From ramnrom@... Sun May 26 16:30:14 2002
Return-Path:
Received: (qmail 68308 invoked from network); 26 May 2002 23:30:14 -0000
Received: from unknown (66.218.66.218) by m10.grp.scd.yahoo.com with QMQP; 26 May 2002 23:30:14 -0000
Received: from unknown (HELO n21.grp.scd.yahoo.com) (66.218.66.77) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 26 May 2002 23:30:14 -0000
X-eGroups-Return: ramnrom@...
Received: from [66.218.67.185] by n21.grp.scd.yahoo.com with NNFMP; 26 May 2002 23:30:13 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 26 May 2002 23:30:13 -0000
X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 26 May 2002 18:21:07 -0000
Received: (qmail 17344 invoked from network); 26 May 2002 18:21:07 -0000
Received: from unknown (66.218.66.217) by m11.grp.scd.yahoo.com with QMQP; 26 May 2002 18:21:07 -0000
Received: from unknown (HELO n16.grp.scd.yahoo.com) (66.218.66.71) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 26 May 2002 18:21:07 -0000
Received: from [66.218.67.129] by n16.grp.scd.yahoo.com with NNFMP; 26 May 2002 18:21:07 -0000
Date: Sun, 26 May 2002 18:21:06 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Elley Ram's Kavidhai
Message-ID:
In-Reply-To: <3.0.3.32.20020526213557.006d8e10@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3770
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "ramnrom"
X-Originating-IP: 4.35.187.102
X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Profile: ramnrom
X-Yahoo-Message-Num: 18269

அகத்திய நண்பர்களே,

சில வாரங்களாகவே தபால் பெட்டி நிரம்பி வழிந்து விட்டபடியாலும், கடினமான நேரமி
ன்மையாலும் அகத்தியக் கடிதங்களை நான் பார்க்க முடியாமல் போனதில் வருத்தமே அதி
கம்.

என்னுடைய 'ப்ரிய ஸகி' தொகுப்பிலிருந்து 'இன்றைய பிராமண'னை எடுத்து இங்கே
போடப்படிருப்பதாக இன்று காலை தனி மின்னஞ்சல் மூலம் அறிந்தேன். அதை எடுத்துப்
போட்டிருக்கும் பெரியவர் ஜெயபாரதி மூலமே அதை அறிந்தேன். அந்தப் பிரதியில் சில
தட்டச்சுப் பிழைகளைக் கண்டதால், என்னுடைய சரியான பிரதியை இங்கே தந்திருக்கி
றேன்.

முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டும். அந்தக் கவிதையை நான் எழுதிய சூழல், அமெரி
க்காவில், சில வருஷங்கள் முன்னர். அதுவும் ஒரு விருந்தில், புலம்பெயர்ந்த சில பி
ராமண நண்பர்கள் 'barbecue'வில் மாட்டைச் சுட்டுத் தின்னுவது கண்டபோது.

நான் எழுதியது சரியோ, தவறோ, அந்த நேரத்திய உணர்ச்சி வடிவே அது. யாரையும்
புண்படுத்த வேண்டி அல்ல. அந்த நண்பர்கள் இன்னமும் நல்ல, இனிய நண்பர்களே.

இன்றைய பிராமணன்
-------------------------

'வேதம் படித்தவன்
விவேகம் நிறைந்தவன்
ஓதாமல்
ஒருநாளும் இல்லாதவன்
சதா
பரம்பொருளைப் பாடுபவன்'

'மோட்சத்தை நாடுபவன்
அட்சய பாத்திரத்தோடு
உஞ்சவிருத்தி செய்து
பஞ்சத்தைப் போக்குபவன்'

'யோக ஷேமத்துக்காக
யாகம் செய்பவன்
சரணாகதித் தத்துவத்தை
தரணியெல்லாம் சொல்லித் தந்தவன்'

'கொன்றெதுவும் தின்னாமல்
கன்றையும் பசுவையும்
தாயெனப் போற்றியவன்
மாய வலையில் விழாதவன்'

'முனிவனாய் நல்லாசிரியனாய்
கனியிருப்பக் காய் கவறாமல்
தனி ஒரு நீதி வளர்த்தான் -- தர்மமே
மனு எனப் பெயர் கொடுத்தான்'

