டரேட்
வாங்கலாம் போல.
டாக்டர் ஜெயச்சந்திரன் சொன்னார்:
"பாரதி, நீங்க நினைக்கிறாப்போல இல்லை. இந்தப்
புத்தகம் வேற தினுசு. நீங்க வாங்கிப் படியுங்கோ. அதுல ஒங்க
ஆன்மீக ஜர்னிக்கு வேண்டிய விஷயமெல்லாமே நெறய இருக்கு.
It just needs a different mode of application, Bharathi. You will
understand all this, later."
வாங்கி வைத்துக்கொண்டேன்.
ஆனால் படிக்கவில்லை.
அதற்குரிய வேளை வந்தது......
பம்பாயைச்சேர்ந்த ஒரு சீக்கியர் உருவத்தில்.