'கங்கையிலும் காவிரியிலும்
பாவங்களைக் கழுவினான்
ஆங்காங்கே கோயில்கள் எழுப்பி
ஹிந்து மதத்தை நிலைநிறுத்தினான்'

இப்படித்தான் பிராமணன்
ஒருகாலத்தில்
இங்கே வாழ்ந்து வந்தான்

கலியின் கொடுமையினால்
தானோ என்னவோ
பலியாகிவிட்டான்
வழுக்கி விழுந்து விட்டான்

ஆண்டாண்டாய்க் கட்டிக்காத்த
தன்மையை விட்டுவிட்டான்
கண்மூடித் திறப்பதற்குள்
சண்டாளனாய் மாறிவிட்டான்
பெண்டாளக் கிளம்பிவிட்டான்

தர்மத்தின் காவலன்
புரவலவரைப் பாடும் புலவன் -- இங்கே
எருமைத் தசை தின்கின்றான்
கருவையே கலைக்கின்றான்

ஊதாமல் ஒருநாளும் இருப்பதில்லை
மது இல்லாமல்
மதி வேலை செய்வதில்லை
சதிகாரனாய் ஆய்விட்டான்

கோபத்தில்
ஷத்திரியனையும் மிஞ்சிவிட்டான்
காசு சேர்ப்பதில்
வைசியனையும் பின் தள்ளிவிட்டான்
ஆத்திரம் கொண்டிங்கே பிராமணன்
சூத்திரனையும் சேர்த்திங்கே
அழித்துவிட்டான்

நல்வாழ்க்கை முறை ஒன்றாலேயே
பலசாலியாய் வாழ்ந்த பார்ப்பனன்
குலதர்மம் விட்டுவிட்டான்
பலாபலன்கள் பார்ப்பதை
நிறுத்திவிட்டான்

ஆசிரியனாய்
அனைவர்க்கும் சொல்லித்தந்த
பிராமணன்
சிரிப்பாய்ச் சிரித்து
நெருப்பில் விழுந்துவிட்டான்

அக்னி ஹோத்ரம் செய்து வைத்தான்
அனைவர்க்கும் ஒருகாலம்
அக்னியில் மாட்டைச் சுட்டு
தின்கின்றான் இக்காலம்

அய்யரென்றால் மெய்ஞானி
என்றிருந்தது போய்
பொய்யரென்றும் புலையரென்றும்
பெருங்காயம் வைத்த
வெறும் பாண்டமென்றும்
அலைகின்றார் இன்று
ஐயோ பாவம்!

பஞ்சகச்சம் வைத்துக்கட்டி,
அஞ்சி அஞ்சி நடந்து
வேதம் ஓதி
விதி பற்றி பயந்திருந்த பிராமணன்
கஞ்சிக் கவலையினால்,
காமத்தால், காசுமோகத்தால்
எஞ்சியிருந்த எல்லாப் பண்புகளையும்
காற்றில் பறக்கவிட்டான்

நதிக் கரையில் விதி பற்றி சர்ச்சை செய்து
கதி பற்றி
காம்ய மோட்சம் பற்றிக்
கவலைப் பட்ட பிராமணன்
சதி செய்து கெடுக்கின்றான்
தீ மதி பெற்றுத்
திரிகின்றான்
துதி செய்து வாழ்கின்றான்
துஷ்டர்களை மட்டும்


------------("ப்ரிய ஸகி" தொகுப்பிலிருந்து 'இன்றைய பிராமணன்')

அன்புடன்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்



--- In agathiyar@y..., JayBee wrote:
>
> அன்பர்களே,
>
> நாக கணேசன் மடலில் குறிப்பிடப்பட்டிருக்கும்
> எல்லேய் ராமின் கவிதைத் தொகுப்பாகிய 'ப்ரியசகி'
> நூலில் காணப்படும் 'இன்றைய பிராமணன்' என்னும்
> கவிதையைக் கீழே காணலாம்.
>
> நாக கணேசன், எல்லேய் ராம் ஆகிய இருவரின்
> கருத்துக்களிலிருந்தும் நான் மாறுபடுகின்றேன்:-)